உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலையில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். விரைவாக வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பாக நடந்துகொள்வீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
முன்னேற்றமான நாளாக இருக்கும். முயற்சி செய்தால் இலக்கை அடைவீர்கள். வேலை சூழல் முன்னேற்றமாக இருக்கும்.உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அன்பை வெளிப்படுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் சாதகமான பலனைப் பெறலாம். வேலையில் சற்று கடினமான சூழல் இருக்கலாம். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் பொறுமையாக நடந்துகொள்வது முக்கியம். அப்படி செய்வதன் மூலம் கணவன் மனைவி நல்லிணக்கம் உண்டாகும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். கூடுதல் செலவுகள் ஏற்படலாம்.
சவால் நிறைந்த நாளாக இருக்கும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு செயல்பட வேண்டும். வேலையில் திருப்திகரமான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நல்லுறவைப் பராமரிக்க வேண்டும். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். பணப் புழக்கம் குறைவாக இருக்கும். வரவை விட செலவு அதிகமாக இருக்கும்.
ஓரளவுக்கு சுமுகமான நாளாக இருக்கும். முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி சாதிக்க முயற்சி செய்வீர்கள். வேலை சூழல் சற்று கடினமாக இருக்கலாம். ஆர்வக் குறைவு ஏற்பட்டு தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளை கொட்டாமல் இருப்பது நல்லது. விட்டுக்கொடுத்து நிதானமாகப் பேசுவதன் மூலம் நல்ல சூழலை உருவாக்கலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டி வரலாம். வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் தவறுகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் சில பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். பிள்ளைகள் வழியில் பிரச்னைகள் வரலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.
சற்று மந்தமான நாளாக இருக்கும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கலாம். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஈகோ பிரச்னை தோன்றலாம். இதனால் கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவுகள் ஏற்படலாம்.
அமைதி குறைவான நாளாக இருக்கலாம். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியை தரும். வேலை சூழல் பதற்றம் நிறைந்ததாக இருக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னையில் சிக்க நேரிடலாம். குடும்பத்தில் வாக்குவாதம் எழலாம். விட்டுக்கொடுத்து நடப்பதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். பணப் புழக்கம் குறைவாக இருக்கும். செலவுகள் விஷயத்தில் கவனம் தேவை.
ஓரளவுக்கு நன்மையான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி காணலாம். வேலைப் பளு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி, அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் பணத்தை செலவு செய்வீர்கள்.
சாதகமான நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். இலக்குகளை அடைவீர்கள். வேலையில் முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே பரஸ்பர அன்பு அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சியைத் தரும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
துடிப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் ஓரளவுக்கு சாதகமான சூழல் இருக்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நிலுவையில் வைத்திருந்த வேலையையும் விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் அமைதியை தக்க வைக்கலாம். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதாயம் கிடைக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவுகளைத் தவிர்க்க முயல வேண்டும்.
எதிர்பார்த்த பலன்கள் கிடைக்க வாய்ப்பு குறைவுதான். எல்லா விஷயங்களிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வேலையில் சவாலான சூழல் இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சூழலை சமாளிக்கலாம். குடும்பத்தில் மந்தமான சூழல் இருக்கும். வாழ்க்கைத் துணைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். அது மனக் கவலையை ஏற்படுத்தும்.