Aathira
கத்தரிப்பூ லெஹங்காவில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்தியுள்ளார் தமன்னா.
’ஜெயிலர்’, ‘அரண்மனை 4’ படங்களுக்குப் பிறகு பாலிவுட்டில் அதிக படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.
’ஒடேலா’ என்ற இந்தி வெப்சீரிஸில் நடித்து வருகிறார்.
ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவரான தமன்னா, ‘ஒடேலா’ வெப்சீரிஸிலும் அதேபோன்றதொரு கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறார்.
சமீபத்தில் கிருஷ்ணர் ஜெயந்தியை ஒட்டி ராதை போல உடை அணிந்து சமூகவலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.
அந்தப் புகைப்படங்களுக்கு ஒருபக்கம் பாராட்டு கிடைத்தாலும் இன்னொரு பக்கம் அவை ஆபாசமாக இருப்பதாக சர்ச்சைகளும் வெடித்தது.
’கடவுளை ஆபாசமாக சித்தரிப்பதா?’ என்ற ரீதியில் பிரச்னைகள் எழ அந்தப் புகைப்படங்களை நீக்கினார் தமன்னா.