Puviyarasan Perumal
சிறகடிக்க ஆசை - 9.25 TRP
கடந்த வாரத்தைக்காட்டிலும் இந்த வார டிஆர்பி குறைந்திருந்தாலும் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது சிறகடிக்க ஆசை.
2. பாக்கியலட்சுமி - 8.10 TRP
ராதிகாவின் கர்ப்பம் கலைப்பு நிகழ்வுகள் ஒளிபரப்பான வாரம் என்பதால் தொடர்ந்து 8.1 என்கிற டிஆர்பியை தக்கவைத்திருக்கிறது பாக்கியலட்சுமி
3. சிங்கப்பெண்ணே - 7.86 TRP
9 மணிக்கு ஒளிபரப்பாக ஆரம்பித்தப்பின்னர் சின்ன சறுக்கலைக் கண்டுவருகிறது சிங்கப்பெண்ணே
4. கயல் - 7.86 TRP
‘சிங்கப்பெண்ணே’ பெற்ற அதே டிஆர்பியை பெற்று 7.30 ஸ்லாட்டில் கடும் போட்டியை ஏற்படுத்திகொண்டிருக்கிறது ‘கயல்'.
5. பாண்டியன் ஸ்டோர்ட்ஸ் 7.47 TRP
‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என தந்தைக்கும் மகன்களுக்குமான கதையாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
6. மருமகள் - 6.96 TRP
சன் டிவியின் புதிய சீரியலான ‘மருமகள்’ கடந்தவாரம் 7.44 என்கிற ரேட்டிங்கில் இருந்து இந்த வாரம் குறைந்துவிட்டது.
7. வானத்தைப்போல - 6.96 TRP
அண்ணன் - தங்கை கதையான வானத்தைப்போல 1000 எபிசோடுகளைக் கடந்தும் முதல் 10 இடங்களுக்குள் ஓர் இடத்தைப் பிடித்துவிடுகிறது.
8. மல்லி - 6.51 TRP
இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மல்லி 6.51 டிஆர்பி பெற்று எட்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.
9. சுந்தரி - 6.34 TRP
கடந்த வார ரேட்டிங்கில் டாப் 10-ஐ விட்டு வெளியேபோன சுந்தரி மீண்டும் 6.34 ரேட்டிங்குடன் டாப் டென்னுக்குள் வந்திருக்கிறது.
10. ஆஹா கல்யாணம் - 6.15 TRP
விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியல் கடைசி இடமான பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.