ராகுல் டிராவிட் 
விளையாட்டு

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராகும் ராகுல் டிராவிட்… குமார சங்ககாரா நீக்கம்?!

தற்போதைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ராகுல் டிராவிட்டால் பட்டை தீட்டப்பட்டவர். 2015 ஐபிஎல் சீசனுக்குப் பிறகு பிசிசிஐ உடன் இணைந்த ராகுல் டிராவிட் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஐபிஎல் தொடருக்குத் திரும்புகிறார்.

Aiden

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், 2024 உலகக்கோப்பையோடு பயிற்சியாளர் பதவிக்கு விடை கொடுத்துவிட்டார். அதேநேரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் மென்ட்டராக இருந்த கெளதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 

இதனால் ஐபிஎல் அணிகளில் பயிற்சியாளர் பதவிகளில் மாற்றம் நிகழப்போகிறது. ராகுல் டிராவிட் கொல்கத்தா அணிக்குப் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என வதந்திகள் உலவி நிலையில் டிராவிட் ராஜஸ்தான் அணிக்கு பயிற்சியாளராகப் போவதாகத் தெரிகிறது.

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட் 2012, 2013 ஐபிஎல் சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும், 2014 மற்றும் 2015 சீசனில் மென்ட்டராகவும் இருந்தவர். கேப்டனாக சொதப்பியிருந்தாலும், மென்ட்டராக 2015 சீசனில் ப்ளேஆஃப் வரை அணியை முன்னேற்றிக் கொண்டுவந்தார் ராகுல் டிராவிட். 

சஞ்சு சாம்சன் ராகுல் டிராவிட்டால்தான் ராஜஸ்தான் அணியில் பட்டை தீட்டப்பட்டார். 2015 ஐபிஎல் சீசனுக்குப் பிறகு அண்டர் 19 இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட் அடுத்த 9 ஆண்டுகளை பிசிசிஐ உடன் கழித்துவிட்டார். இப்போது ஐபிஎல்-க்கு மீண்டும் திரும்பும் ராகுல் டிராவிட்டை ராஜஸ்தான் அணி பயிற்சியாளராக நியமிக்க இருக்கிறது. 

ராகுல் டிராவிட் பயிற்சியாளர் ஆகும்பட்சத்தில் குமார சங்ககாராவின் இடம் என்னவாகும் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.