உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
உங்களின் நேர்மறையான அணுகுமுறை மூலம் இன்றைய நாள் சாதகமான நாளாக மாறும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். வாழ்க்கைத் துணைவருடன் சிறந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
மந்தமான நாளாக இருக்கும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் சாதகமான பலனை பெறலாம். வேலைப் பளு அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டால் விரைவாகச் செய்து முடித்து சாதிக்கலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் எழலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
சாதகமான நாளாக இருக்காது. மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலையில் பிரச்னைகள் வரலாம். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே பேசும் போது வார்த்தைகளில் கூடுதல் கவனம் தேவை. நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும். கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.
அமைதி குறைவான நாளாக இருக்கும். மனதில் கவலை, குழப்பம் அதிகரிக்கும். வேலையில் சவாலான சூழல் இருக்கும். வேலையை முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
முன்னேற்றமான நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் வெற்றிகரமாக இருக்கும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடித்து சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
மந்தமான நாளாக இருக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டால் இன்றைய நாளை சாதகமானதாக மாற்றலாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவை பராமரிப்பது நல்லது. குடும்பத்தில் ஈகோ பிரச்னை ஏற்படலாம். விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம். செலவுகள் அதிகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
வாய்ப்பு குறைவான நாளாக இருக்கும். கடின முயற்சிக்கு உரிய பலன் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவுதான். வேலையில் நிலவரம் சரியாக இருக்காது. தடுமாற்றம், தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் தனித்திருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். இதனால் வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.
ஓரளவுக்கு சுமுகமான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தரும். வேலையில் கவனக் குறைவு ஏற்படலாம். இதனால் உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். பிள்ளைகளால் மனக் கவலை ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வேலையில் வளர்ச்சி, முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
வெற்றிகரமான நாளாக இருக்கும். கடின உழைப்பு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை விஷயம் காரணமாக பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் நேர்மையாக நடந்துகொள்வீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
சவாலான நாளாக இருக்கும். ஆன்மிகம், பொழுதுபோக்கில் ஈடுபடுவது நமக்கு அமைதியைத் தரும். வேலையில் சில போராட்டங்களைச் சந்திக்க நேரிடலாம். உடன் பணி புரிபவர்களுடன் நல்லிணக்கத்தைப் பராமரிப்பது நல்லது. குடும்பத்தில் பதற்றமான உணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே உறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவுகள் ஏற்படலாம்.
சிறப்பான நாளாக இருக்கும். நண்பர்கள் வழியில் சாதகமான பலனைப் பெற வாய்ப்பு உள்ளது. வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே உறவு வலுப்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.