விஜய் - சீமான் 
அரசியல்

சீமானின் தொடர் தாக்குதல்… பனையூரில் கட்சி நிர்வாகிகளுடன் அவசர மீட்டிங் போடும் விஜய்!

''விஜய்க்கு வரலாறே தெரியாது, தமிழ்த்தேசியமும் திராவிடமும் ஒன்றல்ல, கூமுட்டை'' என விஜய்யின் கொள்கைகளை விமர்சித்து கடுமையாக பொதுக்கூட்டத்திலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் பேசிவருகிறார் சீமான்.

Jeeva

கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டில் கொள்ளைகளை விளக்கிப் பேசியதுமுதல் தமிழ்நாடு அரசியலே பரபரப்பாகியிருக்கிறது.

முதலில் விஜய்யின் பேச்சுக்கு திமுக கூட்டணி சார்பில் இருந்து திருமாவளவன், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரின் எதிர்வினை வந்த நிலையில், முதல் மூன்று நாட்களுக்கு அமைதி காத்த சீமான் கடந்த இரண்டு நாட்களாக விஜய்யை இறங்கி அடிக்கிறார்.

சீமான்

''விஜய்க்கு வரலாறே தெரியாது, தமிழ்த்தேசியமும் திராவிடமும் ஒன்றல்ல... ஒன்னு இந்தப்பக்கம் நில்லு, இல்லைனா அந்தப் பக்கம் நில்லு... நடுவுல நின்னா அடிபட்டு செத்துடுவ, கூமுட்டை'' என விஜய்யின் கொள்கைகளை விமர்சித்து கடுமையாக பொதுக்கூட்டத்திலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் பேசிவருகிறார் சீமான்.

முதலில் ''என் தம்பி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்'' என்ற சீமான், விஜய்யோடு கூட்டணி போடவும் தயாராக இருந்தார். ஆனால், திடீரென விஜய்யின் போக்கு தனிப்பாதையை நோக்கிப் போவதையும், மாநாட்டில் தன்னை மறைமுகமாக விமர்சித்ததையும் கண்டுகொண்ட சீமான் விஜய் மீதான தாக்குதலைத் தொடங்கியிருக்கிறார்.

அதனால், தற்போது சீமானை எதிர்கொள்வது குறித்தும், கட்சியினர் தவெக-வுக்கு எதிரான விமர்சனங்களுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்பது குறித்தும் நிர்வாகிகளை சந்தித்துப்பேச இன்று அவசர கூட்டம் கூட்டியிருக்கிறார் விஜய். பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளில் இந்த அவசரக்கூட்டம் நடைபெற இருக்கிறது!