தீபிகா படுகோன் முதல் ரஷ்மிகா மந்தனா வரை... இந்தியாவின் நம்பர் 1 நடிகைகள் யார், யார்?

Puviyarasan Perumal

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்தான் சம்பள அடிப்படையில் இந்தியாவின் நம்பர் 1 நடிகை. இவரது நடிப்பில் ‘கல்கி 2898 AD’, ‘சிங்கம் அகெய்ன்' படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. தீபிகா படுகோன் ஒரு படத்தில் நடிக்க 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

தீபிகா படுகோன்

கங்கனா ரனாவத்

சர்ச்சைகளின் கதாநாயகியும், மக்களவை எம்பியுமான கங்கனா ரனாவத்தான் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 27 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார் கங்கனா. இந்திரா காந்தியாக இவர் நடித்திருக்கும் எமெர்ஜென்சி படம் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது

கங்கனா ரனாவத்

பிரியங்கா சோப்ரா

41 வயதான பிரியங்கா சோப்ரா திருமணத்துக்குப்பிறகும் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது பெரும்பாலும் ஆங்கிலப்படங்களில் கவனம் செலுத்தும் பிரியங்கா 25 கோடி ரூபாய் வரை சம்பளமாகப் பெறுகிறார்.

பிரியங்கா சோப்ரா

கத்ரீனா கைஃப்

பாலிவுட் கவர்ச்சிப்புயலான கத்ரீனா கைஃப் தற்போது ‘டைகர் 3’ படத்தில் நடித்திருக்கிறார். இவரும் பிரியங்காவுக்கு இணையாக 25 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.

கத்ரீனா கைஃப்

ஆலியா பட்

நடிகர் ரன்பீர் கபூரை மணந்திருக்கும் ஆலியா பட் 20 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். குழந்தைக்குத் தயாகியிருக்கும் ஆலியா பட் ‘ஜிக்ரா’ எனும் புதுப்படத்தில் விரைவில் நடிக்க இருக்கிறார்.

ஆலியா பட்

கரீனா கபூர்

25 ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்துவரும் கரீனா கபூருக்கு இந்த ஆண்டும் படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. ‘க்ரூ’ படம் ஏற்கெனவே வெளியாகிவிட்ட நிலையில் 'சிங்கம் அகெய்ன்' விரைவில் வெளியாக இருகிறது. கரீனா கபூர் ஒரு படத்துக்கு15 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்.

கரீனா கபூர்

ஷ்ரத்தா கபூர்


ஷக்தி கபூரின் மகளும் முன்னணி நடிகையுமான ஷ்ரத்தா கபூரும் 15 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். இவரது நடிப்பில் இந்தாண்டு ‘Stree 2’ படம் ரிலீஸாக இருக்கிறது.

ஷ்ரத்தா கபூர்

ராஷ்மிகா மந்தனா

தென்னந்திய நடிகையாக இந்த லிஸ்ட்டில் இடம்பிடித்திருப்பவர் ராஷ்மிகா மந்தனா. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்' படத்தில் நடிக்க 13 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார் ராஷ்மிகா.

ராஷ்மிகா மந்தனா