‘சிறகடிக்க ஆசை’ 
சீரியல் எபிசோட் ஹைலைட்ஸ்

‘சிறகடிக்க ஆசை’ இன்று : சிறந்த ஜோடி டைட்டிலை வென்ற முத்து - மீனா... கடுப்பான ரோகிணி - மனோஜ்!

விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (14-08-2024) எபிசோட் ஹைலைட்ஸ்!

சிவா

பல்பு வாங்கிய மனோஜ்!

எல்லோரும் முத்து, மீனா பேசியதை கேட்டு கை தட்டுவதை பார்த்து மனோஜ் மற்றும் ரோகிணி என இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அடுத்ததாக போட்டியின் கடைசி ரவுண்டில் ஆண்கள் மட்டும்தான் பதில் சொல்லப் போகிறார்கள், சவாலான சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என நடுவர்கள் சில கேள்விகளை கேட்பார்கள் என தொகுப்பாளர் சொல்கிறார். 

அதன் பிறகு உங்க அம்மாவும் மனைவியும் ஒரு இடத்துல ஆபத்துல இருக்காங்க, அந்த வழியா நீங்க வண்டியில் வர்றீங்க யாரை காப்பாத்துவீங்க ஒருத்தரை மட்டும் தான் காப்பாற்ற முடியும் என்று சொல்ல மனோஜ் ‘’நான் என் மனைவியை தான் காப்பாத்துவேன். நானும் என் மனைவியும் சந்தோஷமா வாழணும்கிறதுதான் என் அம்மாவோட ஆசை. அவங்களும் எங்களை சந்தோஷமா அனுப்பி வைப்பாங்க’’ என்று சொல்கிறான். அதன் பிறகு ரவியிடம் இதே கேள்வியை கேட்க ஸ்ருதி ‘’அவன் என்னை தான் கூட்டிட்டு போவான்... அவங்க அம்மாவ அவங்க அப்பா வந்து கூட்டிட்டு போவாரு’’ என்று சொல்ல ரவியும் ‘’ஆமா நான் என்னுடைய மனைவியை தான் கூட்டிட்டு போவேன்’’ என்று சொல்கிறான். 

‘சிறகடிக்க ஆசை’

முத்து சொன்ன பதில்!

முத்துவிடம் இந்தக் கேள்வியை கேட்க ‘’என்ன சார் இது இப்படி கேள்வி கேக்குறீங்க… பொண்டாட்டி வந்துட்டதும் அம்மாவை விட்டுட முடியுமா? அம்மாவும் முக்கியம் தானே... ரெண்டு பேரையும் கூட்டிட்டு போக முடியாதா’’ என்று கேட்க ‘’ஒருத்தர தான் கூட்டிட்டு போக முடியும்’’ என்று நடுவர்கள் சொல்கின்றனர். உடனே முத்து ‘’என் பொண்டாட்டி நல்லா வண்டி ஓட்டுவா… நான் வண்டியை கொடுத்து அவளையும் என் அம்மாவையும் அனுப்பி வச்சிட்டு அங்கேயே காத்துட்டு இருப்பேன்.‌ என்னை கூட்டிட்டு போக என் பொண்டாட்டி கண்டிப்பா வருவா’’ என்று சொல்ல நடுவர்கள் அசந்து போகின்றனர். அடுத்ததாக திருப்திகரமாக வாழ என்ன தேவை என்று என்று கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு பதில் சொல்ல கொஞ்ச நேரமும் கொடுத்து பார்ட்னருடன் ஆலோசித்து பதில் சொல்ல சொல்கின்றனர்.

‘சிறகடிக்க ஆசை’

மனோஜ் போடும் திட்டம்!

