Bigg boss 8 tamil  Vijay tv
பிக் பாஸ் தமிழ் 8

Bigg Boss 8 : உடைந்து அழுத ஜாக்குலின், டீமுக்குள் புகுந்த கருப்பு ஆடு, கிச்சன் ரெண்டானால்?! DAY - 2

15 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்றுதான் ஓடினாராம் ரவீந்திரன். அதுவும் டாஸ்க்குக்காக. பல ஆண்டுகள் கழித்து ஓடியதால் அவர் உடலில் பிரச்னைகள் ஏற்பட்டது.

Aathini

முதல் நாளிலேயே எக்கச்சக்க சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டில் நடந்தது. அன்றிரவே, ரவீந்திரனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்றுதான் ஓடினாராம் ரவீந்திரன். அதுவும் டாஸ்க்குக்காக. பல ஆண்டுகள் கழித்து ஓடியதால் அவர் உடலில் பிரச்னைகள் ஏற்பட்டது. அருணும், ரஞ்சித்தும் ரவீந்திரனை கைத்தாங்கலாக கூட்டிச்சென்று மருத்துவ தேவைக்கு உதவி செய்தனர். நள்ளிரவிலும், கேப்டனாக தர்ஷிகா முன்வந்து நின்றது நன்று.

இரண்டாம் நாள் காலை ''கருகரு கருப்பாயி'' பாடலுடன் தொடங்கியது. குத்தாட்டம் போட்ட போட்டியாளர்களில் பவித்ராவுக்கு ஹை-ஸ்கோர் கொடுக்கலாம். இன்றைய நாள் பவித்ரா நினைத்ததை முடிப்பார் என்பதை காலையிலேயே ஆட்டத்துடன் லீட் கொடுத்துவிட்டார்.

Bigg Boss Tamil Season 8

'குக்கு வித் கோமாளி'யில் ரைமிங்கில் கவிதை சொல்லி, டரியலாக்கும் சுனிதா, பிக்பாஸ் வீட்டையும் விட்டுவைக்கவில்லை. கேமரா முன்பு நின்று கொண்டு ''ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு... இனிமேல் நீங்க தான் என் ஃப்ரெண்டு’' என்று ஒரு உருட்டு உருட்டி விட்டு சிரிக்க வைத்தார்.

'‘என்னை கேர்ள்ஸூக்கு எனிமினு தான் பாய்ஸ் நினைக்கிறாங்க. நான் எல்லாத்தையும் இன்ட்ரெஸ்ட்டிங் ஆக்க நினைக்கிறேன்’'னு ஜாக்குலின் சொன்னதும் ''அது இன்ட்ரஸ்டிங் இல்ல டிஸ்டர்பிங்’' அப்டின்னு ஜாக்குலினை செஞ்சி விட்டார் சுனிதா.

அடுத்த டாஸ்க் :

''நேரம் போய்ட்டே இருக்கே, இன்னும் எதுவும் நடக்கலையே’' என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அடுத்த டாஸ்கை தொடங்கினார் பிக்பாஸ். ட்விஸ்ட் டைம் டாஸ்க். ஆண்கள் வீட்டிலிருந்து ஒருவர் பெண்கள் வீட்டுக்கும், பெண்கள் வீட்டிலிருந்து ஒருவரை ஆண்கள் வீட்டுக்கும் அனுப்ப வேண்டும்.

யார் வீட்டிலிருந்து யார் செல்கிறார்கள் என்பதை முடிவெடுத்தப் பின், பிக்பாஸிடம் கூற வேண்டும். ஆக, டீமுக்குள் ஒரு கருப்பாட்டினை உலாவ விட திட்டம் தீட்டிவிட்டது பிக்பாஸ் டீம் என்பது நன்றாகத் தெரிகிறது.

Bigg Boss Tamil Season 8

ஆண்கள் டீம் வழக்கம் போல எந்த சிக்கலும் இல்லாமல் முத்துக்குமரனை பெண்கள் வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்தார்கள். ஆனால், இதையே கன்டென்ட் ஆக்க முடிவு செய்தது பெண்கள் டீம்.

யார் போவது என்பதில் எல்லோருக்குள்ளும் சண்டை வந்தது. பவித்ரா, தர்ஷா & ஜாக்குலின் மூவருக்குள்ளும் யார் போவது என்பதில் வந்த வாக்குவாதத்தை பார்க்கும் போது, பாய்ஸ் டீம் ரொம்ப சமத்து என்று தோன்றியது.

''என்னை கேர்ள்ஸூக்கு எனிமினு தான் பாய்ஸ் நினைக்கிறாங்க... நான் எல்லாத்தையும் இன்ட்ரெஸ்ட்டிங் ஆக்க நினைக்கிறேன்’'னு ஜாக்குலின் சொன்னதும் ''அது இன்ட்ரெட்ஸிங் இல்ல டிஸ்டர்பிங்’' அப்டின்னு ஜாக்குலினை செஞ்சி விட்டார் சுனிதா. மாத்தி மாத்தி சண்டைப் போட்டு கடைசியில் பவித்ரா, ஆண்கள் வீட்டுக்கு அனுப்புவது முடிவானது.

