News Tremor Desk
1999-ம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்' படம் மூலம் திரையில் இணைந்த சூர்யா ஜோதிகா ஜோடி, ‘காக்கா காக்கா’ (2003), ‘சில்லுனு ஒரு காதல்’ (2006), ‘மாயாவி’ (2005) உட்பட பல வெற்றிப் படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 7 வருட காதலுக்குப்பின் சூர்யா - ஜோதிகா 2006-ல் திருமணம் செய்துகொண்டனர். முதலில் இருவரின் காதலுக்கும் எதிர்ப்புத் தெரிவித்தார் சூர்யாவின் தந்தை சிவக்குமார்!
சூர்யா - ஜோதிகா தம்பதியினருக்கு தியா, தேவ் என இரு குழந்தைகள். சூர்யாவும் ஜோதிகாவும் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிடுவதாகப் பேசியிருக்கிறார்கள்.
சூர்யா 'அகரம்' எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதில் இந்த அறக்கட்டளை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.