போட்டியில் பங்கேற்ற ஐந்து ஜோடிகளும் என்ன பதில் சொல்லலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருக்க ‘’திருப்திகரமான வாழ்க்கைனா நமக்கு பிடிச்ச மாதிரி சந்தோஷமா வாழ்றதுதானே’’ என்று ரோகிணி சொல்ல மனோஜ் ‘’ஆனா, அந்த மாதிரி பதில் சொல்லக்கூடாது. முத்து சொன்ன மாதிரி நாமளும் வித்தியாசமா பதில் சொல்லணும். மத்தவங்களுக்காக வாழணும்… மத்தவங்க சந்தோஷத்துக்காக வாழணும்னு சொல்லலாம்… கைதட்டும் கிடைக்கும் பரிசும் நமக்கு தான் கிடைக்கும்’’ என்று பிளான் போடுகிறான். 

இன்னொரு பக்கம் ஸ்ருதி ரவியிடம் ‘’நீ பாட்டுக்கு 3 குழந்தையை பெத்துக்கணும்னு ஒரு பதிலை சொல்லாத ரெண்டு பேரும் யோசிச்சு பேசலாம்’’ என்று சொல்கிறாள்.  முத்து, மீனாவிடம் ‘’என்ன மீனா பதில் சொல்றது’’ என்று கேட்க ‘’இப்பவே நாம திருப்திகரமான வாழ்க்கை தானே வாழ்றோம்’’ என்று சொல்ல முத்து ‘’சரி விடு மனசுக்கு தோன்றத சொல்லுவோம்… அதுதான் சரியா இருக்கும்’’ என்று சொல்கிறான். 

ஆதாரத்துடன் சிக்கிய மனோஜ்! 

அதன் பிறகு ஐந்து ஜோடிகளும் மேடை ஏற ஆளுக்கு ஒரு பதில்களை சொல்கின்றனர். மனோஜ் ‘’மத்தவங்களுக்காக வாழணும், மத்தவங்களுடைய சந்தோஷத்துக்காகவே வாழணும். அதுதான் திருப்திகரமான வாழ்க்கை’’ என்று சொல்ல கூட சேர்ந்து ரோகிணியும் அளந்து விடுகிறாள். ரவி மற்றும் ஸ்ருதி நமக்கு பிடிச்ச மாதிரி வாழணும்… பிடித்ததை செய்யணும், பிடிச்சதை சாப்பிடணும்... நமக்காக வாழனும்’’ என்று சொல்கின்றனர்.

‘சிறகடிக்க ஆசை’

மீண்டும் அசர வைத்த முத்து!

‘’சாப்பிடும்போது மட்டும்தான் திருப்தி வரும். பசிக்குதுன்னு பழைய சோறு சாப்பிட்ட பிறகு நிறைய பிரியாணி கொண்டு வந்து கொடுத்தாலும் வேண்டாம்னு தான் சொல்லுவோம். ஆனா வாழ்க்கையில அப்படி கிடையாது. எவ்வளவு கிடைச்சாலும் திருப்தி அடைய மாட்டோம். நான் கார் ஓட்டி ஓடி ஓடி உழைக்கிறேன். மீனா பூ கட்டி உழைக்கிறாள். ரெண்டு பேரும் இன்னைக்கு போல எப்பவும் ஓடிக்கிட்டே இருந்தாலே எப்போதும் திருப்தியான வாழ்க்கை கிடைக்கும்’’ என்று பதில் சொல்லி மீண்டும் ஸ்கோர் செய்கின்றனர்.  

இறுதி கேள்வி!

‘’சண்டைனு வந்தா யார் முதலில் சமாதானம் செய்வாங்க’’ என்று நடுவர்கள் கேள்வி கேட்க மனோஜ் ‘’நாங்க ரெண்டு பேரும் சண்டையே போட்டுக்க மாட்டோம், எங்களுக்குள்ள அந்த அளவுக்கு அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு’’ என்று சொல்கின்றான். ஸ்ருதி ‘’கண்டிப்பா ரவி தான் கேட்பான். ஏன்னா அவன் தான் தப்பு பண்ணுவான்’’ என்று சொல்ல ரவி ‘’பொண்டாட்டி கிட்ட இருந்து Saree என்ற வார்த்தையை எதிர்பார்க்கலாம்… ஆனா, sorry என்ற வார்த்தையை எதிர்பார்க்க முடியாது’’ என்று சொல்ல எல்லோரும் சிரிக்கின்றனர். 

