கே.எல்.ராகுல் 
விளையாட்டு

IPL Retention 2025 : கே.எல்.ராகுலை கழட்டிவிட்ட லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்… பூரணுக்கு 18 கோடி டீல்!

கே.எல். ராகுலை கழற்றிவிட்டிருப்பதால் புதிய கேப்டனை லக்னோ இந்தாண்டு அறிவிக்க இருக்கிறது. பூரணும் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை எனத்தெரிகிறது!

Aiden

2025 ஐபிஎல் அணிகளில் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொள்வது, யாரை எல்லாம் ஏலத்துக்கு கொண்டுவருவது என்பதை இறுதி செய்வதற்கான நாள் நாளையுடன் முடிவடைகிறது. நாளை எல்லா அணிகளுமே தாங்கள் ரீடெய்ன் செய்த வீரர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். இதற்கிடையே ஒவ்வொரு அணிக்குள் இருந்தும் ரீடெய்ன் செய்யப்பட்டிருப்பவர்கள் யார், யார் என்கிற விவரங்கள் கசிய ஆரம்பித்திருக்கிறது.

அதன்படி லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி தங்களுடைய கேப்டனான கே.எல்.ராகுலையே ரீடெய்ன் செய்யவில்லை. ஆனால், மேற்கு இந்திய தீவுகளின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரணை ரீடெய்ன் செய்திருக்கிறது.

நிக்கோலஸ் பூரண்

நிக்கோலஸ் பூரணை கிட்டத்தட்ட 18 கோடி ரூபாய்க்கு ரீடெய்ன் செய்திருக்கிறது லக்னோ. கடந்த 2023 ஏலத்தில் இவரை 16 கோடி ரூபாய்க்கு இந்த அணி வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேப்போல் இந்திய பெளலர்களான ரவி பிஷ்னோய், மயாங்க் யாதவ், மோசின் கான், ஆயுஷ் பதோனி ஆகியோரை ரீடெய்ன் செய்திருக்கிறது. இதன் மூலம் ஏலத்தில் கிட்டத்தட்ட 69 கோடி ரூபாய்க்கு புதிய வீரர்களை லக்னோ அணியால் வாங்கமுடியும்.

கே.எல். ராகுலை கழற்றிவிட்டிருப்பதால் புதிய கேப்டனை லக்னோ இந்தாண்டு அறிவிக்க இருக்கிறது. பூரணும் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை எனத்தெரிகிறது!