விளையாட்டு

சென்னை டெஸ்ட் LIVE : 4 விக்கெட்களை இழந்த வங்கதேசம்... இந்தியாவை வீழ்த்த 357 ரன்கள் தேவை!

இந்தியா வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.

News Tremor Desk

இந்தியா முதல் பேட்டிங்!

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஜ்மல் ஹுசேன் ஷான்ட்டோ இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்திருக்கிறார். ஸ்பின்னுக்கு சாதகமான பிட்ச்சில் இந்தியா மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், அஷ்வின், ஜடேஜா என இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்கியிருக்கிறது. அக்சர் பட்டேல் அணியில் இல்லை.

ரோஹித் - ஜெய்ஸ்வால் ஓப்பனிங்

வலது கை, இடது கை காம்பினேஷனாக கேப்டன் ரோஹித் ஷர்மாவும், ஜெய்ஸ்வாலும் ஓப்பனிங் இறங்கியிருக்கிறார்கள்.

பாகிஸ்தானை வென்ற வங்கதேசம்!

பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று அட்டாக்கிங் மோடில் விளையாடிவருகிறது வங்கதேசம். டஸ்கின் அஹமத், ஹசன் மஹ்முத், நஹித் ரானா என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களையும், ஷகிப் ஹசன், மெஹிதி ஹசன் மிராஜ் என இரண்டு ஸ்பின்னர்களையும் அணிக்குள் வைத்திருக்கிறது வங்கதேசம்.

இந்தியாவின் 6 பேட்ஸ்மேன், 5 பெளலர் லைன் அப்!

இந்தியாவைப் பொறுத்தவரை  ஜெய்ஸ்வால், ரோஹித், ஷுப்மன் கில், கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட் என ஆறு பேட்ஸ்மேன்களை லைன்அப்பில் வைத்திருக்கிறது. ஜடேஜா, அஷ்வின், பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ் என ஐந்து பெளலர்களை அணிக்குள் வைத்திருக்கிறது.

ரோஹித் ஷர்மா அவுட்!

இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா ஹசன் முகமது பந்தில் எட்ஜாகி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்திய கேப்டனின் கேட்சை வங்கதேச கேப்டன் ஷான்டோ பிடிக்க இந்தியா 14 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருக்கிறது. ரோஹித் ஷர்மா 6 ரன்களில் அவுட் ஆனார்.

ஒன் டவுன் பேட்ஸ்மேனாக ஷுப்மன் கில்!

ரோஹித் ஷர்மா அவுட் ஆனதால் ஒன் டவுன் பேட்ஸ்மேனாக ஷுப்மன் கில் களமிறங்கியிருக்கிறார்.

ஷுப்மன் கில் டக் அவுட்!

ஷுப்மன் கில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். 8 பந்துகளை சந்தித்த கில் ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆக இந்தியா 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. விராட் கோலி களத்தில் இறங்க இருக்கிறார்!

8 மாதங்களுக்குப் பிறகு கோலி!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 மாதங்களுக்குப் பிறகு விராட் கோலி இன்று சென்னையில் களம் இறங்கியிருக்கிறார். வங்கதேசத்துக்கு எதிராக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் கோலி இரட்டை சதம் அடித்திருக்கிறார். இன்று சென்னையில் இரட்டை சதம் அடிப்பாரா?!

விராட் கோலி அவுட்!

ஹசன் மொஹ்மத் மூன்றாவது விக்கெட்டாக விராட் கோலியை அவுட் ஆக்கியிருக்கிறார். 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து கோலி அவுட்டாக இந்தியா 34 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருக்கிறது. ஜெய்ஸ்வால் மட்டும் 17 ரன்களில் நிதானமாக ஆடிவருகிறார்.

களத்தில் ரிஷப் பன்ட்!

கோலி அவுட் ஆனதால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட் களத்தில் இறங்கியிருக்கிறார். கே.எல்.ராகுல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பன்ட் களமிறங்கியிருக்கிறார்.

