தமிழ் வாத்தியார் கொடுத்த ஐடியா!
வீட்டுக்கு வந்து ரத்னவேலை சந்தித்த தமிழ் வாத்தியார் வள்ளியின் உயிருக்கு ஆபத்திருப்பதாகவும், அவளுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் சொல்ல வேதநாயகி ''அதான் என் புள்ள சிங்கம் மாதிரி இருக்கானே... அவன் மாமாவுக்கு ஒன்னு நான் உயிரையே கொடுப்பான்... வள்ளியையும் ரத்னவேலையும் பத்திரமா பாத்துக்குவான்'' என்று சொல்ல தமிழ் வாத்தியார் அப்பு ''ரஞ்சித்தை வள்ளிக்கு பாடிகாடா வைக்கலாம் என்று சொல்கிறார். ரத்தினவேலும் மறுக்க முடியாமல் ஓகே சொல்கிறார்.
ரத்னத்தை காப்பாற்றிய வேலன் !
அடுத்து வாத்தியார் வீட்டில் இருந்து கிளம்ப ரத்னவேலும் அவருடன் வெளியே வர அப்போது மேலே பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பெரியவரின் கைப்பற்றி பூத்தொட்டி ஒன்று கீழே விழ ரத்னவேலை தடுத்து வேலன் காப்பாற்றுகிறான். இதைப் பார்த்த தமிழ் வாத்தியார் ''வேலனே பாடி காடா இருக்கட்டும் எனக்கு என்னமோ இவன் சரியா இருப்பான்னு தோணுது'' என்று சொல்கிறார்.
வேலன் வெர்சஸ் ரஞ்சித்!
பிறகு ரஞ்சித் ''என்னை தானே பாடிகாடா இருக்க சொன்னீங்க'' என்று கோபப்பட தமிழ் வாத்தியார் ''எனக்கு என்னமோ இவன் சரியா இருப்பான்னு தோணுது'' என்று வேலனை கை காட்டுகிறார். ரஞ்சித் பிடிவாதமாக இருப்பதால் ஒரு போட்டி வைத்து முடிவு செய்து கொள்ளலாம் என்று சொன்ன ரத்னவேலும் மறுப்பு சொல்லாமல் சம்மதம் சொல்கிறார். என்ன போட்டி எப்போ போட்டி எங்கன்னு மட்டும் சொல்லுங்க ரெண்டு பேரும் வந்து கலந்துக்குவாங்க என்று ரத்னவேல் வாக்கு கொடுத்து அங்கிருந்து கிளம்புகிறார்.
குழப்பத்தில் வேலன்!
வேலன் ''ஐயா இங்க என்ன நடக்குது எனக்கு ஒண்ணுமே புரியல'' என்று கேட்க ''ரஞ்சித் ஐயாவுக்கு பாடிகார்ட் ஆகணுமாம்... உன்னோட இடத்தை பிடிக்க பார்க்கிறான்'' என்று சொல்ல ''அப்படியா விஷயம் ஒரு கை பார்த்துடலாம்'' என்று வேலன் சொல்கிறான். ''எங்க போட்டி எப்ப போட்டின்னு மட்டும் சொல்லுங்க'' என்று சொல்லி வேலனும் கிளம்பிச் செல்கிறான்.
வேலனின் கோபம்!
வேலன் ரத்னவேலிடம் பேசாமல் அமைதியாகவே வர ரத்னம் ''என்னடா அமைதியா வர என்னாச்சு'' என்று கேட்க ''போங்கய்யா என்ன கை கழுவி விட்டீங்களா... என்னை விட்டுட்டு ரஞ்சித் சார் தேர்ந்தெடுத்துட்டீங்க'' என்று கோபத்தை காட்ட ரத்னவேல் ''காலேஜ் பாடிகார்ட் தான்'' என்ற விஷயத்தை சொல்ல வர வேலன் ''நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்'' என தடுத்து விடுகிறான்.
ரஞ்சித்தின் சவால்!
வள்ளி ரூமுக்குள் இருக்க அத்துமீறி உள்ளே நுழையும் ரஞ்சித் வள்ளியிடம் ''இனிமேல் நான் சொல்றததான் நீ கேக்கணும்... நான் தான் உனக்கு பாடிகாடா வரப் போறேன்... அந்த வேலனை அடிச்சி தூக்குறேன்'' என சவால் விடுகிறான்.
வேலனுக்கு அலர்ட் கொடுத்த வள்ளி!
வள்ளி வேலனுக்கு போன் செய்து ''இந்த போட்டியில் ஜெயிக்கணுமா வேணாமா... எனக்கு என்னமோ நீ சாதாரணமா இருக்குற மாதிரி இருக்கு... உன்னை அடிச்சு தூக்குறேன்னு ரஞ்சித் சவால் விட்டுட்டு போறான். அப்புறம் என் அப்பா பக்கத்துல அவன் தான் இருப்பான்... அவன் சொல்றத தான் என் அப்பா கேப்பாரு'' என்று ஏத்தி விடுகிறாள். வேலன் ''அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்'' என்று சொல்ல இங்கே ரஞ்சித் ஒர்க் அவுட் செய்வதைப் பார்த்து வள்ளி ''அவன் பயங்கரமா எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி ரெடியாகிறான்... நீயும் உன்னை ரெடி பண்ணிக்க'' என அலர்ட் கொடுக்கிறாள்.
இதனால் வேலன் செய்யப் போவது என்ன? போட்டியில் ஜெயிக்கப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.