Jeeva
1. சிறகடிக்க ஆசை - 9.52 TRP
விஜய் டிவியில் 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. முத்து - மீனாவின் கதைக்கு பேராதரவு பெருகிவருவதால் கடந்த வாரம் 9.25 TRP பெற்றிருந்த 'சிறகடிக்க ஆசை' இந்த வாரம் 9.52 என முன்னேறியிருக்கிறது.
2. சிங்கப்பெண்ணே - 8.26 TRP
'எதிர் நீச்சல்' இடத்துக்கு முன்னேறிவந்திருக்கும் 'சிங்கப்பெண்ணே' இன்னும் 9 ரேட்டிங்கைத் தொடவில்லை. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகிறது.
3. பாக்கியலட்சுமி - 8.12 TRP
ராதிகா Vs கோபி கதையாக நகர்ந்துகொண்டிருக்கும் 'பாக்கியலட்சுமி' தொடர்ந்து 8 ரேட்டிங்கோடு இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தைப் பிடித்துவிடுகிறது.
4. கயல் - 8.03 TRP
முன்னர் நம்பர் 1 சீரியலாக இருந்த ‘கயல்' கல்யாணம், கலாட்டா என அதிரடி கதைக்களத்துடன் பயணிப்பதால் மீண்டும் 8 ரேட்டிங்கைப் பெற்றிருக்கிறது.
5. பாண்டியன் ஸ்டோர்ஸ் - 7.62 TRP
‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்கிற 'பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2' இப்போது 7.62 ரேட்டிங் பெற்று மீண்டும் செல்வாக்குமிக்க சீரியலாக மாறிவருகிறது.
6. மருமகள் - 6.89 TRP
விஜய் டிவியில் நடித்துக்கொண்டிருந்த கேப்ரியெல்லாவை மருமகள் சீரியலில் களமிறக்கியது சன் டிவி. ஆனால், தொடர்ந்து 'மருமகள்' சீரியலின் ரேட்டிங் குறைகிறது.
7. வானத்தைப்போல - 6.77 TRP
இன்னும் உயிரைப்பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறது அண்ணன் தங்கை கதையான ‘வானத்தைப்போல’. கடந்த வாரம் 6.96 ரேட்டிங் பெற்றிருந்த வானத்தைப்போல இந்த வாரம் குறைந்திருக்கிறது.
8. ஆஹா கல்யாணம் - 6.67 TRP
விஜய் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'ஆஹா கல்யாணம்' 6.67 ரேட்டிங் பெற்று எட்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
9. சுந்தரி - 6.24 TRP
கலெக்டர் கதையான சன் டிவியின் 'சுந்தரி' கடந்த வாரத்தைக் காட்டிலும் சற்றே குறைந்து 6.24 ரேட்டிங் பெற்றிருக்கிறது.
10. சின்ன மருமகள் 5.96 TRP
விஜய் டிவியின் 'சின்ன மருமகள்'க்கு தொடர்ந்து டாப் டென்னில் இடம் கிடைத்துவருகிறது. இந்த வாரமும் 5.96 ரேட்டிங்கோடு கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது.