Puviyarasan Perumal
1.சிறகடிக்க ஆசை - 9.34 TRP
விகடன் தயாரிக்க விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’தான் தமிழின் நம்பர் 1 சீரியல். கடந்த வாரம் 8.91 டிஆர்பி பெற்றிருந்த சிறகடிக்க ஆசை இந்தவாரம் 9.34 டிஆர்பி பெற்று தனது முதல் இடத்தை பலப்படுத்தியிருக்கிறது.
2. சிங்கப்பெண்ணே - 8.33 TRP
கடந்தவாரம் வரை 8 மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சிங்கப்பெண்ணே இப்போது 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இது இதற்கு முன் இதே நேரத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த ‘எதிர்நீச்சல்’ சீரியலைக் காட்டிலும் அதிகமாக 8.33 டிவி ரேட்டிங் பாயின்ட் பெற்றிருக்கிறது.
3. பாக்கியலட்சுமி - 8.15 TRP
கடந்த வாரம் ஐந்தாவது இடத்தில் இருந்த பாக்கியலட்சுமி இந்தவாரம் முன்னேறி மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கிறது. மீண்டும் 8 ரேட்டிங்கைத் தொட்டிருக்கிறது.
4. கயல் - 7.58 TRP
சைத்ரா ரெட்டி நடித்துவரும் ‘கயல்' சீரியல் இந்தவாரம் சற்றே பின்தங்கி நான்காவது இடத்துக்கு இறங்கியிருக்கிறது. 7.58 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றிருக்கிறது.
5. பாண்டியன் ஸ்டோர்ஸ் - 7.56 TRP
சன் டிவியின் கயலைவிட சற்றே குறைவாக 7.56 புள்ளிகள் பெற்றிருக்கிறது விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. ‘தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’ எனத் தந்தையின் கதையாக ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியல் கடந்த வாரம் ஆறாவது இடத்தில் இருந்தது.
6. மருமகள் - 7.44 TRP
‘சிங்கப்பெண்ணே’ ஒளிபரப்பாகிவந்த 8 மணி ஸ்லாட்டில் ஒளிபரப்பாகிவரும் கேப்ரியெல்லா நடிக்கும் புதிய சீரியலான ‘மருமகள்' முதல் வார ரேட்டிங்காக 7.44 TRP பெற்றிருக்கிறது. முதல் வாரத்துக்கு இது நல்ல டிஆர்பி-தான் என்றாலும் இந்த நேரத்தில் ‘சிங்கப்பெண்ணே’ 8.44 ரேட்டிங் பெற்றிருந்தது.
7. வானத்தைப்போல - 7.04 TRP
1000 எபிசோடுகளைக் கடந்துவிட்ட ‘வானத்தைப் போல' சீரியல் இந்தவாரம் 7.04 ரேட்டிங் பெற்று கடந்தவாரம் இருந்த அதே ஏழாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.
8. ஆஹா கல்யாணம் - 6.85 TRP
கடந்த வாரம் ஒன்பதாவது இடத்தில் இருந்த விஜய் டிவியின் ‘ஆஹா கல்யாணம்’ இந்தவாரம் 6.85 ரேட்டிங்கோடு எட்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.
9. மல்லி - 6.82 TRP
சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மல்லி கடந்த வாரம் எட்டாவது இடத்தில் 6.46 என்கிற ரேட்டிங்கோடு இருந்தது. இந்த வாரம் 6.82 என டிஆர்பி கூடினாலும் இந்த வாரம் டாப் டென்னில் கீழே இறங்கியிருகிறது.
10. சின்ன மருமகள் - 6.62
விஜய் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘சின்ன மருமகள்’ 6.62 ரேட்டிங்கோடு பத்தாவது இடத்தைப்பிடித்திருக்கிறது. கடந்த சில வருடங்களாக டாப் 10 லிஸ்ட்டில் இருந்த ‘சுந்தரி' முதல்முறையாக டாப் டென்னைவிட்டு வெளியேபோயிருக்கிறது.