விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெரிய பிரளயமே வெடித்துள்ளது. முதல் முறையாக ஒரு விஜய் டிவி தொகுப்பாளர் ஒரு ஷோவில் நடந்த பிரச்னையால் வெளியேறி, வெளிப்படையாக அதனை அறிவித்தும் இருக்கிறார்.
மணிமேகலை வெளியிட்ட வீடியோவில் பிரியங்கா பெயரை குறிப்பிடாமல், விஜய் டிவி ஆன்கர் என்றே குறிப்பிட்டு பிரச்னையை விவரித்தார். ஆனால் அனைவருக்கும் அது பிரியங்கா தான் என்பதை சுலபமாக கெஸ் செய்ய முடிந்தது. மணிமேகலைக்கு சமூக ஊடகங்களில் ஆதரவு பெருகி வருகிறது. அவரின் யூடியூப் வீடியோவை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
சில பிரபலங்கள் இந்த விவகாரத்தில் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
முன்னாள் விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா சில வருடங்கள் முன்பு பிரியங்காவை குறிப்பிட்டு அவரால் தான் விஜய் டிவியில் வாய்ப்புகளை இழந்ததாக குறிப்பிட்டார். அந்த பழைய செய்திகளை ரசிகர்கள் தற்போது பகிர்ந்து வருகின்றனர். மீம்ஸ்களில் ``ஜாக்குலின், அனிதா சம்பத், ஃபரினா, டிடி உள்ளிட்டோர் விஜய் டிவியில் வாய்ப்புகளை இழக்க பிரியங்கா தான் காரணம் ’’என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வளவு பிரச்னைகள் நடந்தும் குக் வித் கோமாளி டைட்டில் வின்னராக பிரியங்காவை அறிவித்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். அந்த ஃபைனல் எபிசோட் வெளியிடப்படும் போது பிரியங்கா- மணிமேகலை இடையே நடந்த வாக்குவாதமும் குறும்படமாக காட்டப்படலாம் என்கிறது விஜய் டிவி வட்டாரம்.
இந்நிலையில் பிரியங்காவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஒரே நபர் ராஜ் மோகன் தான். அவர் தன்னுடைய யூடியூப் சேனலில் இந்த விவகாரம் பற்றி விரிவாக பேசி இருக்கிறார்.
அதில் நடந்த ஒரு சம்பவம் மட்டும் பிரச்னைக்கு காரணம் என்பது போல் மறைமுகமாக பிரியங்காவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
வாழை படத்தில் நடித்த திவ்யா துரைசாமி குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் ஆனார். அவர் எலிமினேட் ஆகி வெளியேறும் போது பிரியங்காவை பாராட்டி பேசினாராம். அதற்கு பதில் அளிக்கும் விதமாக பிரியங்காவும் திவ்யாவை பற்றி பேசத் தொடங்கும் போது, மணிமேகலை குறிக்கிட்டு, நீங்க டாமினேட் பண்றீங்க, என்ன வேலை செய்ய விடமாட்றீங்க என்று கத்தினாராம்.
இதனால் மனமுடைந்த பிரியங்கா அறைக்குள் சென்று அழுதாராம். அவருக்கு இப்படி நிகழ்ந்ததால் தயாரிப்பு நிறுவனம் மணிமேகலையிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்க சொன்னார்களாம். ஆனால் மணிமேகலை மறுத்துவிட்டாராம். சுய மரியாதையை விட்டுவிட்டு மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்லிவிட்டாராம்”
இவ்வாறாக ராஜ் மோகன் அன்று நடந்த சம்பவத்தை விவரித்தார். இதற்கான குறும்படத்தை விஜய் டிவி ஒளிபரப்ப வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
ஆனால் ராஜ்மோகன் ஜோடிக்க நினைப்பது போல் இது ஒரு நாளில் நடந்த பிரச்னை அல்ல என்கிறது குக் வித் கோமாளி ரசிகர் வட்டம். அவர்களின் பதிவுகளின்படி, ‘’இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே ஒவ்வொரு எபிசோடிலும் பிரியங்கா மட்டுமே டாமினேட் செய்கிறார். குறிப்பாக ஒவ்வொருவரையும் மணிமேகலை அறிமுகம் செய்யும் போதும், இவர் குறுக்கிட்டு அந்த நபரை பற்றி மேலும் சில பாயிண்ட்ஸ்களை சொல்லி வரவேற்கிறார்.
ராமர் மாமா, இர்ஃபான் தம்பி என்று குரூபிஸம் ஃபார்ம் செய்து அதிக கண்டண்ட் கொடுக்கிறார். பிக் பாஸிலும் இது தான் நடந்தது. இவ்வளவு நாள் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாக மணிமேகலை ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் வெகுண்டெழுந்து விட்டார். ” என்பதே பெரும்பாலானோர் கருத்து.
பிரியங்கா தரப்பு விளக்கத்திற்கு அனைவரும் ஆவலாக காத்திருக்கிறோம்.