மறைந்த பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்தநாளுக்கு வித்யாபாலனின் வித்தியாசமான அஞ்சலி!

Aathira

ரீ-கிரியேஷன் ஆஃப் ஐகானிக் ஸ்டைல்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு நடிகை வித்யாபாலன் பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதியுடன் இணைந்திருக்கிறார் வித்யா பாலன்.

வித்யா மற்றும் அனு இருவரும் ஒருநாள் இயல்பாக உரையாடிக் கொண்டிருந்தபோது இந்த எண்ணம் அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது.

எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு ஆன்மீக அனுபவம். அவர் மீதான என் அன்பின் வெளிப்பாடுதான் இது என்கிறார் வித்யாபாலன்.

எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் பேத்தி சிக்கில் மாலா சந்திரசேகரின் வழிகாட்டுதலுடன், அவரின் ஐகானிக் புடவைகள், அணிகலன்கள் மற்றும் ஒட்டுமொத்த அழகியலை மீண்டும் அனு மறு உருவாக்கம் செய்துள்ளார்.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் இந்த ஐகானிக் புடவைகளை முத்து செட்டியார் மற்றும் நல்லி சின்னசாமி செட்டி ஆகியோர்தான் நெய்து கொடுத்துள்ளனர்.

அறுபது மற்றும் எண்பதுக்கு இடைப்பட்ட காலத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி அணிந்திருந்த இந்த புடவைகள், அதை அணியும் விதம் ஆகியவற்றை துல்லியமாகக் கொண்டு வர அனு அதிக ஆய்வு செய்திருக்கிறார்.

எம்.எஸ்.அம்மாவின் தோற்றத்தில் தனித்துவமான புடவைகள் ஒரு பாதி.

மற்ற பாதியாக அவரது நெற்றியில் இருக்கும் பாரம்பரிய குங்குமம் மற்றும் விபூதி, மூக்கின் இருபுறமும் இருக்கும் மூக்குத்திகள், கொண்டையில் வைக்கப்பட்டிருக்கும் மல்லிகை, எளிய நகைகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.