தமிழக வெற்றிக்கழகம் ஆரம்பித்து நான்கு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் 2026 தேர்தலுக்கான வியூகங்கள் அமைப்பதில் விஜய் மும்முரமாக இருப்பதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
GOAT எனும் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்துமுடித்துவிட்ட விஜய், ஹெச்.வினோத் படத்தை ஆகஸ்ட்டில் தொடங்க இருக்கிறார். இந்தப்பட ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அரசியல் பிளானை முடித்து தன் கட்சிகாரர்களிடம் கொடுத்துவிட்டு அதை ஃபாலோ செய்யும்படி சொல்ல இருக்கிறாராம் விஜய்.
சீமான் இயக்கத்தில் ‘பகலவன்' எனும் படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. ஆனால், கதை கடைசிவரை விஜய்க்கு திருப்திகரமாக அமையாததால் சீமானும் - விஜய்யும் சினிமாவில் கூட்டணி சேரவேயில்லை. ஆனால், அரசியலில் சீமானும் விஜய்யும் கூட்டணி சேருவது உறுதி என்கிறார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சின்னம் மாறியிருந்தபோதும் 10 சதவிகித வாக்குகள் வாங்கி மாநில கட்சியாக சீமானின் நாம் தமிழர் கட்சி அங்கீரிகப்பட்டிருப்பதைப் பார்த்து விஜய் நண்பர்களிடம் ‘’மிகப்பெரிய சாதனை… சீமான் சூப்பர்'’ என வியந்து பாராட்டினாராம்.
தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வது தனக்கு செட் ஆகாது என நினைக்கிறாராம் விஜய். அதனால் பிரசாரம் செய்ய சீமான், பொதுக்கூட்டங்களில் பேச விஜய் என வியூகம் அமைத்திருக்கிறார்களாம். தேர்தலுக்கு முன்புவரை பேச்சுவார்த்தையை நீட்டித்துக்கொண்டே போகாமல் விரைவிலேயே நாம் தமிழருடன் கூட்டணி அறிவிக்க இருக்கிறாராம் விஜய். விரைவில் பொது அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் விஜய்யின் டீமில் உள்ளவர்கள்!