இதற்கு நடுவே, ஒரு பக்கம் ''என்னை எல்லோரும் பாவம்'னு சொல்லுறாங்க''ன்னு பவித்ரா ஒப்பாரி வைக்க, இன்னொரு பக்கம் ''நெகட்டிவா இருக்கேன்னு என்னை எல்லோரும் ஒதுக்குறாங்க''ன்னு ஜாக்குலின் அழ என்று 'ஒரு புறாவுக்கு போரா... பெரிய அக்கப்போராக அல்லவா' இருக்கு என நமக்கு இம்சை அரசனை நினைவுபடுத்தினார்கள்.

பெண்கள் அணிக்கு முத்துக்குமரனும், ஆண்கள் அணிக்கு பவித்ராவும் இடம் மாறியதுக்குப் பிறகு, எல்லோரும் வெயிட் செய்த கிட்சன் பிரச்னையை தொடங்கினார் பிக்பாஸ்.

Bigg Boss Tamil Season 8

வீடும் இரண்டு.. குக்கிங்கும் இரண்டு !

வீடு இரண்டு என்பதால் சமையலும் இரண்டு என்று அறிவித்தார் பிக்பாஸ். அந்தந்த வீட்டுக்கு மளிகை பொருள் வாங்குவதற்கான ஷாப்பிங் டைம் டாஸ்க் நடந்தது. ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 13,500 கொடுத்து அதுக்குள் ஷாப்பிங் செய்ய வேண்டும். கூடுதலாச்சுன்னா அதுக்கேத்த மாதிரி பொருளை குறைச்சிடுவோம்னு ஒரு ட்விஸ்டோட ஷாப்பிங் டைம் தொடங்கியது.

மளிகை பொருட்களில் மொத்தமாக இருந்த இரண்டு உப்பு பாக்கெட்டையும் நைசாக லவட்டி விட்டார் தர்ஷா. உப்பு இல்லாம எப்படி சமைக்கப் போகிறது ஆண்கள் டீம்? அய்யோ பாவம்.

உப்புக்கு எங்க போறது ? உப்பு சத்யாகிரகம் இருந்துடுவோமா என்று ஆண்கள் டீம் யோசித்துக் கொண்டிருக்க, ஆண்கள் Vs பெண்கள் வீட்டின் விதிமுறைகளை அறிவித்தார் பிக்பாஸ்.

கேப்டனுக்கு விதிமுறை செல்லுமா என சந்தேகம் எழ, இரண்டு வீட்டுக்கும் கேப்டன் ஒருவர் தான். அவருக்கு எந்த விதிமுறையும் செல்லாது என அதிரடி காட்டினார் பிக்பாஸ். இது, விளையாட்டை சுவாரஸ்யமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Vijay tv

உப்பு அரசியல் செய்த ஆண்கள் டீம்

எப்படியாவது பெண்கள் அணியிடமிருந்து உப்பு வாங்க வேண்டும். அதனால், ஸ்டோர் ரூமுக்கு வந்து உங்க மளிகைப் பொருளை எடுக்க வேண்டுமென்றால் எங்களுக்கு ஒரு பாக்கெட் உப்பு கொடுங்க என்று கெஞ்சியும், மிரட்டியும் ஒரு வழியாக உப்பை வாங்கியது ஆண்கள் டீம்.

பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் சமையல் இன்று முதல் தொடங்கியது. அப்போது, ஜாக்குலினும் முத்துக்குமரனும் பேசிக்கொண்டிருக்க நடுவில் வந்து சாப்பிட வாங்க என்று ஜாக்குலினை அழைக்கிறார் ஜெஃப்ரி. உடனே, நாங்க பேசிட்டு இருக்கோம்பான்னு முத்துக்குமரன் சொல்ல... இதான்டா வாய்ப்புன்னு சண்டையாக்க முயற்சிக்கிறார் ஜெஃப்ரி. யாராவது கேப் கிடைக்காதா, சண்டைய போடுவோமா, கன்டென்ட் ஆக்குவோமா என்று திரிவது அப்பட்டமாக தெரிந்தது.

Bigg Boss Tamil Season 8

வீடு இரண்டாகிவிட்டதால் இது வைத்து தான் அடுத்தடுத்த விளையாட்டுகள் இருக்கும் என்று தெரிகிறது. வீட்டின் முக்கிய இடங்கள் ஆண்கள் அணியில் இருப்பதால், இனி ஆண்களே அடித்து ஆடுவார்கள் என்று தெரிகிறது. பெண்கள் என்ன பாடு படப் போகிறார்கள் என்று பொருத்திருந்து பார்க்கலாம்.