சென்னை சூப்பர் கிங்ஸ் 
விளையாட்டு

IPL Retention : தக்கவைக்கப்பட்ட தோனி, கோலி, ரோஹித்… கழற்றிவிடப்பட்ட பன்ட், ராகுல், ஷ்ரேயாஸ்!

வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் அதிகாரப்பூர்வமாக அவர்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

News Tremor Desk

ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்கவைக்கலாம் என்கிற நிலையில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மட்டுமே 6 வீரர்களை தக்கவைத்திருக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டே வீரர்களை தக்கவைத்திருக்கிறது.

ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல் இங்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கோர் வீரர்களை தக்கவைத்திருக்கிறது. 2008 முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐந்து ஆண்டுகளாக சர்வதேச போட்டியில் பங்கேற்காததால் அன்கேப்டு வீரராக ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளார். கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் ஆல் ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே ஆகியோரோடு, இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரனாவை ரீடெய்ன் செய்திருக்கிறது.

தக்கவைத்துள்ள வீரர்கள் :  5  

1. ருத்துராஜ் கெய்க்வாட் (INR 18 கோடி)

2. ரவீந்திர ஜடேஜா (INR 18 கோடி)

3. மதீஷா பதிரனா (INR 13 கோடி)

4. ஷிவம் துபே (INR 12 கோடி)

5. எம்.எஸ்.தோனி (INR 4 கோடி)

2025 ஏலத்திற்கான மிச்சப் பணம்: INR 55 கோடி

ஏலத்துக்குப் போகும் முக்கிய வீரர்கள்: டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர்.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணி இந்நாள் கேப்டன் ஹர்திக் பாண்டியா, முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா என இருவரையுமே தக்கவைத்திருக்கிறது. அதேப்போல் அணியின் சூப்பர் பெளலரான ஜஸ்பிரித் பும்ராவை அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிதான் அதிகபட்சமாக 75 கோடி ரூபாய்க்கு முக்கிய வீரர்களை தக்க வைத்துள்ளது.

தக்கவைத்துள்ள வீரர்கள் : 5

1. ஜஸ்ப்ரீத் பும்ரா (INR 18 கோடி)

2. சூர்யகுமார் யாதவ் (INR 16.35 கோடி)

3. ஹர்திக் பாண்டியா (INR 16.35 கோடி)

4. ரோஹித் ஷர்மா (INR 16.30 கோடி)

5. திலக் வர்மா (INR 8 கோடி)

2025 ஏலத்திற்கான மிச்சப் பணம்: INR 45 கோடி 

ஏலத்துக்குப் போகும் பிரபல வீரர்கள்: இஷான் கிஷன், டிம் டேவிட்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பெங்களூரு அணி தனது கேப்டனான ஃபாப் டு ப்ளெஸ்ஸியை கழற்றிவிட்டிருக்கிறது. அவருக்கு பதிலாக விராட் கோலியை கேப்டனாக அறிவிக்க இருக்கும் பெங்களூரு அணி கோலியோடு சேர்த்து ரஜத் பட்டிதர் மற்றும் யாஷ் தயால் என மூன்று இந்திய வீரர்களை தக்கவைத்திருக்கிறது. முகமது சிராஜ் தக்கவைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை விடுவித்திருக்கிறது பெங்களூரு அணி.

தக்கவைத்த வீரர்கள் :  3 

1. விராட் கோலி (INR 21 கோடி)

2. ராஜத் பட்டிதர் (INR 11 கோடி)

3. யாஷ் தயால் (INR 5 கோடி)

2025 ஏலத்திற்கான மிச்சப் பணம்: INR 83 கோடி

ஏலத்துக்குப் போகும் முக்கிய வீரர்கள்: கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ஃபாப் டு பிளெஸ்சிஸ்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

இந்த ரிடென்ஷனிலேயே அதிகபட்ச தொகைக்கு ரீடெய்ன் செய்யப்பட்டிருப்பவர் சன் ரைசர்ஸ் அணியின் ஹென்ரிச் கிளாசன்தான். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவரை SRH அணி 23 கோடிக்கு ரீடெய்ன் செய்திருக்கிறது. இவருக்கு அடுத்தபடியாக பேட் கமின்ஸை 18 கோடிக்கும், டிராவிஸ் ஹெட்டை 14 கோடிக்கும் ரீடெய்ன் செய்திருக்கிறது. மூன்று வெளிநாட்டு வீரர்களை ரீடெய்ன் செய்திருக்கிறது சன் ரைசர்ஸ்.

தக்கவைத்த வீரர்கள் : 5

  1.  ஹென்ரிக் கிளாசன் (INR 23 கோடி)

  2.  பேட் கம்மின்ஸ் (INR 18 கோடி)

  3.  அபிஷேக் ஷர்மா (INR 14 கோடி)

  4.  டிராவிஸ் ஹெட் (INR 14 கோடி)

  5.  நிதிஷ் குமார் ரெட்டி (INR 6 கோடி)

2025 ஏலத்திற்கான மிச்சப் பணம்: INR 45 கோடி

ஏலத்துக்குப் போகும் முக்கிய வீரர்கள் : வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார்

டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி கேபிடல்ஸ்

கேப்டன் ரிஷப் பன்ட்டை பட்ஜெட் படியாததால் டெல்லி அணி ரீடெய்ன் செய்யவில்லை. அக்சர் பட்டேலைத்தான் இந்த அணி அதிகபட்ச தொகைக்கு ரீடெய்ன் செத்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவின் டிரிஸ்டன் ஸ்டப்ஸை ரீடெய்ன் செய்திருக்கிறது டெல்லி.

