இந்திய அணி வீரர்கள் வெள்ளை உடையில் களமிறங்க, ஜெர்மனி வீரர்கள் கறுப்பு உடையில் களமிறங்கியிருக்கிறார்கள்.
மூன்றாவது முறையாக பெனால்ட்டி கார்னர் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இந்தியாவுக்கு கோல் அடித்திருக்கிறார் ஹர்மன்ப்ரீத் சிங்!
முதல் 10 நிமிடங்களுக்குள்ளாகவே இந்தியாவுக்கு இன்னொரு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தவறவிட்டாலும் இந்தியா 1-0 என லீடிங்கில் இருக்கிறது!
முதல் 15 நிமிடங்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் இந்தியா 1-0 என முன்னிலையில் இருக்கிறது! ஜெர்மனி இரண்டாவது பாதியில் அதிரடி ஆட்டம் ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது!
பெனால்ட்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி ஜெர்மனி ஈக்குவலைசர் கோலை அடித்திருக்கிறது. ஆட்டம் 1-1 என சமநிலை!
ஜெர்மனிக்கு கிடைத்த பெனால்ட்டி கார்னர் வாய்ப்பை இந்திய வீரர்கள் தடுக்கும்போது அது பெனால்ட்டி ஸ்ட்ரைக்காக மாற ஜெர்மனி கோல் அடித்து 2-1 என முன்னிலைப் பெற்றிருக்கிறது!
30 நிமிட ஆட்டம் முடிவடைந்திருக்கும் நிலையில் இந்தியா 2-1 என பின்தங்கியிருக்கிறது!
இரண்டாவது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே கிடைத்த பெனால்ட்டி கார்னர் வாய்ப்பை தவறவிட்டது இந்தியா!
பெனால்ட்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியாவின் ஶ்ரீஜித் கோல் அடிக்க இந்தியா 2-2 என ஆட்டத்தை சமன் செய்திருக்கிறது!
இன்னும் 15 நிமிட ஆட்டமே மீதம் இருக்கும் நிலையில் இந்தியா, ஜெர்மனி என இரண்டு அணிகளும் தலா 2 கோல்களோடு சமநிலையில் இருக்கிறது!
ஜெர்மனி அற்புதமான கோல் மூலம் மூன்றாவது கோல் அடித்து லீட் எடுத்திருக்கிறது!
ஜெர்மனி 3-2 என இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது!