உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
அனுகூலமான நாளாக இருக்கும். மகிழ்ச்சியான, சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். குடும்பத்தில் புரிந்துணர்வு நிலவும். கணவன் - மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
உற்சாகமான நாளாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். கடினமான வேலையைக் கூட எளிதாக முடிப்பீர்கள். தொழில்கள் வழக்கம் போல் இருக்கும். குடும்பத்தில் திருப்திகரமான மனநிலை இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம்.
காலைப் பொழுதில் அலைச்சல்கள் இருக்கலாம். பிற்பகலுக்கு மேல், சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். சிலருக்கு வீண் அலைச்சலுடன் உடல் அசதியும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். வாழ்க்கைத் துணைவர் கேட்பதை வாங்கிக் கொடுப்பீர்கள். பணப் புழக்கம் குறைவாக இருக்கும். செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலையில் தடுமாற்றங்கள் ஏற்படும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் போக்கைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சங்கடம் நேரிடலாம். குடும்பத்தில் அதிருப்தியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும்.
வழக்கமான நாளாக இருக்கும். திறமையாக செயல்படுவதன் மூலம் வெற்றிகளைக் காண்பீர்கள். வேலையில் நல்ல பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரியின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருக்கும். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். உறவினர்களுடனும் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
எதிர்மறை எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். இதை ஒதுக்கிவைத்துவிட்டு சுறுசுறுப்புடன் செயல்பட்டால் வெற்றி காணலாம். வேலையில் முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் நல்லுறவைப் பராமரிக்க இயல்பாக நடந்துகொள்வது நல்லது. நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் கவலையை அளிக்கும்.
தடுமாற்றமான நாளாக இருக்கும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். இதனால் தேவையற்ற கவலைகள் ஏற்படும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் திணறும் சூழல் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ நிதானத்துடன் இருப்பது நல்லது. திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள்
காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாளாக இருக்கும். தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். அகந்தைப் போக்கு காரணமாக வாழ்க்கைத் துணைவருடன் பிரச்னை ஏற்படலாம். எனவே, கவனத்துடன் செயல்படுவது நல்லது. நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. பணப் பற்றாக்குறை ஏற்படலாம்.
சிறப்பான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களால் சாதகமான பலனைப் பெறுவீர்கள். வேலையில் வெற்றி பெறுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறுவீர்கள். மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் சாதகமான போக்கைக் காண்பீர்கள். குடும்பத்தில் அனுசரணையான போக்கு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். லாபம் காண்பீர்கள்.
ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். அதீத உற்சாகம் காரணமாக தவறுகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடன் பணி புரிபவர்களுடன் நல்லுறவு காணப்படும். வேலையை விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
மன உறுதியுடன் செயல்படுவீர்கள். சில அசௌகரியங்களைச் சந்திக்க வேண்டி வரலாம். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் சாதகமான பலனைப் பெறலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணைவரால் மகிழ்ச்சி உண்டாகும். பணப் புழக்கம் குறைந்து காணப்படும். உறவினர்களால் திடீர் செலவுகள் உண்டாகலாம்.