#INDvNZ 
விளையாட்டு

12 ஆண்டுகளில் சொந்த மண்ணில் முதல் தோல்வி… நியூஸிலாந்திடம் தொடரை இழந்த இந்திய கிரிக்கெட் அணி! #INDvNZ

2012-ம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது இந்தியா. பெங்களூரு, புனே என தொடர்ந்து இரண்டு டெஸ்ட்களிலும் இந்திய அணிக்கு அவமானகரமானத் தோல்வியைப் பரிசளித்ததோடு தொடரையும் வென்றிருக்கிறதது நியூஸிலாந்து.

News Tremor Desk

டாம் லாதம் தலைமையிலான நியூஸிலாந்து இந்தியாவின் ரோஹித் ஷர்மா தலைமையிலான அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பெங்களூருவில் நடந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்தியா வெறும் 46 ரன்களுக்குள் சுருண்டது. அந்த டெஸ்ட்டிலும் தோல்வியைச் சந்தித்தது. இதற்கிடையே புனேவில் நேற்று முன்தினம் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து 259 ரன்கள் அடிக்க, இந்தியா முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த பிட்சில் இரண்டாவது இன்னிங்ஸிலும் நியூஸிலாந்து 255 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு 359 ரன்கள் என்கிற டார்கெட்டைக் கொடுத்தது.

#INDvNZ

ஜெய்ஸ்வாலும், கில்லும் நல்ல அடித்தளம் அமைத்தாலும் அதன்பிறகு வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் மூன்றாவது நாளிலேயே ஆட்டம் முடிந்துவிட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, நியூஸிலாந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறது.

நியூஸிலாந்தின் ஆல் ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களும் எடுத்து அசத்தியிருக்கிறார். 

கெளதம் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றபின், அதுவும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது.