12-08-2024 இன்றைய ராசி பலன்!
12-08-2024 இன்றைய ராசி பலன்!

12-08-2024 இன்றைய ராசி பலன்!

மிதுனத்துக்கு மந்தமான நாளாக இருக்கும்!

உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!

1. மேஷம்

மேஷம்
மேஷம்

நேர்மறையான எண்ணம் காரணமாக இன்றைய நாளை சாதகமான நாளாக மாற்றுவீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

2. ரிஷபம்

ரிஷபம்
ரிஷபம்

சாதகமான நாளாக இருக்காது. முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். மற்றவர்களுடன் உரையாடும் போது வார்த்தைகளில் கூடுதல் கவனம் தேவை. வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை வரலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றலாம். வாழ்க்கைத் துணைவருடன் வீண் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது. பணப் பற்றாக்குறை ஏற்படலாம். கடன் வாங்கி சமாளிக்க வேண்டி வரலாம்.

3. மிதுனம்

மிதுனம்
மிதுனம்

மந்தமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது சாதகமான சூழலை உருவாக்க உதவும். வேலையில் தடைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் கவலையை அளிக்கும்.

4. கடகம்

கடகம்
கடகம்

மனதில் குழப்பம் காணப்படும். இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பிரச்னையை தவிர்க்கலாம். குடும்பத்தில் அன்பான சூழல் இருக்காது. வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. கடன் வாங்காமல் சமாளிக்க முயற்சி செய்வது நல்லது.

5. சிம்மம்

சிம்மம்
சிம்மம்

அனுகூலம் உண்டாகும் நாளாக இருக்கும். தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். விரைவாக வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் உண்டாகும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் வரும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

6. கன்னி

கன்னி
கன்னி

நம்பிக்கை அளிக்கும் நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு மிகவும் உகந்த நாள். வேலையை எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த ஈகோ பிரச்னை நீங்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். நீண்ட நாள் நிலுவையிலிருந்த கடன் வசூல் ஆகும்.

7. துலாம்

துலாம்
துலாம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். அதீத மகிழ்ச்சி, உற்சாகம் காரணமாக தவறுகள் ஏற்படலாம். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சிறுசிறு குழப்பம் ஏற்படலாம். எனவே, சிந்தித்துச் செயல்படுவது நல்லிணக்கத்தைக் காக்க உதவும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். தேவைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.

8. விருச்சிகம்

விருச்சிகம்
விருச்சிகம்

ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்குப் புத்துணர்வை அளிக்கும். வேலை சூழல் சுறுசுறுப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி குறையலாம். வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி நிலை சுமாராக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் கூடுதல் கவனம் தேவை.

9. தனுசு

தனுசு
தனுசு

மகிழ்ச்சி குறைவான நாளாக இருக்கும். ஒன்றுக்கு பல முறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் ஆர்வக் குறைவு ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் உறவினர்கள் வழியில் செலவுகள் ஏற்படலாம்.

10. மகரம்

மகரம்
மகரம்

சாதகமான நாளாக இருக்கும். கடின உழைப்பு மூலம் வெற்றிகளைக் காண்பீர்கள். மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். லாபமான நாளாக அமையும்.

11. கும்பம்

கும்பம்
கும்பம்

வாய்ப்பு மிகுந்த நாளாக இருக்கும். நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி காணலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், பழைய கடன்கள் வகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

12. மீனம்

மீனம்
மீனம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. நண்பர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். வேலை சூழல் கடினமாக இருக்கும். திறமையை வெளிப்படுத்தி நிலைமையைச் சமாளிக்க முயற்சி செய்ய வேண்டும். குடும்பத்தில் அன்பு குறையலாம். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்வீர்கள். சகோதர வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பண வரவுக்கு ஏற்ப செலவு இருக்கும். பண இழப்புக்கும் வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com