கெஞ்சி கூத்தாடும் இனியா & தோழிகள்!
‘’நாங்க எந்த தப்பும் பண்ணல எங்களை விட்டுடுங்க’’ என்று சொல்லி இனியாவும் அவளது தோழிகளும் கெஞ்சுகின்றனர். இனியாவின் நண்பர்களும் ‘’அவங்கள விட்டுடுங்க’’ என்று சொல்ல இறுதியில் பெண்களை மட்டும் போக சொல்கிறார் பப்பின் உரிமையாளர். ஆனால் எதிர்பாராத விதமாக போலீஸ் உள்ளே நுழைந்து விட அவர்களும் வெளியே செல்ல முடியாமல் சிக்கிக் கொள்கின்றனர்.
திட்டி தீர்த்த போலீஸ்!
போலீஸ் என்ன பிரச்சனை என்ன விஷயம் என்று கேட்டறிந்து எல்லோரிடமும் ஐடி கார்டு வாங்குகின்றனர். இனியாவின் நண்பர்கள் ‘’நாங்க எந்த தப்பும் பண்ணல… எங்களோட சீனியர்ஸ்தான் எங்கள முதல்ல அடிச்சாங்க’’ என்று சொல்ல ‘’அப்போ நீங்க எந்த இயர்’’ என்று கேட்க ‘’ஃபர்ஸ்ட் இயர் என்று சொன்னதும் ஐடி கார்டில் வயதை பார்த்து ஒருத்தருக்கும் 21 வயசு ஆகல அப்படி இருக்கும்போது எப்படி பப்புக்கு வந்தீங்க? உங்க வீட்ல எப்படி அனுமதிச்சாங்க உங்க எல்லாரையும் தூக்கி ஜெயில்ல உட்கார வச்சு உங்களை பெத்தவங்களையும் உள்ள போடணும்… அப்பதான் உங்க எல்லாருக்கும் புத்தி வரும்’’ என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
‘’சார் வேண்டாம் சார் வீட்டுக்கு எதுவும் தெரியாது… எங்களை விட்டுடுங்க நாங்க எந்த தப்பும் பண்ணல’’ என்று எல்லோரும் கெஞ்ச அதை போலீஸ் ‘’அதெல்லாம் விட முடியாது’’ என்று மறுக்கின்றனர். செழியன் இனியாவுக்கு போன் செய்ய இனியா ‘’நான் அண்ணன் கிட்ட பேசிக்கட்டுமா’’ என்று கேட்க ‘’லேடி போலீஸ் அதெல்லாம் பேசக்கூடாது… எதுவா இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வா… அங்க உன் குடும்பத்தில் இருக்கிற எல்லாரையும் வரச் சொல்லு… அதுக்கப்புறம் பேசிக்கலாம்’’ என்று ஷாக் கொடுக்கின்றனர்.
ஸ்டேஷனுக்கு கூப்பிடும் போலீஸ்!
இவர்கள் எல்லோரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வரச் சொல்லி இன்ஸ்பெக்டர் சொல்ல லேடி போலீஸ் பெண்களை வெளியே அழைத்து வர இனியா ‘’எங்களை விட்டுடுங்க’’ என்று கெஞ்சியபடி இருக்கிறாள்.
ராதிகாவுக்கு ஷாக்!
தனது தோழியை பார்க்க வந்த ராதிகா பிறகு அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பும்போது போலீஸ் சில பெண்களை வெளியே அழைத்து வருவதை கவனிக்கிறாள். இறுதியில் இனியாவின் முகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடையும் ராதிகா ‘’அங்கு ஓடி வந்து என்னாச்சு’’ என்று கேட்க இனியா நடந்த விஷயத்தை சொல்ல ‘’நீ எதுக்கு பப்புக்கு வந்த’’ என்று கோபப்படுகிறாள். இனியா ‘’தெரியாம வந்துட்டேன்… என்னை எப்படியாச்சு காப்பாத்தி வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க’’ என்று கேட்க அவளது தோழிகளும் ‘’எங்களையும் காப்பாத்துங்க’’ என்று கெஞ்சுகின்றனர்.
