பிக் பாஸ் தமிழ் சீசனுக்கான முதல் வார டிஆர்பி ரேட்டிங் அடுத்தவாரம் வெளியாக இருக்கும் நிலையில், பார்வையாளர்களைக் கூட்ட அதிரடி வியூகங்களை அமைத்துவருகிறது விஜய் டிவி.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த சீசனின் முதல் எபிசோடுக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், அவர் வரும் வார இறுதி எபிசோடுகளில் எல்லாம் பார்வையாளர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தரவேண்டும் என முடிவெடுத்திருக்கிறார்கள். அதன்படி முதல் கட்டமாக 6 வைல்டு கார்டு என்ட்ரிக்கள் இந்த சீசனில் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கெனவே சொன்னபடி பழைய போட்டியாளர்கள் சிலரை மீண்டும் வீட்டுக்குள் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது.
முதல் சீசனில் மக்களின் பேராதரவு பெற்று வைரலாகி பின்னர் பாதியிலேயே வெளியேறிய ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது விஜய் டிவி. அதேப்போல் அவருக்கு இணையான ஒரு ஆண் போட்டியாளரையும் உள்ளே கொண்டுவர திட்டமிடப்படுகிறது. எல்லா டீலும் ஓகே ஆனால் மீண்டும் இருவரையும் பிக் பாஸ் வீட்டுக்குள் பார்க்கலாம்!