Kavitha
1. சிறகடிக்க ஆசை - 11.27 TRP
கடந்த வாரம் 10.32 ரேட்டிங் பெற்ற சிறகடிக்க ஆசை இந்த வாரம் இன்னும் உயர சிறகடித்திருக்கிறது.பாக்கியலட்சுமி - 9.91
2. பாக்கியலட்சுமி - 9.91 TRP
கடந்த வாரமும் இரண்டாம் இடம்தான். ஆனால், 8.69 ரேட்டிங்கில் இருந்து 9.91 ரேட்டிங் என முன்னேற்றம்.
3. பாண்டியன் ஸ்டோர்ஸ் - 8.29 TRP
கடந்த வாரமும் 8.1 ரேட்டிங்கோடு மூன்றாம் இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்தவாரம் சற்று முன்னேறியிருக்கிறது.
4. கயல் - 7.59 TRP
கடந்தவாரம் ஐந்தாவது இடத்தில் இருந்த கயல் இந்தவாரம் சிங்கப்பெண்ணேவை முந்தி நான்காம் இடம்பிடித்திருக்கிறது.
5.சிங்கப்பெண்ணே - 7.24 TRP
சிறகடிக்க ஆசைக்குப் பெரும்போட்டியை ஏற்படுத்திக்கொண்டிருந்த சிங்கப்பெண்ணே தற்போது ஐந்தாவது இடத்துக்குப் பின்தங்கியிருக்கிறது.
6. மருமகள் - 6.98 TRP
சன் டிவியின் மருமகள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிவருகிறது. கிட்டத்தட்ட 7 டிஆர்பி என்கிற ரேட்டிங்கைத்தொட்டிருக்கிறது.
7. ஆஹா கல்யாணம் - 6.92 TRP
விஜய் டிவியில் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் இந்த வாரம் ஏழாம் இடம் பிடித்திருக்கிறது.
8. சின்ன மருமகள் - 6.72 TRP
விஜய் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் டிஆர்பி-யில் சற்றே பின்தங்கி எட்டாம் இடம்பிடித்திருக்கிறது.
9. மல்லி - 6.57 TRP
சன் டிவியின் இரவு 9.30 மணி சீரியலான மல்லி விஜய் டிவியின் சின்ன மருமகளைவிட குறைந்து ஒன்பதாம் இடத்தில் இருக்கிறது.
10. சுந்தரி - 6.51 TRP
கடந்த வாரம் டாப் டென்னுக்கும் வெளியே போன சுந்தரி இந்த வாரம் மீண்டும் டாப் 10-க்குள் நுழைந்திருக்கிறது.