விஜய் சேதுபதி கலந்துகொள்ளும் வார இறுதிக்கான எபிசோட் ஷூட்டிங் நேற்று நடைபெற்றது. இதில் கடந்த மூன்று வாரங்களாக மூன்று போட்டியாளர்கள் ரவீந்தர், அர்னாவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் எனசொல்லப்பட்டது.
காரணம் வைல்டு கார்டு போட்டியாளர்களாக 5 பேர் உள்ளே களமிறக்கப்படுகிறார்கள் என்பதால் டபுள் எவிக்ஷன் கட்டாயம் என பிளான் செய்ய்யப்பட்டது. இதற்கேற்றபடி போட்டியாளர்களின் கன்டென்ட் ரெடியாக, நேற்று காலை திடீரென ஒரு எவிக்ஷன்தான் என்று சொல்லப்பட்டது.
இதனால் டேஞ்சர் ஸோனில் இருந்த அன்ஷிதா, பவித்ராவில் குறைந்த வாக்குகள் கொண்ட அன்ஷிதா வெளியேற்றப்படுவதாக திட்டமிடப்பட்டது. இதற்காக அன்ஷிதாவின் வெளியேற்ற வீடியோவெல்லாம் தயார் நிலையில் வைக்கப்பட்டது. ஆனால், திடீரென நோ எலிமினேஷன் என விஜய் சேதுபதிக்கு சொல்லப்பட்டு கடைசி நேரத்தில் அன்ஷிதா சேவ் செய்யப்பட்டார். அதனால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை. இதற்கிடையே வைல்டு கார்டு போட்டியாளர்கள் இன்று முதல் களமிறங்குகிறார்கள்.