Bigg Boss tamil 8 
பிக் பாஸ் தமிழ் 8

Bigg Boss Tamil 8 : இனி ஆண்கள் Vs முத்துக்குமரன், கலகம் செய்த விஜய் சேதுபதி! | Day 20

இனி கேமின் பாதை மாறும், விஜய் சேதுபதி ஆண்கள் அணியை முத்துக்குமரனுக்கு எதிராகவும் , செளந்தர்யாவுக்கு எதிராக பெண்கள் அணியையும் திருப்பி விட்டிருக்கிறார்..

Aathini

எதுக்கு இந்த பிக்பாஸ் ஷோ எனும் கேள்விக்கு சூப்பரான விளக்கத்தைக் கொடுத்தார் விஜய்சேதுபதி. அதற்கு கல்யாண்ஜியின் கவிதையை சொல்லி ஆரம்பித்தார்.

‘'ஒரு மரத்தைப் பார்த்து இதில் ஒரு அழகான பலகை இருக்கு என்று சொல்பவன் தச்சன் ஆகிறான். பலகையை பார்த்து இது ஒரு நல்ல மரம் என்று சொல்பவன் கவிஞன் ஆகிடுறான். பார்வை தான் எல்லாத்துக்கும் காரணம்.

நாம் எதிர்கொள்ளும் கடினமான சூழல்நிலையில் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதில் தான் நமக்குள் இருக்கும் மனிதன் யாரென்று தெரிந்துவிடும். நம்மை நாமே சுயபரிசோதனை செய்து, நமக்குள் இருக்கும் குறைகளை நிறைகளாக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். அதற்கான ப்ராஸஸை மேற்கொள்வதே பிக்பாஸ்.

Bigg Boss Tamil

பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் ஒவ்வொரு விளையாட்டும் நம்மை யாரென்று நமக்கு எடுத்துக் காட்டும். விளையாடுபவர்கள் மேற்கொள்ளும் தவறுகளை உணரவும், அதை சரிசெய்து மனிதத்தை துளிர் விடுவதையுமே நோக்கமாகக் கொண்டு பிக்பாஸ் உருவாக்கப்பட்டுள்ளது.'' - என்றார் விசே.

இது ஒரு சோஷியல் எக்ஸ்ப்ரீமென்ட் எனும் அடிப்படையிலேயே விஜய்சேதுபதியின் வாதம் இருந்தது. இது ஒருபக்கம் ஏற்றுக் கொண்டாலும், கமர்ஷியலுக்காக ஷோவில் மேற்கொள்ளப்படும் தகிடுதத்தோம்களுக்கு சேதுபதியின் விளக்கம் என்னவென்று தெரியவில்லை. சரி இருக்கட்டும் !

பெண்கள் வீட்டுக்குள் அடிக்கடி குரூப்பிஸம் எட்டிப் பார்க்கிறதோ என்று தோன்றுகிறது. ஏனெனில், இப்போதெல்லாம் செளந்தர்யாவும் தர்ஷாவும் ஒன்றாகவே சுத்துகிறார்கள். எப்போதுமே ஆண்கள் டீமுடன் இருக்கிறார்கள். பெண்கள் டீமை குறை சொல்வதை மட்டுமே நோக்கமாக் கொண்டிருக்கிறார்கள்.

சுனிதாவும், அன்ஷிதாவும் ஒரு கேங்... தர்ஷிகாவும் பவித்ராவும் ஒரு கேங்... என்று ஒரு டீமுக்குள் இருந்துகொண்டு தனித்தனியாக இருப்பது தெரிகிறது. அதுபோல, கடந்த வாரம் சாப்பாடு இல்லையென்று பிரச்னையாக இருந்தது. இந்த வாரம் சாப்பாடு இருந்தும் சமைக்கவில்லை என்று பிரச்னை. கில்லர் கேம் , பிக்பாஸ் ஹோட்டல், செளந்தர்யாவின் புலம்பல்கள் ஆகியவற்றை டாபிக்காக இன்றைய ஷோவில் பேசினார் விஜய்சேதுபதி.

தமிழ் சினிமாவில் ரஜினி - கமல், விஜய் - அஜித் வரிசையில் சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி பெயர்கள் இருக்கிறது. இருவரின் படங்களுக்கும் இடையே கடும் போட்டியையும் திரையில் பார்க்கலாம். ஆனால், எதார்த்தத்தில் இருவருமே ஒருவரை ஒருவர் புகழ்வதையும், விட்டுக் கொடுக்காமல் பேசுவதையும் பார்க்கலாம். அதுதான், இன்றைய ஷோவிலும் பார்க்க முடிந்தது. அமரன் புரோமோஷனுக்காக சிவகார்த்திகேயன் வந்ததையும், அவரின் படம் பத்தி பேசியதும் விஜய்சேதுபதி மீதான மரியாதையை மேலும் கூட்டியது. ஆனால், பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது விஜய்சேதுபதி பற்றி எஸ்.கே எதுவும் பேசவில்லை.

ஒருவரை சந்திக்க நேர்ந்தால் அவரிடமிருந்து எதாவது கற்றுக் கொள்ள வேண்டும். சிவகார்த்திகேயனை சந்தித்த போது அவரிடம் முத்துக்குமரன் & ஆனந்தி கேட்ட கேள்விகளை வரவேற்கிறேன் என்று கூறினார் சேதுபதி.

Bigg Boss Tamil

பிக்பாஸ் ஹோட்டல் :

இப்போதெல்லாம் சுனிதாவிடம் ஒரு கவிதையை விஜய்சேதுபதியே கேட்டு வாங்கிக் கொள்கிறார். ''பெளர்ணமில வரும் நிலா.. தினமும் நீங்க வர்றீங்க என் மனசுக்குள்ல உலா...’' என்று சொன்னதும் சேதுபதி தன்னடக்கத்துடன் ஏற்றுக் கொண்டார்.

சுனிதா கவிதைக்கு போட்டியாக, சேதுபதிக்காக ஒரு கானா பட்டினை ஜெஃப்ரியும் விஷாலும் செம சூப்பராக பாடினார்கள். இந்த கிரியேட்டிவிட்டியை கேம்லயும் காட்டுங்க கய்ஸ்!

இந்த வாரம் விளையாட்டுக்காக விஷால் செய்த தியாகத்தை பாராட்டினார் விசே. பிக்பாஸ் ஹோட்டல் டாஸ்கிற்காக ரிசப்ஷனிஸ்ட் கேரக்டருக்காக தாடியை எடுத்தார். பின்னர், பெண் வேடமிட்டு நடனமாடுவதற்காக மீசையை எடுத்தார். இந்த ஆர்வத்தை சேதுபதி பாராட்டினார். நெஜமாவே விஷால் என்டர்டெயினர் தான் !

இந்த உலகத்துக்கே புல்ஸ் ஐ எனும் டிஷ்ஷை பிரபலப்படுத்தியதற்காக அருணை பாராட்டினார். குங்குமப்பூ அப்டின்னு உங்களை கூப்பிடுறது உங்களுக்கு கஷ்டமா இருக்கான்னு கேட்க... அப்படியெல்லாம் இல்லை என அருண் சொன்னதும், புல்ஸ் ஐ என்றால் என்ன வென்றும் எனக்கும் தெரியாது என சேதுபதி பதில் சொன்னதும் எதார்த்தமாக இருந்தது.

இந்த ஷோவில் தான் கையோடு சேர் ஒன்றை தூக்கிவந்தார் விசே. இந்த ஷோவில் தான் முதல்முறையாக அமர்ந்து பேசினார்.

கில்லர் காயின்... ஆண்கள் டீமின் சம்பவம்!

கில்லர் காயின் டாஸ்க்கில் உடல் பலத்தால் மட்டுமே ஆண்கள் விளையாடியதால் மொத்த டீமையும் வறுத்தெடுத்தார் விசே. ''கோழி அமுக்குற மாதிரி அமுக்குறாங்க'’ என்று பாய்ஸ் டீமை விமர்சித்தார் தர்ஷிகா. மொத்த பெண்கள் டீமும் ஆண்கள் விளையாடியது Fair கேம் கிடையாது என்றார்கள்.

அதோடு, ரஞ்சித் சொன்ன விஷயம் தான் மாஸ். ''பெண்கள் டீமிடம் இப்படி விளையாடியதுக்கு வருந்துகிறேன். கொஞ்சம் சுவாரஸ்யமாக விளையாடியிருக்கலாம். ஆக்‌ஷனுக்கான ரியாக்‌ஷன் தெரியாமல் செய்கிறோம். பின்னர் ஃபீல் பண்ணுறோம். எதாவது முயற்சி செய்துட்டே இருக்கோம். அப்புறம், எப்போ வாழ்றதுனே தெரியலை” என்றார் ரஞ்சித்.

''தப்பை உணர்ந்து அதுல இருந்து கத்துக்கணும்னு நினைக்கிறீங்க.. உங்க வார்த்தை தான் சார் முக்கியம். அதை பாராட்டுறேன்'' என்று கூறினார் விசே.

Bigg Boss Tamil

கில்லர் கேமுக்கான திட்டம் யாருடையது என்ற கேள்விக்கு அனைவருமே முத்துக்குமரன் பெயரை கூறினார்கள். ''முத்துக்குமரன் மேல் பழிபோடுவதும் தப்பு. அவங்க பின்னாடி சொகுசாக இருக்குறதும் தப்பு. உங்களுக்கான யுனிக் கேம் எது ? உங்களுக்குனு சுயமா முடிவெடுக்குற திறமை இல்லையா'' என மொத்த ஆண்கள் டீமையும் சம்பவம் செய்தார் விசே.

முத்துக்குமரனிடம் கப் கொடுத்துவிட்டு எல்லோரும் வெளியே வந்திடுங்க என்று ஆண்கள் டீமை அட்டாக் செய்தார் விசே. இது, ஆண்கள் Vs முத்துக்குமரன் என திரும்பும் வாய்ப்பை அதிகமாக்கும்.

தப்புனா ஒருத்தர் மேல பழி போடுறதும், ஜெயித்தால் எல்லோரும் பங்கேற்றுக் கொள்வதுமே தப்பு தான். ஒரு விஷயம் தப்புனா தப்புனு சொல்லக்கூடாது. அந்த தப்பை தடுக்கணும்’ என விசேயின் ஒவ்வொரு வார்த்தையும் கோல்டன் !

சவுண்ட் சத்தத்தை குறைத்த விசே.

வாய்ப்புகள் சமமா கிடைக்கவில்லை எனும் புகாரை வைத்தார் செளந்தர்யா. பெண்களிடம் கருத்து கேட்டார். பெர்ஃபாமென்ஸ் பத்தலை என்பதே பலரின் குற்றச்சாட்டாகவும் இருந்தது. அதோடு, வாய்ப்புகள் அதிகமாக கொடுக்கிறோம் என்பதையும் நிரூபித்தனர். இறுதியாக, ''கிடைக்கும் வாய்ப்பை நன்றாக செய்தால் தான், உங்க டீமும் உங்களை நம்பும்'' என்பதை சவுண்டுக்கு உணர்த்தினார் விசே. இனிமேலாவது, சவுண்ட் அவரை நிரூபிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். நாளை யார் எலிமினேஷன் எனும் சஸ்பென்ஸொடு இன்றைய ஷோ முடிந்தது.