விஜயாவாக மாறிய ஸ்ருதி!
‘’ஹாய் எல்லாருக்கும் வணக்கம்… இது என்னுடைய ஒரிஜினல் வாய்ஸ். நான் இப்போ என் மாமியார் மாதிரி பேச போறேன்’’ என்று சொல்லி விஜயா பேசுவதை போல பேசி அசத்துகிறாள் ஸ்ருதி. அதன் பிறகு நான் ஆண் குரலிலும் பேசுவேன் என்று சொல்கிறாள். இப்போ என் ஹஸ்பண்ட் ரவி வாய்ஸ்ல பேசப் போறேன் என்று சொல்லி ரவியை போலவே பேசிக்காட்ட அனைவரும் ஆச்சரியத்தோடு கைதட்டுகின்றனர். மனோஜ் ‘’உன் பொண்டாட்டி உன்னை டோட்டல் டேமேஜ் பண்ணிட்டா’’ என கலாய்க்கிறான்.
மீனா செய்த சாகசம்!
அதைத்தொடர்ந்து மீனா மேடை ஏற கண்ணை கட்டிக் கொண்டு அசால்ட்டாக சரசரவென பூக்களை கட்டுகிறாள். முத்து கைதட்டி ‘’அப்படித்தான் வா வா’’ என்று சொல்லி மீனாவை உற்சாகப்படுத்த மனோஜ் ‘’இவன் என்ன இப்படி கத்திட்டு இருக்கான்’’ என்று சொல்ல ரவி ‘’அவன் அண்ணியை என்கரேஜ் பண்றான் உனக்கு என்னடா’’ என்று பல்பு கொடுக்கிறான். முதல் போட்டி முடிந்ததும் அடுத்ததாக இரண்டாவது போட்டி தொடங்குகிறது. கணவன் மனைவி நேருக்கு நேராக உட்கார்ந்து முகத்தை பார்த்தபடி இருவருக்கும் இடையேயான புரிதல் குறித்து பேச வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கின்றனர்.
மனோஜ் சொன்ன வார்த்தை!
முதலாவதாக மனோஜ் மற்றும் ரோகிணி போட்டியில் பங்கேற்கின்றனர். மனோஜ் ‘’என் மனைவி எனக்கு கிடைச்ச பெரிய கிஃப்ட்’’ என ரோகினி குறித்து பெருமையாக பேசுகிறான். ‘’நான் டவுணாக இருந்த காலத்துல என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமா எப்பவும் எனக்கு சப்போர்ட்டா இருக்கா. ஹஸ்பண்ட் அண்ட் வைஃபுக்குள்ள ஒளிவு மறைவு இருக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க.. எப்படி அப்படி இருக்க முடியும்னு யோசிச்சிருக்கேன்… ஆனா ரோகிணியால முடியும். இதுவரைக்கும் அவ என்கிட்ட எதையும் மறைச்சது கிடையாது. தினமும் நடந்த விஷயத்தை என்கிட்ட சொல்லிடு வா’’ என்று சொல்ல ரோகிணி குற்ற உணர்ச்சியில் கண்கலங்கி மனோஜ் வாயை பொத்துகிறாள். ‘’இதுக்கு மேல நீ எதுவும் சொல்ல வேண்டாம்… நீ என் மேல இவ்வளவு அன்பா நம்பிக்கையா இருக்கேனு இப்பதான் நான் புரிஞ்சுகிட்டேன்’’ என்று கண் கலங்குகிறாள். ‘’நீ எனக்கு ஹஸ்பென்டா கிடைச்சதுக்கு நான் தான் லக்கியா ஃபீல் பண்ணனும்’’ என சொல்கிறாள்.
மேடையில் ரவியுடன் வந்த வாக்குவாதம்!
