வள்ளியின் வேலன் 
சீரியல் எபிசோட் ஹைலைட்ஸ்

'வள்ளியின் வேலன்' இன்று : ரத்னவேல் எழுதிய பதில் கடிதம்.‌.. வள்ளியின் தேடலும், வேலனின் வருகையும்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் 'வள்ளியின் வேலன்'. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ( 23.10.24) நடக்கப்போவது என்ன?

சிவா

வள்ளி எழுதிய லெட்டர்!

யாருக்கும் தெரியாமல் அப்பாவுக்கு லெட்டர் எழுதிய வள்ளி அந்த லெட்டருக்கு நான்கு பக்கமும் மஞ்சள் வைத்து லெட்டருடன் லெட்டராக கலந்து வைத்து விடுகிறாள். அதன் பிறகு மீண்டும் லெட்டரை படிக்கத் தொடங்கிய ரத்னவேல் கண்ணில் இந்த லெட்டர் பட அதை எடுத்து படிக்கத் தொடங்குகிறார்.

கடிதத்துடன் கனெக்ட் ஆன ரத்னம்!

வள்ளி எழுதிய கடிதத்தை படித்த ரத்னம் ''ஏதும் நெருங்கின உறவு எழுதின மாதிரியே இருக்கு'' என ஃபீல் செய்ய அதைப்பார்த்து வள்ளி சந்தோஷப்படுகிறாள். பிறகு இந்த கடிதத்துக்கு பதில் கடிதம் எழுதணும் என்று சொல்ல வள்ளியின் சந்தோஷம் இன்னும் இரட்டிப்பாகிறது.

Valliyin Velan23.10.24

ரத்னவேல் எழுதிய பதில் கடிதம்!

ரத்னவேல் வள்ளி எழுதிய கடிதம் மற்றும் மற்ற கடிதங்களுக்கு பதில் எழுதி அதை வேலனிடம் கொடுத்து ''நாளைக்கு போஸ்ட் பண்ணிடு'' என சொல்கிறார். வள்ளி அப்பா தனக்கு எழுதிய பதில் கடித்ததை படிக்க ஆர்வத்தோடு காத்திருக்கிறாள்.

அதே நேரத்தில் இந்த லெட்டர் விஷயம் வேலன் உட்பட யாருக்கும் தெரியக்கூடாது என வள்ளி முடிவு எடுக்க யாருக்கும் தெரியாமல் பதில் கடிதத்தை எடுத்து படிக்க திட்டமிடுகிறாள்.

லெட்டரை தேடி அலையும் வள்ளி!

எல்லோரும் தூங்கிய பிறகு வள்ளி வீடு முழுக்க வேலன் லெட்டர்களை எங்கே வைத்திருக்கிறான் என தேடத் தொடங்குகிறாள். ஒரு கட்டத்தில் வேதநாயகியின் ரூமுக்குள் வர தூக்கத்திலிருந்து வேதநாயகி திருடன் என எழுந்து கொள்ள வள்ளி ''நான் பார்த்த மீனாட்சி அம்மன் கனவுல வந்தாங்க... அதனால உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்க வந்தேன்'' எனச்சொல்லி சமாளித்து வெளியே வருகிறாள்.

Valliyin Velan23.10.24

எங்கு தேடியும் லெட்டர் கிடைக்காத நிலையில் வள்ளி வேலனுக்கு போன் செய்து அப்பா எழுதிய லெட்டர்லாம் எங்க வச்சு இருக்க என்று கேட்க அவன் தூக்கத்தில் ''அது எதுக்கு மேடம் இப்போ'' எனப் பேசி அப்படியே தூங்கி விடுகிறான்.

வள்ளி லெட்டரை படிக்க முடியாமல் தூங்காமல் காத்திருக்க மறுநாள் வீட்டுக்கு வந்த வேலன் நேராக வள்ளி ரூமுக்கு சென்று கப்போர்டு திறந்து லெட்டரை மொத்தமாக எடுத்து வர இதை பார்த்து வள்ளி ஷாக்காகிறாள். ''எதுக்குடா உள்ள வச்ச'' என்று சத்தம் போட வேலன் ''உங்க ரூம்ல இருந்தாதான் சேஃப்'' எனச் சொல்லி அதை போஸ்ட் செய்ய எடுத்துச் செல்கிறான்.

வள்ளி செய்யப்போவது என்ன?

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன? ரத்னவேல் எழுதிய லெட்டரை வள்ளி படிக்கப் போவது எப்படி என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.