'குக்கு வித் கோமாளி'யின் தயாரிப்பு நிறுவனமான Box Office Studio மணிமேகலை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் இருப்பதாக விஜய் டிவி நிர்வாகத்துக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். 'குக்கு வித் கோமாளி' காண்டிராக்ட் சட்டதிட்டங்களை மணிமேகலை மீறியதால் அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.
பிரியங்கா மிகவும் டாமினேட் செய்வதாகவும், தனக்கு போதுமான ஸ்பேஸ் கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி, குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறினார். இதனை சமூக ஊடகத்திலும் வீடியோவாக பதிவிட்டார்.
அந்த வீடியோ மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து ரசிகர்கள் பிரியங்காவை விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்து வந்தனர். இதனால் பிரியங்கா மற்றும் அவரது குடும்பம் மனமுடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது பிரியங்காவுக்கு ஆதரவாக ஒரு சில விஜய் டிவி பிரபலங்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
ராஜ் மோகன்
பிரியங்காவுக்கு ஆதரவாக முதலில் வீடியோ வெளியிட்டது ராஜ் மோகன் தான். பிரியங்கா, மணிமேகலை இடையே பிரச்னை ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று அவர் விவரித்தார். அவர் கூற்றுபடி, திவ்யா துரைசாமி விடைபெறும் போது அவரை பற்றி பிரியங்கா பேச முற்பட்டதாகவும்,மணிமேகலை அதை தடுத்ததாகவும் கூறினார். இதனால் பிரியங்கா கேரவனுக்கு சென்று அழுததால், தயாரிப்பு நிறுவனம் மணிமேகலையிடம் மன்னிப்பு கேட்கும் படி கேட்டுள்ளனர். ஜாலியாக மன்னிப்பு கேட்டாலும் பரவாயில்லை என்று சொல்லியுள்ளனர். ஆனால் மணிமேகலை அதற்கு ஒப்பு கொள்ளாமல் போனதால், அவர்களாக மணிமேகலையை நிகழ்ச்சியை விட்டு விலக்கியதாக ராஜ் மோகன் கூறினார்.
ஆர்.ஜே.ஷா
சமூக பிரச்னைகள் பற்றி தொடர்ந்து பேசி வரும் ஆர்.ஜே.ஷா மணிமேகலை விவகாரம் பற்றியும் தன் யூ டியூப் சேனலில் பதிவிட்டார். அன்று என்ன நடந்தது என்று விவரித்தார். கிட்டத்தட்ட ராஜ் மோகன் சொன்னதையே தான் ஷாவும் சொன்னார். ஆனால் அவர் வீடியோவுக்கு நெகடிவ் கமெண்டுகள் குவிந்தது. இதனையடுத்து அவர் அந்த வீடியோவை டெலீட் செய்துவிட்டார். அவர் பேசியது முழுக்க முழுக்க பிரியங்காவுக்கு ஆதரவாக இருந்ததாக ரசிகர்கள் அவரை திட்டித்தீர்த்தனர். அவரின் வீடியோக்களுக்கு இதுவரை இந்தளவுக்கு நெகடிவ் கமெண்டுகள் வந்ததில்லை. எனவே அவர் பதறிப்போய் வீடியோவை டெலீட் செய்துவிட்டார்.
மாகாபா ஆனந்த்
ஒரு கிரிக்கெட் நிகழ்வில் கலந்து கொண்ட மாகாபா-விடம் செய்தியாளர்கள் பிரியங்கா-மணிமேகலை விவகாரம் பற்றி கேள்வி எழுப்பினர்.
``நான் அந்த நிகழ்ச்சியில இல்ல. நான் அங்க இருந்திருந்தா இவங்க சரி, இவங்க தப்புன்னு சொல்லி இருப்பேன். ஒரு காட்டு வழியா போகும்போது அங்க ரெண்டு யானை அடிச்சிக்கிட்டா நாம போய் தடுப்போமா... அப்படி தான் இதுவும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
குரேஷி
குரேஷி ஆரம்பத்தில் மணிமேகலையின் போஸ்ட்டுக்கு ஆதரவாக கமென்ட் செய்துவிட்டு, பின்னர் அதை டெலீட் செய்து விட்டார். இதனால் மக்கள் அவரை விமர்சிக்க தொடங்கினர். இப்போது பிரியங்காவுக்கு ஆதரவாக அவரும் வீடியோ வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் ''நான் யாருக்கு ஆதரவாவும் வீடியோ போடல'' என்று சொல்லி விட்டு, வீடியோ முழுக்க பிரியங்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் வீடியோவில் ''அன்னைக்கு என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியும். நான் அத ஷேர் பண்றேன்’’ என்று கூறி திவ்யா துரைசாமி எலிமினேட் ஆன விவகாரத்தை சொன்னார். மற்றவர்களும் இதே கதையைத்தான் சொன்னார்கள். ஆனால் குரேஷி ''மணிமேகலையை யாரும் மன்னிப்பு கேட்க சொல்லவில்லை'' என்று கூறினார். சுனிதா, ராஜ் மோகன் ஆகியோர் மணிமேகலையை மன்னிப்பு கேட்க சொன்னார்கள் என்கின்றனர். இதில் எது உண்மை என்று தெரியவில்லை.
சுனிதா
பிரியங்காவின் தோழியான சுனிதா கண்டிப்பாக மணிமேகலைக்கு எதிராகத் தான் பேசுவார் என்பது தெரிந்த கதை தான். ஆனால் சுனிதாவுக்கு மொழி பிரச்னை இருப்பதால், அவர் இந்த விவகாரத்தை புரிந்து கொண்ட விதமே வித்தியாசமாக இருந்தது. அவர் புரிதலின்படி ''திவ்யா துரைசாமி எலிமினேட் ஆகி போகும் போது பிரியங்கா பேச வேண்டும் என்று நினைப்பது தவறா? மணிமேகலை ஏன் அதை தடுத்தார், அது பிரியங்காவின் உரிமை, பிரியங்கா பாவம்.''
இது தான் சுனிதாவின் புரிதல். ரசிகர்கள் பலர் மணிமேகலைக்கு ஆதரவாக நிற்பது ஏன் என்பதே சுனிதாவுக்கு புரியவில்லை. பிரியங்கா எந்த ஷோவில் இருந்தாலும், டாமினேட் செய்கிறார் என்பதே பலரின் நிலைப்பாடு. ஆனால் சுனிதா இந்த ஒரு விவகாரத்தை மட்டுமே முன்வைத்து பேசுகிறார்.
ஃபரினா
மணிமேகலையின் இன்ஸ்டா போஸ்டுக்கு முதலில் ஃபையர் விட்ட ஃபரினா தற்போது பின்வாங்கி, ``பிரியங்கா அக்கா பாவம். யாரும் அவரை திட்டாதீங்க” என்று வீடியோ பதிவிட்டிருக்கிறார். ``பிரியங்கா அக்கா ரொம்ப சப்போர்ட்டிவ், எனக்கு நிறைய அட்வைஸ் கொடுப்பாங்க. அவங்கள திட்டாதீங்க. மணிமேகலையும் பிரியங்காவும் சீக்கிரமே ஒண்ணா சேரணும்” என்று மய்யமாக ஒரு வீடியோ பதிவிட்டிருக்கிறார்.