அடுத்ததாக ரவி ஸ்ருதி மேடைக்கு வருகின்றனர். ரவி ‘’ஸ்ருதி எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட், நல்ல மனைவி, நல்ல சோல் மேட்’’ என சொல்கிறான். ‘’என்னை லவ் பண்ணி அவளுடைய குடும்பத்தை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டா. எனக்கு கூட அப்போ அவ்வளவு தைரியம் கிடையாது. எங்க அப்பா அம்மாவுக்கு நாங்க மூணு பசங்க… அதே மாதிரி நாங்களும் மூணு குழந்தை பெத்துக்கணும்… அதுதான் என்னுடைய ஆசை’’ என்று சொல்ல ஸ்ருதி அப்செட் ஆகிறாள். ‘’இது நாம ரெண்டு பேரும் பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம்… என்னை கேட்காம நீ எப்படி சொல்லலாம்’’ என்று மேடையிலேயே வாக்குவாதம் செய்ய ரவி ‘’சரி கூல்’’ என்று சொல்ல ஸ்ருதி ‘’இது ஹெல்தியான ஆர்கியுமென்ட்தான்’’ என்று சொல்லி விடைபெறுகிறாள்.
பக்கவாக ஸ்கோர் செய்த முத்து, மீனா!
அடுத்ததாக முத்து மீனா மேடைக்கு வர முத்து மீனாவின் கையைப் பிடித்து கொண்டு கண்ணையே பார்க்க மீனா ‘’பேசுங்க.. என் கண்ணையே எதுக்கு பாக்குறீங்க… அங்கு என்ன தெரியுது’’ என்று கேட்க முத்து ‘’என் உலகமே தெரியுது… அங்கேயும் நீ தான் இருக்க… இங்கேயும் நீ தான் இருக்க’’ என இதயத்தை தொட்டு பேச தொகுப்பாளர் ‘’நீங்களே பேசிக்கிட்டா எப்படி எங்களுக்கும் கேட்கிற மாதிரி சொல்லுங்க’’ என்று சொல்கிறார்.
அதன் பிறகு மீனா நான் பேசுறேன் என்று சொல்லி முத்துவை பற்றி பெருமையாக பேசுகிறாள். ‘’முதல் முறையா அவர பார்க்கும்போது ஒருத்தர அடிச்சுக்கிட்டு இருந்தாரு.. சந்தர்ப்ப சூழ்நிலையால் அவருக்கு மனைவியானேன். இவரோட எப்படிடா வாழப் போறோம் அப்படின்னு தான் தோணுச்சு… ஆனா போக போகத்தான் அவருடைய மனச நான் புரிஞ்சுகிட்டேன். யாராவது தப்பு பண்ணா கோபப்படுவாரு… யாருக்காவது உதவினா முதல் ஆளாக ஓடி வந்து நிற்பாரு. கடவுள் என்னை சரியான ஒருத்தர் கிட்ட தான் கொண்டு வந்து சேர்த்திருக்காரு.. போன வருஷம் என் அப்பா எங்கள விட்டு போயிட்டாரு.. இப்போ என் புருஷன் மூலமா என் அப்பாவை பார்க்கிறேன். அவருடைய அரவணைப்பு மூலமா என் அம்மாவை பார்க்கிறேன்’’ என்று கண் கலங்குகிறாள். ‘’எனக்கு என் புருஷன் மட்டும் இருந்தா போதும்… வேற எதுவும் வேண்டாம்’’ என்று சொல்கிறாள். அடுத்ததாக எல்லோரும் ஜோராக கைதட்ட அதை பார்த்து மனோஜ் பல்பு வாங்குகிறான்.
மூன்றாவது ரவுண்டு!
அடுத்து மூன்றாவது ரவுண்டு தொடங்க இதில் கணவன், மனைவி எந்த அளவுக்கு புரிதலோடு இருக்கீங்க என்பது குறித்து நடுவர்கள் சில கேள்வி கேட்பார்கள் என்று தொகுப்பாளர் சொல்கிறார். முதலாவதாக ரவி மற்றும் ஸ்ருதியுடன் ‘’உங்க பார்ட்னர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா’’ என்று கேள்வி கேட்க ரவி ‘’எனக்கு தெரியாது’’ என்று சொல்ல ஸ்ருதி எனக்கும் தெரியாது என்று சொல்கிறாள். ‘’அவனுடைய செலவுக்கு அவன் சம்பாதிக்கிறான்… என்னுடைய செலவுக்கு நான் சம்பாதிக்கிறேன்… குடும்பத்துக்கு ரெண்டு பேரும் ஷேர் பண்ணி கொடுத்துடுவோம்’’ என்று சொல்கிறாள்.