போலீசிடம் பேச்சுவார்த்தை நடத்தும் ராதிகா!
ராதிகா போலீசிடம் ‘’இவங்க தெரியாம பண்ணிட்டாங்க விட்டுடுங்க’’ என்று சொல்லி கேட்க போலீஸ் ‘’அதெல்லாம் விட முடியாது… நீங்க யாருமா’’ என்று கேட்க இனியாவுக்கு வேண்டப்பட்டவ என்று சொல்கிறாள். லேடி போலீஸ் ‘’எதுவா இருந்தாலும் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுங்க’’ என்று சொல்ல ராதிகா இன்ஸ்பெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்த அவர் ‘’விடவே முடியாது’’ என அதிர்ச்சி கொடுக்கிறார்.
ராதிகா தன் அண்ணன் மூலமாக யாரோ ஒருவரிடம் உதவி கேட்க அதற்குள் இங்கே எல்லோரையும் ஜீப்பில் ஏற்றி விட ராதிகா ஓடி வந்து ஒரு ‘’அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க’’ என்கிறாள். லேடி போலீஸ் ‘’எங்களை எங்க வேலைய செய்ய விடுங்க’’ என்று கோபப்பட பிறகு டிஎஸ்பியிடம் இருந்து இன்ஸ்பெக்டருக்கு போன் வருகிறது. ‘’உங்களுக்கு டிஎஸ்பி-ஐ எப்படி தெரியும்’’ என்று கேட்க ‘’என் அண்ணனோட ஃபிரண்டு’’ என்று சொல்ல இனியா மற்றும் அவளது தோழிகளை போலீஸ் விடுவிக்கின்றனர். இறுதியாக இவர்கள் ராதிகாவுக்கு நன்றி சொல்கின்றனர்.
செழியனுக்கு ஷாக்!
அதன் பிறகு ராதிகா ‘’இனியாவை இழுத்துச் சென்று அறிவில்ல? நீ சின்ன பொண்ணா? உன்ன கட்டாயப்படுத்தி இங்க கூட்டிட்டு வர’’ என்று கோபப்பட செழியன் போன் செய்ய ராதிகா போனை பிடிங்கி ‘’நான் ராதிகா பேசுறேன். இனியா இப்போ ஒரு லொக்கேஷன் அனுப்புவா… நீ அங்க வா’’ என்று சொல்கிறாள். அதன் பிறகு இனியாவை லொக்கேஷன் அனுப்ப சொல்லி மிரட்ட அவளும் லொக்கேஷன் அனுப்ப பப் அட்ரஸை பார்த்து செழியன் அதிர்ச்சி அடைகிறான்.
லொக்கேஷனுக்கு வந்த செழியன் ‘’என்னாச்சு’’ என்று கேட்க இனியா நடந்த விஷயத்தை சொல்லி மன்னிப்பு கேட்க ராதிகா ‘’இந்த வயசுல பப்புக்கு வந்து சரக்கு அடிச்சிட்டு ஆட்டம் போடுறாங்க… நான் இங்க வரலைன்னா இனியாவை ஜெயில்ல போட்டு இருப்பாங்க’’ என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். செழியன் இனியாவை திட்டி ராதிகாவிடம் ‘’ரொம்ப நன்றி இந்த உதவியை எப்பவும் மறக்க மாட்டோம்’’ என்று சொல்லி இனியாவை ‘’வீட்டுக்கு வா உனக்கு இருக்கு’’ என்று கையை பிடித்து கூட்டிச் செல்ல இன்னொரு பக்கம் இனியாவின் கையை பிடித்து அதிர்ச்சி கொடுக்கிறாள் ராதிகா.
‘’அப்படி எல்லாம் விட முடியாது… உங்க அம்மாவுக்கு போன் போட்டு இங்க வர சொல்லு’’ என்று ராதிகா செக் வைக்கிறாள்.
பாக்கியா செய்யப்போவது என்ன?!