வள்ளியின் வேலன் 
சீரியல் எபிசோட் ஹைலைட்ஸ்

‘வள்ளியின் வேலன்’ இன்று : மாமாவின் சட்டையை பிடித்த வேலன்... வேதநாயகி காலில் விழப் போன வள்ளி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் ‘வள்ளியின் வேலன்’. அதன் இன்றைய(13-09-2024) எபிசோட் ஹைலைட்ஸ்!

சிவா

உண்மையை உடைக்க கிளம்பிய வேலன்!

ஐயாவிடம் பொய் சொல்லி விட்டதாக வேலன் வள்ளியிடம் புலம்ப அவள் ‘’போய் உண்மையை சொல்லு’’ என்று திட்ட வேலனும் ‘’சரி’’ என்று கிளம்பி வர வள்ளி அவனைத் தடுத்து நிறுத்தி திட்டுகிறாள். ‘’இப்போ நீ போய் உண்மைய சொன்னா உனக்கு என்ன அவார்டா கொடுக்க போறாரு... இப்ப இந்த வீட்ல இருக்கிற சந்தோஷம் இல்லாம போயிடும்’’ என எச்சரிக்கிறாள்.

மேலும் ‘’ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம்… நாம ஒரு பொய் தான் சொல்லி இருக்கோம்… இன்னும் 999 பொய் இருக்கு’’ என்று சொல்ல வேலன் கையெடுத்து கும்பிட்டு தெறித்து ஓடுகிறான்.  

ரேணுகா மீது கோபப்பட்ட வேலன்!

வேலன் வீட்டுக்கு வர அவனது அம்மா ‘’வாடகை காசு ரேணுகா கிட்ட கொடுத்துட்டியா’’ என்று கேட்க அவன் ‘’இல்லையே… அக்கா கிட்ட தான் கொடுத்தேன்’’ என்று சொல்கிறான். ‘’இல்ல ரேணுகா நீ காலையிலேயே வாடகை காசு கொடுத்துட்டதா சொல்லுச்சு’’ என்று சொல்லிக் கொண்டிருக்க அங்கு வந்த ரேணுகா ‘’இல்ல… எங்க அம்மா உங்க எல்லாரையும் திட்டுக்கிட்டே இருந்திருப்பாங்க. அதனாலதான் அப்படி பொய் சொன்னேன்’’ என்று சொல்ல வேலன் பணத்தை எடுத்துக் கொடுத்து ‘’இனிமே இப்படி பண்ணாத’’ என கோபப்பட்டு செல்கிறான். 

வள்ளியின் வேலன்

மேலும் வேணியிடம் ‘’நாம நடுத்தெருவுல நின்னா கூட பரவால்ல… ஆனா உன் புருஷனுக்கு பணம் முக்கியம் அதானே’’ என்று திட்டுகிறான்.

வள்ளியை காலில் விழ வைக்க நடந்த சதி!

அடுத்து ரஞ்சனிக்கு கல்யாண நகைகளை பார்த்துக் கொண்டிருக்க அப்போது ஒரு பிளாட்டினம் நகையை எடுத்துக்காட்ட அவள் அது வேண்டாம் என்று சொல்லிவிட அம்மு தனக்கு பிடித்திருப்பதாக எடுத்துக் கொள்கிறாள். ‘’அது ரேர் கலெக்ஷன்’’ என நகையை கொண்டு வந்தவர்கள் சொல்ல உடனே ரஞ்சனி ‘’அது எனக்கு வேணும்’’ என்று சொல்ல அம்மு ‘’நான் தான் எடுத்தேன் எனக்குத்தான் வேணும்'’ என அடம் பிடிக்கிறாள். வள்ளி ‘’வேற ஏதாவது டிசைன் சூஸ் பண்ணிக்கோ’’ என்று ரஞ்சனியிடம் சொல்ல ‘’ரஞ்சனி எனக்கு அதுதான் வேண்டும்’’ என்று சொல்கிறாள். 

வள்ளியின் வேலன்

ஆனால் வள்ளி அதை காதில் வாங்காமல் அம்முவை கூட்டிக்கொண்டு ரூமுக்கு வந்து விடுகிறாள். நகையை போட்டு பார்த்து அழகு பார்க்க அப்போது ரத்னவேல் வர வேதநாயகி ‘’வள்ளி எல்லாம் என் அப்பா காசு தானேன்னு ரஞ்சனி ஆசைப்பட்டு எடுத்த நகையை எனக்கு வேணும்னு எடுத்துக்கிட்டு போயிட்டா’’ எனப் பொய் சொல்கிறாள். 

வள்ளியை காத்த வேலன்!

இதனால் கோபப்படும் ரத்னவேல் வள்ளி செய்த தப்புக்காக காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொல்கிறான். சரியான சமயத்தில் வந்த வேலன் சிஎம் ஆபீஸில் இருந்து போன் வந்திருப்பதாக பொய் சொல்ல ரத்னவேல் அங்கிருந்து கிளம்ப வேலன் உங்களுக்கு போன் வந்து இருக்கு போல போய்ட்டு போன் எடுங்க என்று வள்ளியை மேலே அனுப்பி வைக்கிறான்.

வேதநாயகி கொடுத்த வார்னிங்! 

வேலனால் வள்ளி காலில் விழுவது தடைபட்ட நிலையில் வேதநாயகி ‘’ஐயாவுக்கு மட்டும் வேலை பாரு… அய்யா பொண்ணுக்கெல்லாம் வேலை பார்க்காத’’ என்று சொன்னதும் வேலன் வேதநாயகிக்கு அவரது ஸ்டைலில் பதிலடி கொடுக்கிறான். 

வள்ளியின் வேலன்

மீண்டும் மோதல்!

வேணி மற்றும் ஆனந்தி சண்டை போட்டு அழுக்கு தண்ணீரை வெளியே ஊற்ற அப்போது ரேணுகா அவனது அண்ணன் மற்றும் அம்மாவுடன் வந்து கொண்டிருக்கிற இவர்கள் மீது தண்ணீர் கொட்டி விட ரேணுகா அம்மா சண்டைக்கு வருகிறாள். ஆனந்தி மற்றும் கார்த்திக் என இருவரும் ஒருவரை ஒருவர், வாயாடி வளர்ந்து கெட்டவன் என்று சண்டை போட்டுக் கொள்ள ரேணுகா அம்மாவை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறாள். எல்லோரும் கலைந்து சென்ற பிறகு கார்த்திக் மற்றும் ஆனந்தி இருவருக்கும் ஏற்கனவே காதல் இருப்பது தெரியவருகிறது. 

வெறுப்பான வேலன்! 

வேணியின் புருஷன் சிலருடன் வீட்டுக்கு வந்து ‘’மினிஸ்டர் கிட்ட இவங்களுக்கெல்லாம் கையெழுத்து வாங்கி கொடுத்தா… ஆளுக்கு ஒரு லட்சம் வாங்கிக்கலாம்’’ என்று சொல்லி பேச வேலன் ‘’என்ன பாத்தா எப்படி தெரியுது’’ என்று திட்டி அவர்களை ஓட விடுகிறான். 

வள்ளியால் வந்த கோபம்! 

மீட்டிங் கிளம்பும் ரத்தினவேல் ‘’அக்கா ஆரத்தி கொண்டு வா’’ என்று சொல்லிக் கூப்பிட வேதநாயகி வராத நிலையில் அவருக்கு பதிலாக வள்ளி ஆரத்தி கொண்டு வந்து காட்ட வள்ளி முகத்தை பார்த்ததும் ரத்னவேல் கோபம் அடைகிறார்!