ஜெய்ஸ்வால் - பன்ட் கூட்டணி 50

சடசடவென சரிந்த விக்கெட்களால் நிலைகுலைந்த இந்தியாவின் பேட்டிங்கை ஜெய்ஸ்வாலும், பன்ட்டும் காப்பாற்றியிருக்கிறார்கள். ஜெய்ஸ்வால் - பன்ட் பார்ட்னர்ஷிப் 50 ரன்களைக் கடந்திருக்கிறது. மதிய இடைவேளைக்கு முன்பாக இந்தியா 3 விக்கெட்களை இழந்து 86 ரன்களில் ஆடிக்கொண்டிருக்கிறது!

பன்ட்டை இழந்த இந்தியா 100 ரன்களைக் கடந்தது!

வங்கதேசத்துக்கு எதிரான சென்னை டெஸ்ட்டில் இந்தியா 100 ரன்களைக் கடந்திருக்கிறது. இந்தியாவின் 4 விக்கெட்களை ஹசன் மொகமது பறித்திருக்கிறார். தற்போது கே.எல்.ராகுலும், ஜெய்ஸ்வாலும் பேட்டிங் செய்துவருகிறார்கள். ஜெய்ஸ்வால் 43 ரன்களில் ஆடிக்கொண்டிருக்கிறார்.

ஜெய்ஸ்வால் அரைசதம்!

இந்தியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால் சென்னை டெஸ்ட்டில் அரை சதம் அடித்திருக்கிறார். ரோஹித் ஷர்மா, விராட் கோலி, பன்ட், கில் என சீனியர் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் வீழ்ந்தபோதும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்திருக்கிறார் ஜெய்ஸ்வால். 95 பந்துகளை சந்தித்து 50 ரன்கள் அடித்து களத்தில் நிற்கிறார் ஜெய்ஸ்வால்.

176 ரன்களுக்கு 6 விக்கெட் இழப்பு!

சென்னை டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 176 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கிறது. தற்போது களத்தில் ரவிச்சந்திரன் அஷ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் உள்ளனர்.

ரவிச்சந்திரன் அஷ்வின் அரை சதம்!

இந்தியாவின் ஆல் ரவுண்டரும், சென்னையை சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஷ்வின் 50 ரன்கள் அடித்து அசத்தியிருக்கிறார். இன்றைய ஆட்டம் முடிய இன்னும் ஒரு மணி நேரமே இருக்கும் நிலையில் இந்தியா 234 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து ஆடிக்கொண்டிருக்கிறது. அஷ்வின் 52 ரன்களுடனும், ஜடேஜா 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஜடேஜா அரை சதம்!

இந்தியாவின் ஆல் ரவுண்டர்களான ரவிச்சந்திரன் அஷ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் சரிவில் இருந்த இந்திய அணியை கூட்டணிபோட்டு மீட்டிருக்கிறார்கள். ரவிச்சந்திரன் அஷ்வின் 70 ரன்களைக் கடந்துவிட்ட நிலையில், தற்போது ரவீந்திர ஜடேஜா அரை சதம் அடித்திருக்கிறார். 73 பந்துகளில் 50 ரன்கள் அடித்து விளையாடிக்கொண்டிருக்கிறார் ஜடேஜா. இந்தியா 282 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து ஆடிக்கொண்டிருக்கிறது.

அஷ்வின் சென்சுரி!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இந்திய அணியை சரிவில் இருந்து காப்பாற்றியிருக்கிறார் ரவிச்சந்திரன் அஷ்வின்.

சென்னை டெஸ்ட் : இந்தியா 339/6

சென்னை டெஸ்ட்டின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் குவித்துள்ளது. அஷ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ரவீந்திர ஜடேஜா அவுட்!

அஷ்வினுடன் கூட்டணி அமைத்து 199 ரன்கள் சேர்த்த ரவீந்திர ஜடேஜா 86 ரன்களில் அவுட். டஸ்கின் விக்கெட்டை கைப்பற்றினார். இந்தியா 343 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்திருக்கிறது!

ஆகாஷ் தீப் அவுட்!

எட்டாவது விக்கெட்டாக ஆகாஷ் தீப் அவுட் ஆகியிருக்கிறார். அஷ்வின் களத்தில் தொடரும் நிலையில் இந்தியா 367 ரன்களில் முதல் இன்னிங்ஸை ஆடிக்கொண்டிருக்கிறது!

சென்னை டெஸ்ட் : இந்தியா 376

இந்தியா 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, வங்கதேச இப்போது முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. ஜஸ்பிரித் பும்ரா, வங்கதேசத்தின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷத்மனை அவுட் ஆக்க, முதல் விக்கெட்டை இழந்து விளையாடிவருகிறது வங்கதேசம்.

