விஜய் 
அரசியல்

விஜய்யின் முக்கிய அறிவுறுத்தல்: ‘’பாதுகாப்பே முக்கியம்… மாநாட்டுக்கு பைக்கில் வர வேண்டாம்’’

''உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும். '' - விஜய்

Jeeva

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை முன்னிட்டு, தனது ஆதரவாளர்களை பாதுகாப்பாக மாநாட்டுக்கு வருமாறு நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவுறுத்தலை எழுதியிருக்கும் விஜய்யின் நோக்கம் அவரது ஆதரவாளர்களின் பாதுகாப்பையும், பொதுமக்களுக்கான நலனையும் உறுதிப்படுத்துவதே ஆகும்.

‘’பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். 

விஜய்


இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, 

மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும். 

நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்’’ என்று எழுதியிருக்கிறார் விஜய். இதுவரை கட்சி தொடர்பான அறிக்கைகளை தனது இன்னொரு பக்கமான TVKVijay பக்கத்தில் வெளியிட்டு வந்த விஜய், முதல் முறையாக actorvijay ஐடியில் இருந்து இந்த ட்வீட்டை வெளியிட்டிருக்கிறார்.