பெங்களூரு டெஸ்ட்டில் இந்திய அணியைத் தோற்கடித்து வெற்றிபெற்றிருக்கிறது நியூஸிலாந்து. இந்தியாவில் 36 ஆண்டுகளுக்குப்பிறகு டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றிருக்கிறது நியூஸிலாந்து. ரச்சின் ரவீந்திராவும், யங்கும் களத்தில் நின்று நியூஸிலாந்தின் வெற்றியை உறுதிப்படுத்தினார்கள்.
நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 74 ரன்களுக்கு ஆடிவருகிறது. வெற்றிக்கு இன்னும் 33 ரன்களே தேவை
இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே முதல் விக்கெட்டை தூக்கியிருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா. லாதம் டக் அவுட்!
மழை காரணமாக தாமதமான கடைசி நாள் ஆட்ட. 45 நிமிடத்துக்குப்பிறகு தொடங்கியிருக்கிறது. டாம் லாதம், டேவன் கான்வே களத்தில் உள்ளனர்!
இந்தியா நியூஸிலாந்து முதல் டெஸ்ட்டின் கடைசி நாளான இன்று நியூஸிலாந்து அணிக்கு மிகவும் எளிதான 107 ரன்கள் இலக்கே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மழைக் காரணமாக கடைசி நாளான இன்று பெளலர்களுக்கு சாதகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் இந்திய பெளலர்களின் கையில்தான் வெற்றி, தோல்வி இருக்கிறது.