5 விக்கெட்களை இழந்த வங்கதேசம்!

பும்ரா, ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்களும், சிராஜ் ஒரு விக்கெட்டும் எடுக்க, வங்கதேசம் 5 விக்கெட்களை இழந்திருக்கிறது. வங்கதேசத்தின் சீனியர் வீரர்களான லிட்டன் தாஸும், ஷகிப் அல் ஹசனும் தற்போது வங்கதேசத்தின் இன்னிங்ஸை கட்டமைத்து வருகிறார்கள். தற்போது 79/5 என்கிற நிலையில் பேட்டிங் செய்துகொண்டிருக்கிறது வங்கதேசம்.

வங்கதேசம் 100 ரன்களுக்குள் 7 விக்கெட்களை இழந்தது!

வங்கதேச பேட்டிங் நிலைகுலைந்துவருகிறது. 100 ரன்களைத் தொடுவதற்கு முன்பாகவே 7 பேட்ஸ்மேன்களை இழந்துவிட்டது. சீனியர் வீரர்கள் லிட்டன் தாஸ், ஷகிப் இருவரும் ஆட்டம் இழந்துவிட்டனர்.

இந்தியா 264 ரன்கள் முன்னிலை!

முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 112 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்தியா 264 ரன்கள் முன்னிலையில் இருக்கும் நிலையில் ஃபாலோ ஆன் ஆடும் நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறது வங்கதேசம்.

149 ரன்களுக்கு ஆல் அவுட்... ஃபாலோ ஆன் இல்லை!

149 ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் ஆகியிருக்கிறது. பும்ரா 4 விக்கெட்களை எடுக்க, ஆகாஷ் தீப், சிராஜ், ஜடேஜா என மூவரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார்கள். பேட்டிங்கில் சதம் அடித்த அஷ்வின் பெளலிங்கில் விக்கெட் எடுக்கவில்லை.

ரோஹித் ஷர்மா அவுட்

இரண்டாவது இன்னிங்ஸிலும் ரோஹித் ஷர்மா சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆகி வெளியேறியிருக்கிறார். முதல் இன்னிங்ஸில் 6 ரன்களில் அவுட் ஆன இந்திய கேப்டன், இரண்டாவது இன்னிங்ஸில் 5 ரன்களில் மூன்றாவது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியிருக்கிறார்.

களத்தில் கோலி!

நஹித் ராணா பந்தில் ஜெய்ஸ்வால் அவுட் 10 ரன்களில் அவுட் ஆக, கோலி களத்துக்கு வந்திருக்கிறார்.

கோலி அவுட்!

இரண்டாவது நாள் ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில் கோலி 17 ரன்களில் எல்பிடபிள்யு முறையில் அவுட் ஆனார்.

ரிஷப் பன்ட், ஷுப்மன் கில்லின் ரன் மழை!

சென்னை டெஸ்ட்டின் மூன்றாவது நாளில் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் ஷுப்மன் கில்லும், ரிஷப் பன்ட்டும் ரன்களைக் குவித்துவருகிறார்கள். 67 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தபின் ஷுப்மன் கில்லும், ரிஷப் பன்ட்டும் ஜோடி சேர்ந்து 205/3 என ஸ்கோர் போர்டை உயர்த்தியிருக்கிறார்கள்.

ரிஷப் பன்ட் & ஷுப்மன் கில் சதம்! 

ரிஷப் பன்ட் 109 ரன்களும்,ஷுப்மன் கில் 119 ரன்களும் அடிக்க இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 287 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்திருக்கிறது. தற்போது வங்கதேசம் 515 ரன் டார்கெட்டை நோக்கி 54 ரன்களுக்கு விக்கெட் இழக்காமல் விளையாடி வருகிறது.

வங்கதேசம் 158/4

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் வங்கதேசம் 4 விக்கெட்களை இழந்து 158 ரன்களில் விளையாடிக்கொண்டிருக்கிறது.வங்கதேச அணியின் கேப்டன் ஷான்ட்டோ 51 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச வெற்றிக்கு இன்னும் 357 ரன்கள் தேவை. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் அதாவது 180 ஓவர்கள் மீதம் உள்ளன.