பிக் பாஸ் தமிழ் 8 
பிக் பாஸ் தமிழ் 8

பிக் பாஸ் முதல் ப்ரோமோ... முதல் எவிக்‌ஷன்... விஜய் டிவிக்கு குவியும் கண்டனங்கள்!

''இது டிஆர்பிக்காக நடத்தப்படும் நாடகம்... முதல் நாளிலேயே ஒருவரை வீட்டுக்குள் வரவழைத்து அடுத்த நாளே எப்படி எலிமினேட் செய்ய முடியும். மக்கள்தானே யார் வெளியே போக வேண்டும் என முடிவெடுப்பார்கள்'' என ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது

Kavitha

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 8 நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கிறது. எப்போதுமே பிக் பாஸில் முதல் இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் எவிக்‌ஷன் இருக்கும். ஆனால், இந்த முறை பார்வையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கவேண்டும், டிஆர்பியை கூட்ட வேண்டும் என முடிவெடுத்து இறங்கியடித்திருக்கிறது விஜய் டிவி.

நேற்று முதல் நாளில் 9 ஆண்கள், 9 பெண்கள் என 18 போட்டியாளர்களும் வீட்டுக்குள் போனதுமே அடுத்த 24 மணி நேரத்தில் எவிக்‌ஷன் இருக்கு எனச்சொன்னார். அவ்வளவுதான் பற்றிக்கொண்டது பரபரப்பு.

பிக் பாஸ் தமிழ்

இப்போது ''வெளியேறப்போகும் முதல் போட்டியாளர் யார்?'' எனப் ப்ரோமோவையும் வெளியிட்டுவிட்டது விஜய் டிவி. இளம் போட்டியாளராக நிகழ்ச்சிக்குள் நுழைந்த சஞ்சனாதான் வெளியேறியிருப்பதாக தகவல்கள் பரவிவரும் நிலையில் விஜய் டிவி இது டிஆர்பிக்காக அடிக்கும் ஸ்டன்ட் என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ''இது டிஆர்பிக்காக நடத்தப்படும் நாடகம்... முதல் நாளிலேயே ஒருவரை வீட்டுக்குள் வரவழைத்து அடுத்த நாளே எப்படி எலிமினேட் செய்ய முடியும். மக்கள்தானே யார் வெளியே போக வேண்டும் என முடிவெடுப்பார்கள்'' என சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள் பிக் பாஸ் ரசிகர்கள்.

டிஆர்பிக்காக விஜய் டிவி கொடுக்கும் சர்ப்ரைஸா, இல்லை இதன்பின் வேறு ஏதும் வியூகமோ, காரணமோ இருக்கிறதா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்துவிடும்.