பிக் பாஸ் தமிழ் 8 
பிக் பாஸ் தமிழ் 8

பிக் பாஸ் வீட்டுக்குள் 5 வைல்டு கார்டு என்ட்ரி… புதிதாக வரும் போட்டியாளர்கள் யார், யார்?

மொத்தம் ஆண்களில் 3 பேரும், பெண்களில் இருவரும் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் வர இருக்கிறார்கள்.

Kavitha

தீபாவளி ஸ்பெஷலாக பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு போட்டியாளர்களை இறக்க திட்டமிட்டிருக்கிறது விஜய் டிவி. முதலில் வீட்டுக்குள் களமிறங்கிய 18 போட்டியாளர்களில் ரவீந்திரன், அர்னாவ், தர்ஷா ஆகியோர் எலிமினேட் ஆகிவிட்ட நிலையில் புதிதாக ஐந்த்ய் போட்டியாளர்கள் வைல்டு கார்டு மூலம் களமிறங்குகிறார்கள்.

போட்டியின் ஆரம்பத்திலேயே வீட்டுக்குள் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட டிஎஸ்கே என்கிற ஸ்டாண்ட் அப் காமெடியனான திருச்சி சரவணகுமார் வீட்டுக்குள் நுழைகிறார். கலகக்கப்போவது யாரு? மூலம் பிரபலமான டிஎஸ்கே சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

பிரியதர்ஷன்
ஸ்வாகதா
விஜய் சேதுபதியுடன் திருச்சி சரவணகுமார்

கடந்த சீசனில் போட்டியாளராக பங்கேற மாயா கிரிஷ்ணனின் சகோதரி ஸ்வாகதாவும் இந்த முறை போட்டியாளராக நுழைய இருக்கிறார்.இவர்களோடு பிரியதர்ஷன் என்கிற போட்டியாளரும் கலந்துகொள்கிறார். இவர் ஏற்கெனவே ‘ஜோடி ஆர் யூ ரெடி' நிகழ்ச்சியில் தர்ஷிகாவுடன் இணைந்து ஆடியவர். இவரைத்தான் பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டுவருகிறது விஜய் டிவி.