தக்கவைத்த வீரர்கள் : 4

1. அக்சர் பட்டேல் (INR 16.50 கோடி)

2. குல்தீப் யாதவ் (INR 13.25 கோடி)

3. ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (INR 10 கோடி)

4. அபிஷேக் பொரேல் (INR 4 கோடி)

2025 ஏலத்திற்கான மிச்சப் பணம்: INR 73 கோடி

ஏலத்துக்குப் போகும் முக்கிய வீரர்கள்: ரிஷப் பன்ட், டேவிட் வார்னர், அன்ரிச் நார்க்கியா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கோப்பையை வென்று தந்த கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயரை ரீடெய்ன் செய்யவில்லை என்றாலும் அதிகபட்சமாக 6 வீரர்களை ரீடெய்ன் செய்திருக்கிறது கொல்கத்தா. ரிங்கு சிங்தான் இந்த அணியின் ஸ்டார் வீரர். 13 கோடி ரூபாய்க்கு ரிங்குவையும், தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தியை 12 கோடிக்கும், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நரேன், ரஸல் ஆகியோரையும் தலா 12 கோடிக்கும் ரீடெய்ன் செய்திருக்கிறது.

தக்கவைத்த வீரர்கள்:  6 

1. ரிங்கு சிங் (INR 13 கோடி)

2. வருண் சக்ரவர்த்தி (INR 12 கோடி)

3. சுனில் நரேன் (INR 12 கோடி)

4. ஆண்ட்ரே ரசல் (INR 12 கோடி)

5. ஹர்ஷித் ராணா (INR 4 கோடி)

6. ரமண்தீப் சிங் (INR 4 கோடி)

2025 ஏலத்திற்கான மிச்சப் பணம்:  INR 51 கோடி

ஏலத்துக்குப் போகும் முக்கிய வீரர்கள் : ஷ்ரேயாஸ் ஐயர், மிட்செல் ஸ்டார்க்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் அணியும் கொல்கத்தாவைப் போலவே ஆறு வீரர்களை ரீடெய்ன் செய்திருக்கிறது. கேப்டனான சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வாலை 18 கோடி ரூபாய்க்கு ரீடெய்ன் செய்திருக்கிறார்கள்.

தக்கவைத்த வீரர்கள் : 6

1. சஞ்சு சாம்சன் (INR 18 கோடி)

2. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (INR 18 கோடி)

3. ரியான் பராக் (INR 14 கோடி)

4. துருவ் ஜுரேல் (INR 14 கோடி)

5. ஷிம்ரான் ஹெட்மையர் (INR 11 கோடி)

6. சந்தீப் ஷர்மா (INR 4 கோடி)

2025 ஏலத்திற்கான மிச்சப் பணம்: INR 41 கோடி

ஏலத்துக்குப் போகும் முக்கிய வீரர்கள்: யுவேந்திர சஹால், ஜோஸ் பட்லர்

குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் டைட்டன்ஸ்

காயம் காரணமாக முகமது ஷமியை ரீடெய்ன் செய்யாத குஜராத் அணி ரஷீத் கானை அதிகபட்சமாக 18 கோடிக்கு ரீடெய்ன் செய்திருக்கிறது. அதேப்போல் கேப்டன் ஷுப்மன் கில்லையும் 16.50 கோடிக்கு ரீடெய்ன் செய்திருக்கிறது.

தக்கவைத்த  வீரர்கள்: 5

1. ரஷீத் கான் (INR 18 கோடி)

2. ஷுப்மன் கில் (INR 16.50 கோடி)

3. சாய் சுதர்சன் (INR 8.50 கோடி)

4. ராகுல் டெவாட்டியா (INR 4 கோடி)

5. ஷாருக்கான் (INR 4 கோடி)

2025 ஏலத்திற்கான மிச்சப் பணம்: INR 69 கோடி

ஏலத்துக்குப் போகும் முக்கிய வீரர்கள்: முகமது ஷமி, டேவிட் மில்லர்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

நிக்கோலஸ் பூரணை அதிகபட்சமாக 21 கோடிக்கு  ரீடெய்ன் செய்திருக்கும் லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுலை கழற்றிவிட்டிருக்கிறது. பூரணைத்தவிர ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கும் மற்ற 5 வீரர்கள் இந்திய வீரர்கள்.

தக்கவைத்த  வீரர்கள்: 5

1. நிக்கோலஸ் பூரன் (INR 21 கோடி)

2. ரவி பிஷ்ணோய் (INR 11 கோடி)

3. மயாங்க் யாதவ் (INR 11 கோடி)

4. மோசின் கான் (INR 4 கோடி)

5. ஆயுஷ் பதோனி (INR 4 கோடி)

2025 ஏலத்திற்கான மிச்சப் பணம்: INR 69 கோடி

ஏலத்துக்குப் போகும் முக்கிய வீரர்கள்: கே.எல். ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், குயின்டன் டி காக்

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ்

இரண்டே வீரர்களை அதுவும் 10 கோடிக்குள் ரீடெய்ன் செய்திருக்கும் பஞ்சாப் அணி இந்தமுறையும் ஏலத்தில் பல கோடிகள் கொடுத்து பல வீரர்களை வாங்கயிருக்கிறது.

தக்கவைத்த வீரர்கள் :  2

1. சஷாங்க் சிங் (INR 5.5 கோடி)

2. ப்ரப்ஹ்சிம்ரன் சிங் (INR 4 கோடி)

2025 ஏலத்திற்கான மிச்சப் பணம்: INR 110.5 கோடி

ஏலத்துக்குப் போகும் முக்கிய வீரர்கள்: ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், சாம் கரண், ஜானி பேர்ஸ்டோ