வள்ளியின் வேலன்  
டிவி

'வள்ளியின் வேலன்' இன்று: எதிர்பார்த்து ஏமாந்த வேதநாயகி... வள்ளியால் கொலைவெறியான ரேணுகா!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வள்ளியின் வேலன். இந்த சீரியலின் இன்றைய எபிசோட் ஹைலைட்.

சிவா

உண்மை அறியும் வள்ளி!

ரத்தினவேல் பாண்டியனின் கார் டிரைவர் தன்னுடைய குடும்பத்துடன் வள்ளிக்கு நன்றி சொல்ல, அவர் ''எனக்கு எதுக்கு நன்றி... நான் உயிரோடு இருக்க காரணமே நீங்கதான்'' என்று ஆக்சிடென்ட் நடந்த இடத்தில் வேலன் ''வள்ளி ஆரத்தி காட்டி நேரத்தை தாமதப்படுத்தியது தான் உயிரோடு இருக்க காரணம்'' என்று சொன்ன விஷயத்தை சொல்கிறான்.  அதன் பிறகு வள்ளி அப்பா பேசியதை நினைத்துப் பார்க்கிறாள். 

வேலன் வீட்டில் வள்ளி!

வள்ளி வேலனைப் பார்ப்பதற்காக அவனது வீட்டிற்கு வருகிறாள். வேலன் குடும்பத்தினர் எல்லோரும் வள்ளியை வரவேற்று உபசரிக்கின்றனர். வள்ளி ''நீ எங்க வீட்டு பக்கமே வரக்கூடாது... ஒழுங்கா மாத்திரையை போட்டு ரெஸ்ட் எடு'' என வேலனுக்கு கண்டிஷன் போடுகிறாள். "நாட்டுக்கோழி குழம்பு வாசம் வருதே" என்று வள்ளி சொல்ல, "நீயும் கொஞ்சம் சாப்பிடுமா" என்று சொல்ல, வள்ளியோ, "சாப்பிடாம போக மாட்டேன்" என்று சொல்ல, அவளை உட்கார வைத்து எல்லோரும் உபசரிக்கின்றனர்.

வள்ளியால் கடுப்பான ரேணுகா!

வள்ளி வேலன் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட வேலனுக்காக மட்டன் சுக்கா கொண்டு வந்த ரேணுகா இதை பார்த்து கடுப்பாகிறாள். பிறகு வேணி ரேணுகாவை பார்த்து ''என்ன ரேணு இங்க நிக்கிற'' என்று கேட்க, ''அவருக்காக மட்டன் சுக்கா கொண்டு வந்தேன்'' என்று சொல்லி கொடுக்கிறாள். ''மட்டனா என் தம்பிக்கு ரொம்ப பிடிக்கும்'' என வேணி அதை கொண்டு வந்து அம்மாவிடம் கொடுக்கிறாள். ஆனால் வேலன், ''அவங்களுக்கு வைங்க... அவங்களுக்குத்தான் மட்டன் ரொம்ப பிடிக்கும்'' என்று சொல்லி எல்லாவற்றையும் வள்ளிக்கு வைத்து அவன் ரசிக்க ரேணுகா இன்னும் கடுப்பாகிறாள். வள்ளி வேலனுக்கு அட்வைஸ் செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்பப் போக அவள் தடுமாறி கீழே விழப் போக வேலன் தாங்கி பிடிக்க இதை பார்த்த ரேணுகா கொலைவெறியாகிறாள்.

குழப்பி விட்ட ஆனந்தி!

