ஆண்களா பெண்களா எனும் வீக்லி டாஸ்க் போட்டியை துவங்கினார் பிக்பாஸ். இருக்கு..இன்னைக்கு சம்பவம் இருக்கு ! புரோமோவைப் பார்த்ததும் தெரிந்தது. இன்று துவங்கும் வீக்லி டாஸ்க், டெய்லி டாஸ்க் & நாமினேஷன் ஃப்ரீ-க்கான கேம் இன்று துவங்கியது. இது BB Tamil 08 Day 16.
பெண்கள் அணிக்கு இருக்கும் ஒரே பிரச்னை, ஆண்களுக்கு கொடுத்திருந்த வாக்குறுதி தான். அதை மீறுவதா, நிறைவேற்றுவதா என்பதில் தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள். தனித்தனி பெட் இருக்கும் வீடு வேண்டுமென்றால் ஆண்களை ஒரு வாரத்துக்கு பெண்கள் நாமினேட் செய்யக்கூடாது என்பது தான் அந்த வாக்குறுதி.
அந்த டீலை அடுத்த வாரம் அப்ளே செய்துகொள்ள விரும்புகிறது ஆண்கள் டீம். அதனால், எதாவது பிரச்னை வராதா, டீலை ரத்து செய்துவிட முடியாதா என்று புதுப்புது காரணங்களைத் தேடிவருகிறது பெண்கள் டீம்.
அதற்கு ஒரு சாம்பிள் இன்று நடந்தது. சாச்சனாவுக்கு கடும் வயிறு வலியாக இருந்ததால் அவரை கன்பெஷன் ரூமுக்கு அழைத்துச் சென்றார் அருண்.
பிக்பாஸ் அழைத்து, கேப்டன் தர்ஷிகாவின் அனுமதியுடன் தான் அழைத்துச் சென்றார். இருந்தாலும், ஏற்கெனவே, சுய தேவைக்காக கன்ஃபெஷன் ரூமுக்கு ஆண்கள் சென்றால், நாமினேஷன் டீல் கேன்சல் செய்யப்படும் என்று பெண்கள் விதிமுறை வகுத்திருந்தனர். அதனால், சாச்சனாவுடன் அருண் போயிருக்க வேண்டாம். அருண் போனதால் டீல் கேன்சல் என்று ஒரு பிட்டை போட்டுப் பார்த்தது பெண்கள்.
ஆனால், அருணின் சுயதேவைக்காக போகவில்லை என்ற பாயிண்டை நறுக்கென பேசினார் முத்துக்குமரன். ‘ஒருவேளை உங்க டீலுக்கு நாங்க இப்போ எதிர்ப்பு தெரிவிச்சா என்ன பண்ணுவீங்க?’ என்று பெண்கள் கேட்டதுக்கு, ‘அதை தான் விரும்புறீங்கன்னு தெரியுது’ என்று பெண்களை சரமாரி அட்டாக் செய்தது ஆண்கள் டீம். மறுபடியும், கலந்து பேசிவிட்டு, பிக்பாஸ் அறிவுரைக்குப் பிறகு தீர்வு சொல்வதாக கேப்டன் தர்ஷிகா கூறியிருக்கிறார்.
ஆக, ஆண்களை ஒருவாரம் நாமினேட் செய்யாமல் அக்ரிமெண்டை எப்படியாவது ஒலட்டி விடவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது பெண்கள் டீம்.
வீக்லி டாஸ்க் :
சென்ற வாரம் வீக்லி டாஸ்க் ஆக குயின் டிவி Vs கிங் டிவி எனும் டிவி நிறுவனத்தை இரண்டு டீமும் நடத்தியது போல, இந்த வாரம் பிக்பாஸ் ஸ்டார் ஹோட்டல் எனும் ஹோட்டல் நிறுவனத்தை நடத்துகிறார்கள். அதற்காக ஆண்களும், பெண்களும் அந்தந்த காஸ்ட்யூம்களுடன் களமிறங்கினர்.
