இந்தியாவும், வங்கதேச அணியும் இன்று டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் மோத இருக்கிறன. இந்தப்போட்டி கரீபியன் தீவின் ஆண்டிகுவாவில் நடக்கிறது. ஆன்ட்டிகுவா நேரப்படி காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்கயிருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணி. இந்நிலையில் நேற்று இரவு முதல் இந்தப்போட்டி மழையால் ரத்தாகக்கூடிய வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன.
காலை நிலவரம் என்ன?
ஆன்டிகுவாவில் இப்போது பொழுதுவிடிந்து மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருகிறது என்கிறார்கள். அதேப்போல் வானிலை மையமும் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன... போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் செய்தியை சொல்லியிருக்கிறது. இருந்தாலும் இன்னும் மழை வருவதற்கான வாய்ப்பு இன்னமும் 20 சதவிகிதம் இருக்கிறது.
வானம் மேகமூட்டமாகக் காணப்படுமே தவிர மழை வருவதற்கான வாய்ப்பு இல்லை என இன்னொரு வானிலை அறிக்கை தகவல் சொல்கிறது. ஒருவேளை மழைவந்து இந்தப்போட்டி ரத்தானால் சூப்பர் 8 சுற்றில் இரு அணிகளுக்கும் அடுத்து ஒரே ஒரு போட்டி இருக்கிறது. இந்தியா அடுத்தப்போட்டியில் ஆஸ்திரேலியாவையும், வங்கதேசம் ஆப்கானிஸ்தானையும் எதிர்த்து விளையாட இருக்கிறது.
இன்றையப்போட்டி ரத்தானால் இந்தியா ஆஸ்திரேலியா போட்டி டிசைடராக இருக்கும். இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றால் மட்டுமே அரையிறுதிப்போட்டிக்குத் தகுதிபெற முடியும் என்கிற சூழல் உருவாகும். அதனால் இன்றைய வங்கதேச அணிக்கு எதிரானப் போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானப் போட்டி. இந்தப்போட்டி மழையின் குறுக்கீடுகள் இல்லாமல் நடந்து இந்தியா வென்றுவிட்டால் அரையிறுதிக்கான இந்தியாவின் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்!