News Tremor Desk
தந்தையின் வழியில்!
முதன்முதலாக 2004 நாடாளுமன்றத் தேர்தல் மூலம் நேரடி அரசியலுக்கு வந்தார் ராகுல் காந்தி. தன் தந்தை ராஜீவ் காந்தியின் தொகுதியான உத்திரப்பிரதேசத்தின் ‘அமேதி' தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார் ராகுல் காந்தி.
கடுமையான விமர்சனங்கள்!
2004 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருந்தும், ராஜீவ் காந்தி - சோனியா காந்தியின் மகனாக இருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார் ராகுல். கள நிலவரம் தெரியாதவர், அனுபவம் இல்லாதவர் என விமர்சிக்கப்பட்டார்.
பொதுச்செயலாளர் - இளைஞர் காங்கிரஸ் தலைவர்!
2007-ம் ஆண்டு இளைஞரணி காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ராகுல் காந்தி. அதோடு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றார்.
மீண்டும் காங்கிரஸ் ஆட்சி!
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் காங்கிரஸ் மீது வைக்கப்பட்டபோதும் இந்தியா முழுக்க தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி 2009-ல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று தொடர்ந்து ஆட்சியமைக்க சோனியா காந்தியோடு இணைந்து பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
கேலி, கிண்டல்கள்!
2014 பொதுத்தேர்தலின்போது ராகுல் காந்தியின் செல்வாக்கை அடியோடு அழித்தொழிக்கவேண்டும் என கோடிக்கணக்கான பணம் செலவுசெய்து சமூகவலைத்தளங்களில் கடுமையான பிரசாரம் மேற்கொண்டது பாஜக. பப்பு என கிண்டல் அடிக்கப்பட்ட ராகுல் காந்தி ‘’உளறுகிறார், அவருக்கு அரசியல் அறிவு இல்லை’’ என்றெல்லாம் அவர் பேசிய பேச்சுகளை வெட்டி, ஒட்டி பிரசாரம் மேற்கொண்டது பாஜக.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர்!
2014 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப்பிறகு சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக, 2017-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ஆனார் ராகுல் காந்தி.
தொடர் தோல்விகள்!
2019 தேர்தலை காங்கிரஸ் கட்சியின் தலைவராக நின்று சந்தித்தார் ராகுல் காந்தி. வெறும் 52 தொகுதிகளை மட்டுமே வென்று காங்கிரஸ் அவமானகரமானத் தோல்வியை சந்தித்தது. தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
மோடி Vs ராகுல் காந்தி!
மோடியை எதிர்கொள்ளும் அளவுக்கு ராகுல் காந்தி மக்களைக் கவர்ந்திழுக்கும் தலைவர் இல்லை என வைக்கப்பட்ட விமர்சனங்களை உடைத்து காங்கிரஸ் கூட்டணிக்கு 234 எம்பிக்களை கொண்டுவந்து சேர்த்திருக்கிறார் ராகுல் காந்தி!
பர்சனல் பக்கம்!
54 வயதை பூர்த்திசெய்துவிட்டபோதிலும் இன்னும் பேச்சிலராகவே தொடர்கிறார் ராகுல் காந்தி. சூப்பர் பைக் ஓட்டுவதிலும், கிரிக்கெட் போட்டிகளைக் காண்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். தற்போது ஸ்டாக் மார்க்கெட், ஷேர்களில் அதிக ஆர்வம் செலுத்திவருகிறார்.