அடுத்ததாக மனோஜ் மற்றும் ரோகிணியிடம் இதே கேள்வியை கேட்க மனோஜ் ‘’முதல்ல இந்த கேள்வியே தப்பு. நான் ஒரு பிசினஸ்மேன்… என்கிட்ட இந்த மாதிரி கேள்வி கேட்கக்கூடாது… முதல்ல நீங்க கேள்வியை மாத்துங்க’’ என்று மனோஜ் சொல்ல நடுவர்கள் ‘’கணவன் மனைவிக்குள்ள எந்த அளவுக்கு புரிதல் இருக்கு என்பதை தெரிஞ்சுக்கணும்னா அவங்களோட பர்சனல தெரிஞ்சுக்கணும்’’ என்று சொல்கின்றனர்.
‘’உங்களால சொல்ல முடியும்னா சொல்லுங்க இல்லன்னா சொல்லலைன்னு சொல்லிடுங்க… நாங்க எழுதிக்கிறோம்’’ என்று சொல்ல மனோஜ் ‘’சொல்ல விருப்பம் இல்ல தான் இருந்தாலும் போட்டி என்பதால் சொல்றேன்’’ என்று ‘’இப்போதைக்கு ஆயிரத்தில் தான் சம்பாதிக்கிறேன்… கூடிய விரைவில் லட்சங்கள், கோடியில் சம்பாதிப்பேன் என்று சொல்கிறான். இவர் பேசின பேச்சுக்கு கோடியில சம்பாதிக்கிறாருனு நினைச்சேன்… இதுக்கே இவ்வளவு பில்டப்பா என்று நடுவர்கள் நக்கலாக பேசிக் கொள்கின்றனர்.
உளறிய ரோகிணி!
அதன் பிறகு ரோகிணியிடம் இந்த கேள்வியை கேட்க ‘’ரோகிணி நான் ஐம்பதாயிரம் சம்பாதிக்கிறேன். 25 ஆயிரம் என்னுடைய செலவுக்கு எடுத்துப்பேன். டிரஸ் எடுக்கணும், மேக்கப் திங்ஸ் வாங்கணும், கஸ்டமர்க்கு காம்ப்லீமென்ட்ரியா ஏதாச்சு கொடுக்கணும் அதுக்கு ஏதாவது வாங்கணும். பிளாக் மெயில் பண்றவங்களுக்கு பணம் கொடுக்கணும்’’ என்று உளறி விடுகிறாள். ‘’பிளாக் மெயில் பண்றவங்களா’’ என்று நடுவர்கள் கேட்க ‘’இந்த ரோட்ல குழந்தையை வச்சுக்கிட்டு பணம் கேட்கிறவங்கள சொல்றேன். அதுவும் ஒரு வகையான பிளாக் மெயில்தானே’’ என்று சமாளிக்கிறாள்.
மொத்த அரங்கத்தையும் கவர்ந்த முத்து, மீனா!
மீனாவிடம் இந்த கேள்வியை கேட்க முத்து ‘’நான் மட்டும் இல்ல என் பொண்டாட்டியும் சம்பாதிக்கிறா’’ என்று மீனாவின் மாத வருமானம் எவ்வளவு? செலவு எவ்வளவு என மொத்தத்தையும் கணக்கு போட்டு கச்சிதமாக சொல்ல மீனா சந்தோஷப்படுகிறாள். அதைத்தொடர்ந்து மீனா முத்துவின் மாத வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு என்பதை கரெக்டாக சொல்கிறாள். இவர்கள் இருவரும் பேசி முடிக்க அரங்கமே அமைதியாக இருக்க மனோஜ் எப்படியும் நாம தான் ஜெயிக்கப் போறோம் என்று திமிராக பேசிக் கொண்டிருக்கிறான்.
கொஞ்ச நேரம் கழித்து மொத்த பேரும் முத்து மீனா பேசியதற்கு கைதட்ட மனோஜ், ரோகிணி அதிர்ச்சி அடைகின்றனர்.
முத்து, மீனா ஜெயிக்கலைனா அப்புறம் அந்தப் போட்டிக்கு என்ன மரியாதை!