ரிஷப் பன்ட் & கே.எல்.ராகுல் 
விளையாட்டு

ப்ரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாகும் ரிஷப் பன்ட்… ரிக்கி பான்ட்டிங்குடன் மீண்டும் கூட்டணி!

2025 ஐபிஎல் ஏலத்துக்கான அதிகாரப்பூர்வ வேலைகள் தொடங்கிவிட்டன. நேற்றோடு ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை ரீடெய்ன் செய்கிறது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்ட நிலையில் ஏல பரபரப்பு தொடங்கியிருக்கிறது.

Aiden

ரிடென்ஷன்படி இந்தமுறை 10 அணிகளும் 36 இந்திய வீரர்களையும், 10 வெளிநாட்டு வீரர்களையும் ரீடெய்ன் செய்திருக்கின்றன. இதை இன்னும் டீகோட் செய்தால் பேட்ஸ்மேன்களைத்தான் அணிகள் அதிக அளவில் ரீடெய்ன் செய்திருக்கின்றன. மொத்தம் 28 பேட்ஸ்மேன்கள், 7 ஆல் ரவுண்டர்கள், 11 பெளலர்கள் ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்த ரிஷப் பன்ட், கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர், லக்னோ அணிக்கு கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல், பஞ்சாப் அணிக்கு தற்காலிக கேப்டனாக இருந்த சாம் கரண் என இந்த நான்கு வீரர்களுமே ரீடெய்ன் செய்யப்படவில்லை. இந்த நான்கு பேர்தான் இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு விலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரிஷப் பன்ட்

2025 ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் இந்த டிசம்பரில் நடக்க இருக்கிறது. இதில் பஞ்சாப் அணி கிட்டத்தட்ட 110 கோடி பணத்தோடு ஏலத்துக்கு வரும் வீரர்களை வரிசைக்கட்டி வாங்கத் தயாராக இருக்கிறது. 2024 சீசன் வரை டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பான்ட்டிங்தான் இந்தமுறை பஞ்சாப் அணியின் பயிற்சியாளராகியிருக்கிறார். டெல்லி அணிக்கு முன்பு ரிஷப் பன்ட்டை கேப்டனாகத் தேர்வு செய்ததும் இவர்தான். பான்ட்டிங்கின் ஆலோசனையின் பேரில்தான் ரிஷப் பன்ட் டெல்லி அணியைவிட்டு வெளியேற விரும்பியதாகச் சொல்லப்படுகிறது.

இந்தமுறை எப்படியும் 25 கோடி ரூபாய்க்கு பன்ட்டை பஞ்சாப் அணிக்காக ப்ரீத்தி ஜிந்தா ஏலத்தில் எடுப்பார் என எதிர்பார்க்கலாம். கே.எல்.ராகுலை பெங்களூரு அணி ஏலத்தில் எடுக்கும் எனத்தெரிகிறது. ஷ்ரேயாஸ் ஐயரை புனே அணி விலைக்கு வாங்கலாம்!