அடுத்ததாக முத்து ‘’இந்த கேள்வியை முதல்ல நீங்க என்கிட்ட தான் கேட்டு இருக்கணும்… ஏன்னா, எங்க ரெண்டு பேருக்குள்ள அவ்வளவு சண்டை வரும். நாங்க மன்னிப்பெல்லாம் கேட்டுக்க மாட்டோம். நைட்டு வேலை முடிச்சுட்டு வரும்போது அல்வா வாங்கிட்டு வருவேன். கூடவே மல்லிப்பூவும் வாங்கிட்டு வரலாம். ஆனால், பூ கட்டுறவளுக்கே பூ வாங்கிட்டு வந்து கொடுக்க முடியாதுல்ல.. அதுவும் இல்லாம என் பொண்டாட்டி கையில எப்பவும் மல்லி பூ வாசம் இருந்துக்கிட்டே இருக்கும்’’ என்று சொல்கின்றான். பிறகு மீனா புருஷன் பொண்டாட்டினா சண்ட வரத்தான் செய்யும். அப்படி சண்டை வந்தா தான் அவங்களுக்குள்ள புரிதல் அதிகமாகும். நான் அவருக்கு பிடிச்சதை சமைச்சு வைப்பேன். அதை சாப்பிட்டுட்டு சாதாரணமா பேச ஆரம்பிச்சிடுவாரு’’ என்று சொல்ல எல்லோரும் கை தட்டுகின்றனர். 

‘சிறகடிக்க ஆசை’

வாயை கொடுத்து மாட்டிய மனோஜ்! 

அதைத் தொடர்ந்து வெற்றியாளர் யார் என அறிவிக்கப் போவதாக சொல்லி முதலில் உங்களுடைய பர்ஃபாமன்ஸ் பற்றி பேசிடலாம் என்று நடுவர்கள் மனோஜ் பெயரை எடுக்க நாங்க தானே வின் பண்ணோம் என்று ஆர்வக்கோளாறாக பேச ‘’கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, எங்களையும் பேச விடுங்க’’ என்று சொல்லும் நடுவர்கள் ‘’நீங்க சொன்னது எல்லாமே பாலிஷான பதிலா இருந்தது. போட்டியில ஜெயிக்கணும் என்பதற்காகவே பேசின மாதிரி இருந்தது என்று சொல்ல நாங்க உண்மையா தான் பதில் சொன்னோம்‌. உங்களுடைய கேள்விகள் தான் தப்பு’’ என்று மனோஜ் நடுவர்கள் மீது பழி போடுகிறான். 

உடனே நடுவர்கள் ‘’நீங்க எங்க மேலயே பழி சொல்றீங்களா… நாங்க சரியா தான் இருக்கோம்னு நிரூபிக்க வேண்டாமா’’ என்று சொல்லி ஒரு வீடியோவை ப்ளே பண்ண அதில் மனோஜ் வெற்றி பெறுவதற்காக மத்தவங்களுக்காக வாழணும் என பேசலாம் என்று பிளான் பண்ணிய விஷயம் டெலிகாஸ்ட் ஆக அதை பார்த்து விழி பிதுங்கி நிற்கிறான். 

‘சிறகடிக்க ஆசை’

அடுத்ததாக ‘’ரவி, ஸ்ருதி இன்னமும் லவ்வர்சா தான் இருக்காங்க அவங்க ஹஸ்பண்ட் & வைஃபா மாறவே இல்ல.. அவங்களுக்குள்ள இன்னும் மெச்சூரிட்டி வரவேண்டும்’’ என்று சொல்ல ஸ்ருதி ‘’நாங்க கல்யாணத்துக்கு பிறகு லவ்வர்ஸாதான் இருக்கணும்னு ஆசைப்படுறோம்… அதை நீங்களே சொல்லிட்டீங்க ரொம்ப தேங்க்ஸ்’’ என்று சொல்ல ரவியும் ‘’எங்களுக்கு இதுவே போதும்’’ என்று சந்தோஷப்படுகிறான். 

