இந்த 125 கோடி ரூபாயை போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்கள் மற்றும் தலைமைப்பயிற்சியாளர் டிராவிட்டுக்கு தலா 5 கோடியும், டிராவிட்டுக்கு அடுத்த நிலையில் உள்ள துணை பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கு 2.5 கோடியும், அணியைத் தேர்வு செய்த செலக்டர்கள் மற்றும் டீமுடன் பயணித்த ஊழியர்களுக்கு 1 கோடியும் என போனஸ் பணம் பிரிக்கப்பட்டது.
ஆனால், ராகுல் டிராவிட் ''என்னுடைய கோச்சிங் டீமில் இருக்கும் மற்றவர்களுக்குத் தரும் அதே 2.5 கோடி ரூபாய் தந்தால்போதும்'' என கூடுதலாக அறிவிக்கப்பட்ட 2.5 கோடி ரூபாய் வேண்டாம் என மறுத்துவிட்டார்.
2018 ஜூனியர் உலகக்கோப்பையின் போது இந்திய அண்டர்19 அணி உலகக்கோப்பையை வென்றபோதும் இதே பாலிசியைத்தான் கடைபிடித்தார் ராகுல் டிராவிட். அப்போது டிராவிட்டுக்கு மட்டும் 50 லட்சமும், அவரது கோச்சிங் டீமில் உள்ளவர்களுக்கு 20 லட்சமும் அறிவிக்கப்பட, சமமாக எல்லோருக்கும் தரப்படவேண்டும் என டிராவிட் வலியுறுத்தியதால், எல்லோருக்கும் 25 லட்சம் போனஸாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது!
இந்தக்காலத்துல இப்படி ஒரு மனுஷனா?!