அடுத்ததாக ரேணுகா கீழே இறங்கி வந்து ''யார் அந்த பொண்ணு'' என்று விசாரிக்க ''அண்ணனோட பெஸ்ட் ஃபிரண்ட்... எனக்கும்தான்.. மினிஸ்டரோட ஒரே பொண்ணு'' என்று சொல்கிறாள். ரேணுகா ''உன் அண்ணனுக்கும் அந்தப் பொண்ணுக்கும் நடுவுல ஏதாச்சு இருக்கா'' என்று கேட்க ''இதுவரைக்கும் இல்ல'' என்று ஆனந்தி சொல்லிவிட்டு உள்ளே செல்ல ''இவ என்ன சொல்றா? இதுவரைக்கும் இல்லனா இனிமே வரதுக்கு வாய்ப்பிருக்குன்னு சொல்றாளா'' என்று குழப்புகிறாள்.

அம்முவிடம் புலம்பிய வள்ளி!

வள்ளியின் வேலன்

வீட்டுக்கு வந்த வள்ளி ''அப்பாவை பக்கத்துல இருந்து பாத்துக்க முடியல'' என்று அம்முவிடம் புலம்ப, அம்மு ''இந்நேரம் பெரியப்பா தூங்கி இருப்பாரு... நீ அவரை பார்த்து மைண்ட் வாய்ஸ்ல பேசிட்டு வா'' என்று அனுப்பி வைக்கிறாள். பிறகு வள்ளி ரத்னவேல் ரூமுக்குள் வந்து அவரது பக்கத்தில் உட்கார்ந்து காலை பிடிக்கப் போக ரத்னவேல் பாண்டியன் இருமல் வந்து எழுந்துகொள்ள வள்ளி ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறாள். ரத்னவேல் பாண்டியன் விடாமல் இரும வள்ளி ஓடி வந்து தண்ணீர் எடுத்துக் கொடுக்க அவளது முகத்தை பார்த்த ரத்னவேல் கோபப்பட்டு கண்ணாடி டம்ளரை தூக்கி போட்டு உடைத்து வெளியே போகச் சொல்கிறார். சத்தம் கேட்டு வரும் வேதநாயகி ''நீ எதுக்கு வள்ளி இங்க வந்த? என் தம்பி கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கட்டும்... நீ வெளியே போ'' என துரத்தி விடுகிறாள்.

வள்ளியின் வேலன்

வேலனை தேடி வரும் பொறுப்பு!

அடுத்து ரத்னவேல் எழுந்து வெளியே வர வேதநாயகி ''இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே'' என்று சொல்ல ரத்னவேல் பாண்டியன் ''நான் ரெஸ்ட் எடுத்தா என் வேலையெல்லாம் யார் பார்க்கிறது'' என்று கேள்வி கேட்கிறார். வேலன் ஃபைலை கொண்டு வந்து கொடுக்க முத்து ''நாங்க அண்ணன ரெஸ்ட் எடுக்க சொல்லிக்கிட்டு இருக்கோம்... நீ ஃபைலை கொண்டு வந்து கொடுக்கிற'' என்று கேள்வி கேட்க வேதநாயகி ''அதுதான் சொந்தக்காரங்களுக்கும் வேலைக்காரங்களுக்கும் இருக்கு வித்தியாசம்'' என்று இளக்காரமாக பேசுகிறாள்.

ரத்னவேல் பாண்டியன் இதைக்கேட்டு வேலன் ''வெளியாள் இல்ல... என் சொந்தம்தான்'' என்று சொல்கிறார். வேதநாயகி சட்டென முகத்தை மாற்றி ''இந்த வேலையெல்லாம் ஒரு 15 நாளைக்கு யார் கிட்டயாவது கொடுக்கலாம்ல'' என்று சொல்ல ''அதுவும் நல்ல ஐடியா தான்'' என யோசிக்கும் ரத்னவேல் ''நீயே பார்த்துக்க'' என்று மொட்டையாக செல்ல வேதநாயகி சந்தோஷம் அடைகிறாள். ஃபைலை வாங்க எழுந்து கொள்ள ரத்னவேல் அதை வேலனிடம் கொடுக்க வேதநாயகி பல்பு வாங்குகிறாள்.

பல்பு வாங்கிய வேதநாயகி வேலனைப் பழிவாங்கப்போகிறாளா?!