‘’மனோஜ் மற்றும் ரோகிணி நாங்க சண்டையே போட்டுக்க மாட்டோம்னு சொன்னாங்க புருஷன் பொண்டாட்டினா சண்டை வரணும். இல்லன்னா அவங்க ரெண்டு பேரும் ஏதோ ஒரு ரகசியத்தை மறைச்சுகிட்டு வாழுறாங்கனு தான் அர்த்தம்’’ என்று சொல்கின்றனர். 

டைட்டிலை வென்ற முத்து, மீனா!

இறுதியாக எல்லா கேள்விக்கும் வெளிப்படையாக ரொம்ப யதார்த்தமாக பதில் சொன்னது முத்து மீனா தான். அன்பு பாசம் புரிதல் எவ்வளவு முக்கியமோ அதேபோல சகிப்புத்தன்மையும் முக்கியம். அது முத்து மீனா கிட்ட ரொம்பவே இருக்கு. அவங்க இப்படி இருந்தாலே அங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்று சொல்லி வெற்றியாளராக அறிவிக்க இருவரும் சந்தோஷப்படுகின்றனர். இதை பார்த்து மனோஜ் மற்றும் ரோகிணி பயங்கர கடுப்பாகின்றனர். 

‘சிறகடிக்க ஆசை’

பல்பு வாங்கிய விஜயா!

அடுத்ததாக போட்டி முடிந்து மனோஜ் மற்றும் ரோகிணி முதலாவதாக வீட்டுக்கு வர விஜயா நீங்க தான் ஜெயிச்சு இருப்பீங்கனு எனக்கு தெரியும் என்று ஆர்வமாக ஆர்த்தி எடுக்க வர நாங்க ஜெயிக்கவில்லை என்று ஷாக் கொடுக்கின்றனர். அதன் பிறகு ரவி மற்றும் ஸ்ருதி வீட்டுக்கு வர விஜயா இவங்கதான் ஜெயிச்சாங்களா தள்ளுடா என்று மனோஜை தள்ளிவிட்டு ஆரத்தி எடுக்க வர இவர்களும் நாங்க ஜெயிக்கல என்று சொல்கின்றனர். அப்போ வேற யாரோ ஜெயிச்சிட்டாங்களா என்று விஜயா கேள்வி கேட்கிறாள். 

வெற்றியைக் கொண்டாட வந்த மீனா குடும்பம்!

அதன் பிறகு மீனாவின் குடும்பம் வெற்றியை கொண்டாட வீட்டிற்கு வர விஜயா உங்களோடு சேர்ந்து கருவேப்பிலை மாதிரி இவங்களும் வந்துட்டாங்களா என்று வெறுப்பை காட்டுகிறாள். போட்டிக்கு போன படிச்சவங்க இவங்க ரெண்டு பேரும் தோத்து போய் வந்திருக்காங்க… அவங்க எங்க ஊர் சுத்த போய்ட்டாங்களா என்று முத்து, மீனாவை நக்கலாக பேசுகிறாள். 

மேள தாளத்துடன் வந்த முத்து, மீனா! 

அதன் பிறகு முத்து, மீனா மேள தாளத்துடன் வர ரவி இவங்க தான் ஜெயிச்சாங்க என்று சொல்ல விஜயா பல்பு வாங்குகிறாள். பிறகு சீதா கருவேப்பிலை ஒட்டிக்கிட்டு வந்தாலும் சமையல்ல முதல்ல அதை தான் பயன்படுத்துவீங்க, என்ன சரி தானே அத்தை என்று பதிலடி கொடுக்கிறாள். 

முத்து - மீனா மாலையை மாற்றிக் கொண்டு வெற்றியை கொண்டாடுகின்றனர்!