ஈஸ்வரியை போலீஸ் கைது செய்ய வந்த விஷயத்தை செழியன் போன் செய்து பாக்கியாவுக்கு சொல்கிறான்
ராதிகாவிடம் கோபியின் அம்மாவைப் பற்றி போலீஸில் புகார் அளித்திருப்பதாக ஷாக் கொடுக்கிறாள் கமலா.
பாக்கியா ஈஸ்வரியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறாள்.
அதிர்ச்சி கொடுத்த போலீஸ் !
பாக்யா வீட்டுக்கு வந்து விசாரிக்கும் போலீஸ் ''இதுக்கு ஈஸ்வரி மட்டும்தான் காரணமா? இல்ல நீங்களும் உடந்தையா'' என்று கேட்க ''நீங்க என்ன சொல்றீங்கன்னு எங்களுக்கு புரியல... பாட்டி மேல யார் கம்ப்ளெய்ன்ட் கொடுத்தது'' என்று விசாரிக்க கமலா என்பவர் கொடுத்து இருப்பதாக சொன்னதும் ''கமலாவா அப்படி யாரும் எங்களுக்கு தெரியாது'' என்று எழில் சொல்கிறான். உடனே செல்வி ''ஐயோ தம்பி ராதிகாவோட அம்மா'' என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். ''ஈஸ்வரி நாளைக்கு வந்துருவாங்களா'' என்று போலீஸ் கேட்க ''வந்திடுவாங்க'' என்று செழியன் சொல்ல போலீஸ் ''அப்போ நாளைக்கு வரோம்'' என்று கிளம்பி செல்கின்றனர்.
பாக்யாவின் மகிழ்ச்சி!
பாக்கியா குடும்பத்தினர் எல்லோரும் போலீசால் அதிர்ச்சியில் இருக்க மறுபக்கம் ஈஸ்வரி, ராமமூர்த்தி, இனியா, பாக்யா என எல்லோரும் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு சந்தோஷமாக பேசியபடி இருக்கின்றனர். எழில் இ''ந்த விஷயம் அம்மாவுக்கு தெரிய வேண்டாம்'' என்று சொல்ல, ''அம்மாவுக்கு சொல்லாம எப்படி இருக்கிறது... அவங்களுக்கு நிச்சயம் தெரியணும்... இல்லனா ரொம்ப பதட்டம் ஆயிடுவாங்க'' என்று செழியன் சொல்கிறான். எழில் வேண்டாம் என்று சொல்ல செழியன் பாக்யாவுக்கு போன் செய்கிறான்.
பாக்யாவுக்கு அதிர்ச்சி!
பாக்கியா போனை எடுத்து ''எழில் கதை சொல்லிட்டு வந்துட்டானா'' என்று கேட்க செழியன் ''கதை சொல்லவே போகல... இங்க வேறொரு பிரச்சனை'' என்று சொல்ல பாக்கியா ''ஏன் என்ன ஆச்சு'' என்று பதறுகிறாள். பிறகு செழியன் ''கொஞ்சம் தனியா வந்து பேசுமா... நான் சொல்றதை கேட்டு பதறாத'' என்று சொல்லி போலீஸ் வந்து ஈஸ்வரியை விசாரித்த விஷயம் அத்தனையையும் சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறாள்.
உண்மையை மறைத்த பாக்கியா!
போன் பேசிவிட்டு டல்லாக வந்த பாக்கியாவை பார்த்து ராமமூர்த்தி ''என்ன ஆச்சு'' என்று கேட்க ''எழில் கதை சொல்லல'' என்று சொல்ல ஈஸ்வரி ''இன்னைக்கு இல்லன்னா இன்னொரு நாள் சொல்லப்போறான்... கவலைப்படாத'' என்று ஆறுதல் சொல்கிறாள்.
ராதிகாவுக்கு அதிர்ச்சி கொடுத்த கமலா!
ராதிகா வீட்டுக்கு வர கமலா அவளை உட்கார வைத்து கோபி ''கொன்னுடுவேன்'' என்று மிரட்டிய விஷயத்தை சொல்ல ராதிகா கோபப்பட்டு கோபிக்கு போன் செய்ய கமலா ''நான் எல்லாத்துக்கும் ஒரு வழி பண்ணிட்டேன்'' என்று ஈஸ்வரி மீது கம்ப்ளெய்ன்ட் கொடுத்த விஷயத்தை சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறாள். ''ஏம்மா இப்படி பண்ண'' என்று கேட்க ''அந்த அம்மா ஜெயிலுக்கு போனாதான் மாப்பிள்ளைக்கு அவங்க பண்ணது எவ்வளவு பெரிய தப்புனு தெரிய வரும்'' என்றுசொல்லி ராதிகாவை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறாள் கமலா. ராதிகா தன் அம்மா செய்ததை நினைத்து பதறிப்போகிறாள்.
வீட்டுக்கு வரும் பாக்கியா!
கும்பகோணத்தில் இருந்து பாக்கியா உட்பட எல்லோரும் சென்னைக்கு கிளம்பி வர ஈஸ்வரி சந்தோஷமாக இருப்பதை பார்த்து பாக்கியா ''வீட்டுக்கு போனதும் என்ன நடக்க போகுதுன்னு தெரியல? அத்தை இதை எப்படி தாங்கிக்க போறாங்க'' என்று யோசிக்கிறாள்.
ஈஸ்வரியின் கைதை தடுக்க பாக்கிய செய்யப்போவது என்ன, கோபியை சமாளிக்க ராதிகா செய்யப்போவது என்ன?