ரிஷப் பன்ட் #INDvAFG #T20WorldCup 
டி20 உலகக்கோப்பை

Dream11 ஆடப்போறீங்களா… இந்த டீம் உங்களுக்கு கோடிகளை வென்று தரலாம்!

கிரிக்கெட்டை விளையாட்டாகப் பார்ப்பதுபோய், கிரிக்கெட்டை வைத்து Dream11-ல் கோடிகளை சம்பாதிக்கமுடியுமா என்கிற ஆசைதான் இப்போது எல்லோருக்கும் அதிகம் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் இந்தியா டி20 போட்டியில் விளையாட இன்று நீங்கள் டீம் செட் செய்யப்போகிறீர்கள் என்றால் அதற்கும் முன் இதை கட்டாயம் படிக்கவும்!

Aiden

இந்தியா முழுக்க 2 கோடி பேர் தினமும் டிரீம்11 விளையாடுகிறார்களாம். இந்த 2 கோடி பேரில் நீங்கள் வெல்லவேண்டுமானால் கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் ஆக வேண்டும்.  

முதலில் இந்த ஏழு பேர் கட்டாயம்!
மொத்தம் எடுக்கவேண்டிய 11 ப்ளேயர்களில் கீழ்கண்ட இந்த 7 பேர் உங்கள் அணியில் இருப்பது முதலில் கட்டாயம்!

1. ரிஷப் பன்ட்

ஏன்? ஸ்ட்ரைக்கிங் பேட்ஸ்மேன். குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் அடிக்கக்கூடியவர், பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாய் வெடிக்கக்கூடியவர் என்பதால் ரிஷப் பன்ட் நிச்சயம் அணியில் இருக்கவேண்டும். பேட்டிங் செய்யவே சிரமமாக இருந்த நியூயார்க் பிட்ச்சிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோராக 31 பந்துகளில் 42 ரன்கள் அடித்தவர் ரிஷப் பன்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

2. ரஷீத் கான்

ஏன்? உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஆப்கானிஸ்தான் கேப்டன். விக்கெட் எடுக்கும் திறன் மற்றும் சிக்கனமான பந்துவீச்சுக்கு பெயர் பெற்றவர். பார்படாஸ் பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ரஷீத்கான் கட்டாயம் அணியில் இருக்கவேண்டும். 

விராட் கோலி

3. விராட் கோலி

ஏன்? எல்லா சூழலிலும் இந்தியா நம்பக்கூடிய ஒரு பேட்ஸ்மேன். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் நங்கூரம் போல நின்று நிச்சயம் 40 டு 50 ரன்கள் சேர்த்துவிடுவார். வெஸ்ட் இண்டீஸ் பிட்சுகளில் விளையாடிய அனுபவம் இவருக்கு அதிகம். கடந்த மாதம் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் ஆடும்போது இருந்த ஃபார்முக்கு சூப்பர்8-ல் இவர் திரும்புவார் என எதிர்பார்க்கலாம்

4. ஜஸ்பிரித் பும்ரா

ஏன்? டெத் ஓவர்களில் விக்கெட்டுகளை அள்ளும் அசாத்திய திறமைசாலி. எக்கானமியிலும் கில்லி. அதனால் நிச்சயம் இந்தியாவின் பெளலர்கள் லிஸ்ட்டில் இவர் இருக்கவேண்டும்.

5. ஃபசல்ஹக் ஃபாரூக்கி 

ஏன்? இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்திருக்கும் பெளலர்கள் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருக்கிறார் ஃபாரூக்கி. புதிய பந்தை வீசுவது, டெத் ஓவர்களில் பந்துவீசுவது என இரண்டிலுமே  விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய வல்லமை படைத்தவர்.

6. முகமது நபி

ஏன்? பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் பங்களிக்கக்கூடிய அனுபவமிக்க ஆல்-ரவுண்டர். நெருக்கடியான சூழலில் நிதானமாக ஆடக்கூடியவர். உலகக்கோப்பை போன்ற ஹை பிரஷர் போட்டிகளில் இவருடைய பக்குவமான ஆட்டம் கைகொடுக்கும்.

ஆப்கானிஸ்தான் வீரர்கள்

7. ஹர்திக் பாண்டியா

ஏன்? டைனமிக் ஆல்-ரவுண்டர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். இவரது ஆக்ரோஷமான பேட்டிங் மற்றும் திறமையான பந்துவீச்சு டிரீம்11 அணிக்குள் சமநிலையைக் கொண்டுவரும்.

ரிஸ்க் எடுக்கவேண்டிய 4 பேர்!
இந்த நான்கு பேரை எடுப்பது ரிஸ்க்தான். ஆனால் இவர்கள் இன்று ஃபார்முக்கு வந்தால் உங்கள் பாயின்ட்ஸ் இரட்டிப்பாகும்.

8. ரவீந்திர ஜடேஜா

ஏன்? சமீபகாலமாக ஃபார்மில் இல்லை, குறிப்பாக இந்த உலகக்கோப்பை போட்டியிலும் ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை, பேட்டிங்கிலும் மோசம் என புள்ளிவிவரங்கள் இவருக்கு எதிராக இருந்தாலும் மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால் எப்போது வேண்டுமானாலும் பவுன்ஸ்பேக் ஆகலாம். அது இந்தப்போட்டியாகவும் இருக்கலாம்.

ரஹ்மானுல்லா குர்பாஸ்

9. குல்தீப் யாதவ்

ஏன்?  திறமையான ரிஸ்ட் ஸ்பின்னர். முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் கொண்டவர். இவரது சமீபத்திய ஃபார்ம் நிச்சயம் கைகொடுக்கும்.

10. ரஹ்மானுல்லா குர்பாஸ்

ஏன்? ஆப்கானிஸ்தானின் ஆக்ரோஷமான தொடக்க ஆட்டக்காரர். இன்ஃபார்ம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். ஆனால், இவரை அணிக்குள் எடுப்பது அதிக ரிஸ்க்கானது. பும்ரா இவரது விக்கெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்தலாம் அல்லது குர்பாஸ் இந்திய பெளலர்களை பதம் பார்க்கலாம்.

11. அஸ்மத்துல்லா ஓமர்சாய்


ஏன்? ஆப்கானிஸ்தானின் இன்னொரு நம்பகத்தன்மை வாய்ந்த ஆல்ரவுண்டர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் களமிறங்குவார், பவர்ப்ளேவிலும் பந்துவீசுவார் என்பதால்ன் அஸ்மத்துல்லா ஓமர்சாய் டிரீம்11 டீமில் முக்கியமான துருப்புச்சீட்டாக இருப்பார்.

ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட இந்த டீமை முயற்சி செய்து பார்க்கலாம்.
டிரீம்11 டீம்

டாஸ் போட்டவுடன் இவர்கள் எல்லோரும் ப்ளேயிங் லெவனில் இருக்கிறார்களா என்பதை செக் செய்துகொள்ளவும். டாஸைப் பொருத்த யார் முதலில் ஆடுகிறார்களோ அதற்கு ஏற்ப டீமில் மாற்றங்கள் செய்துகொள்ளலாம்.