உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே
உங்கள் முயற்சி மூலம் இன்றைய நாளை வளமாக்கலாம். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம், மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையை திறம்படச் செய்து முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் ஒத்துழைப்பும் பாராட்டையும் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான சூழல் காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
இன்றைய நாள் மிதமான பலன்களைத் தரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். கடினமான வேலையைக் கூட எளிதாக முடிப்பீர்கள். தொழில்கள் வழக்கம் போல் இருக்கும். குடும்பத்தில் திருப்திகரமான மனநிலை இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம்.
இன்று மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். நிதானத்துடன் செயல்பட்டால் சாதகமானதாக அமையும். வேலை சூழல் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலையில் தடுமாற்றங்கள் ஏற்படும். கவனச் சிதறலால் தவறுகள் ஏற்படும். குடும்பத்தில் அதிருப்தியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும்.
ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்க வேண்டும். வேலை சூழல் சற்று சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். குடும்பத்தில் புரிந்துணர்வு நிலவும். கணவன் - மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
திருப்திகரமான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம், மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையை நிதானத்துடன் செய்யுங்கள். சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சாதகமான பலனைப் பெறலாம். குடும்பத்தில் புரிந்துணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பணத்தை சேமிப்பீர்கள்.
சாதகமான நாளாக இருக்கும். நண்பர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கலாம். மற்றவர்களுடன் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருந்த மன வருத்தம் நீங்கும். நிதி நிலை சற்று சாதகமாக இருக்கும். செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். நேர்மறையான அணுகுமுறை வெற்றியை அளிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். சிலருக்கு வீண் அலைச்சலுடன் உடல் அசதியும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். வாழ்க்கைத் துணைவர் கேட்பதை வாங்கிக் கொடுப்பீர்கள். பணப் புழக்கம் குறைவாக இருக்கும். செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
சுமாரான நாளாக இருக்கும். உற்சாகத்துடன் செயல்பட்டால் சாதிக்கலாம். வேலை பளு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் புரிந்துணர்வு குறையலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்குச் சாதகமாக இருக்கும். பண வரவுக்கும் செலவுக்கும் வாய்ப்பு உள்ளது.
சுமுகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக நேர்மறை எண்ணங்களுடன் செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். இருப்பினும் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பால் விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிய சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும்.
ஏற்ற இறக்கம் இன்றி இன்றைய நாள் சீராக இருக்கும். மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலையில் திருப்திகரமான சூழல் காணப்படும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை வரலாம் என்பதால் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படலாம். கனிவுடன் பேசுவது, பழகுவதன் மூலம் பிரச்னை ஏற்படாமல் தடுக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பணத் தேவை அதிகரிக்கும்.
குழப்பங்கள் மிகுந்த நாளாக இருக்கலாம். எதையும் திட்டமிட்டு செயல்படுத்துங்கள். பொழுதுபோக்கில் ஈடுபடுவது, ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மனம் அமைதி அடையும். வேலைப் பளு அதிகரிக்கும். மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி பாதிக்கப்படலாம். விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணப் பற்றாக்குறை ஏற்படலாம். செலவுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.