T20 World Cup : மும்பையில் அலைகடலென திரண்ட ரசிகர்கள்... கிரிக்கெட் கொண்டாட்டத்தின் ஸ்பெஷல் ஆல்பம்!

News Tremor Desk

மாலை 4 மணிக்கு மும்பை வான்கடே மைதானம் ரசிகர்களுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களைக் காண காலையிலேயே மக்கள் கூட்டம் கூட ஆரம்பித்தனர்.

மழையையும் பொருட்படுத்தாமல் ஸ்டேடியத்துக்குள் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரசிகர்களும், வெளியே மெரீன் டிரைவில் 1 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களும் குவிந்தனர்!

ஸ்டேடியத்துக்குள் ''மும்பை ராஜா ரோஹித்'' என்கிற முழுக்கமும், ''சச்சின் சச்சின்'' என்கிற முழக்கமுமே அதிக அளவில் கேட்க முடிந்தது!

ரோஹித் ஷர்மா

ஆறு மணிக்குத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஊர்வலம் இரவு 7.30 மணிக்குத்தான் தொடங்கியது. வெறும் 1.5கிமீட்டர் பயணம் முடிய ஒன்றரை மணி நேரம் ஆனது. ஸ்டேடியத்துக்குள் மீண்டும் வீரர்கள் வந்தபோது நேரம் இரவு 9 மணி.

இப்படி ஒரு கூட்டத்தை என்னால் இனி ஒருபோதும் என் வாழ்க்கையில் பார்க்கமுடியாது எனக் குறிப்பிட்டார் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்!

ஜஸ்பிரித் பும்ரா

விராட் கோலி, ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், அக்ஸர் பட்டேல் ஆகியோர் நடனக்குழுவுடன் இணைந்து ஸ்டேடியத்தில் நடனமாடினர்.

ஹர்திக் பாண்டியா என்கிற பெயரை ரோஹித் சொல்லும்போது மும்பை ஸ்டேடியத்தில் பேரிரைச்சல் ஏற்பட்டது!

இந்திய கிரிக்கெட் அணி

''இறுதிப்போட்டியின்போது ஸ்டேடியத்தில் இருந்த மக்களைப்போலவே நாங்களும் ஆட்டம் கைநழுவிப்போனதாக நினைத்தோம். ஆனால், பும்ரா எங்களுக்கு மறுபடியும் நம்பிக்கையைத் தந்தார்'' - விராட் கோலி!

ஒரு வேலைநாளின் மாலையில் இவ்வளவு கூட்டம் மும்பையில் கூடுவதென்பது இதுதான் முதல்முறை என்கிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியினர்

மக்கள் கூட்டத்தைப் பார்த்த ரோஹித் ஷர்மா ''மும்பை எங்களை எப்போதுமே ஏமாற்றாது'' எனக்குறிப்பிட்டார்

ரோஹித் டிராவிட்

உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகையாக 125 கோடிக்கான செக் நேற்று வழங்கப்பட்டது!

விராட் கோலி