பிக் பாஸ் தமிழ் 8 சீசனின் மூன்றாவது வாரத்துக்கான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளுக்கான ஷூட்டிங் சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் நடந்துவருகிறது. விஜய் சேதுபதி பங்கேற்கும் இந்த ஷூட்டிங் இந்தமுறை சனிக்கிழமை அதிகாலையிலேயே தொடங்கிவிட்டது.
மூன்றாவது வாரத்துக்கான நாமினேஷனில் முதலில் 8 பேர் இருந்த நிலையில், பின்னர் டாஸ்க்கில் வெற்றி, ஃப்ரீ பாஸ்கள் மூலம் சிலர் தப்பித்தனர். இறுதியில் முத்துக்குமரன், செளந்தர்யா, அன்ஷிதா, தர்ஷா ஆகியோர் நாமினேஷனில் இருந்தனர்.
நேற்றுவரை அன்ஷிதா குறைவான வாக்குகள் பெற்றிருந்த நிலையில் இன்று நிலைமை மாறியிருக்கிறது. முத்துக்குமரன் மற்றும் செளந்தர்யா அதிக வாக்குகளால் சேஃப் ஸோனுக்குப் போக, இறுதியில் அன்ஷிதாவும், தர்ஷாவுமே இருந்தனர். இதில் குறைவான வாக்குகள் பெற்று தர்ஷா வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாடல் மற்றும் சின்னத்திரை நடிகையான தர்ஷா குப்தா பிக் பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது எவிக்ஷனாக வெளியேறியிருக்கிறார்.