முதலாவதாக, பெண்கள் டீம் ஹோட்டலை நடத்த, ஆண்கள் கஸ்டமராக வந்தார்கள். பிஸ்னஸ் மேனாக தீபக், ஃபேமியாக கணவர் ரஞ்சித், மனைவி முத்துக்குமரன் ( முத்தழகு) & மகள் சாச்சனா மூவரும், நண்பர்களாக விஷாலும் அருணும் வந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு டாஸ்கை கொடுத்து பெண்களை மிரள விட்டனர். ஆம்லேட் போட்டுத்தரலை, கஸ்டமரை ஒழுங்கா ட்ரீட் செய்யலை என பல புகார்களை பெண்கள் மீது வைத்து மிரள விட்டது ஆண்கள் டீம்.
ஆண்கள் கொடுத்த புகாரினால் மேஜேனராக இருந்த பவித்ராவை மாற்ற சொல்லியது பிக்பாஸ். அதன்படி, பவித்ராவுக்கு பதிலாக சுனிதா மேனேஜராக மாறினார். மேனேஜராக இருந்த பவித்ராவை ஹவுஸ் கீப்பிங்கிற்கு மாறினார். அதனால், செம காடுப்பானார் பவித்ரா. வேணும்னே பண்ணுறானுங்க அப்டின்னு அழுதார். கடைசி வரைக்கும் கேமை கேமாக பெண்கள் பார்க்க மாட்டார்களோ என்றே தோன்றுகிறது. இன்றோடு முடியவில்லை. நாளை என்னென்ன அட்டகாசம் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.
கில்லர் காயின் கேம்
அடுத்ததாக, டெய்லி டாஸ்காக கில்லர் காயின் எனும் புது விஷயத்துடன் வந்தார் பிக்பாஸ். பலத்தை நம்பி விளையாட வேண்டிய கேம் இது . சுனிதாவின் கழுத்தை மடக்கி பிடித்து டெட் லால் போட்டுவிட்டனர். பார்க்கவே பயங்கரமாக இருந்தது. ஆனாலும் சுனிதா டஃப் ஃபைட் கொடுத்து தோற்றுப் போனார். சுனிதாவை இந்த விஷயத்தில் பாராட்டியே ஆக வேண்டும். ஆண்கள் Vs பெண்கள் என விளையாடும் விளையாட்டு இதுவல்ல என்றே தோன்றுகிறது.
ஏனெனில், இரண்டு பக்கமும் சமமான பலத்துடன் விளையாடும் கேம் ஆக இல்லையென்பதால் ஆண்கள் பக்கமே வெற்றியும் சென்று சேர்ந்தது. நிச்சயமாக இது Fair கேம் இல்லை. பலமிருப்பவர்கள் மட்டுமே ஜெயிக்கக் கூடிய கேமாக இது இருந்தது. இரண்டு டீமிலும் பலத்த காயங்களும் அழுகைகளுமாக இரண்டு டீமுமே புலம்பிக் கொண்டிருந்தனர்.
மேலும் கடந்த சீசன்களில் கில்லர் காயின் கேமில் ஆண்கள் பெண்கள் கலந்து விளையாடினார்கள். எந்த எல்லையும் இன்றி எங்கு வேண்டுமானாலும் ஓடலாம். ஆனால் இம்முறை ஒரு சிறிய கட்டத்திற்குள் விளையாட வேண்டும். எனவே இப்படி தான் விளையாடி ஆக வேண்டும் என்னும் சூழல் உருவானது. இந்த கேம் முற்றிலும் பிக் பாஸ் டீமின் தவறு தான்.
நிஜமாகவே, இரண்டு அணிகளுமே சம அளவில் போட்டிப் போட்டதைப் பார்க்க முடிந்தது. அதற்காக பெண்களுக்கு வாழ்த்துகள். இறுதியாக, ஆண்கள் அணி நாமினேஷன் ஃப்ரீ டாஸ்கை வென்றனர்.
வீக்லி டாஸ்க் ஆன பிக்பாஸ் ஹோட்டல் போட்டி நாளை மீண்டும் தொடரும். அதுபோல, ஆண்கள் போட்ட டீலுக்கு என்ன செய்வது என்று இரவு முழுவதும் புலம்பிக் கொண்டிருந்தது பெண்கள் டீம். நாளை இன்னும் ஆட்டம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.