உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
சற்று கடினமான நாளாக இருக்கும். ஆன்மிகம், பொழுதுபோக்கில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தரும். வேலைப் பளு அதிகரிக்கும். கவனச் சிதறல் ஏற்பட்டு தவறுகள் நிகழலாம். குடும்பத்தில் புரிந்துணர்வு குறையும். கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். வீண் செலவுகள் கவலையை அதிகரிக்கச் செய்யும்.
அனுகூலமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் உற்சாகமாக இருக்கும். கடினமான வேலையையும் விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. நிதி நிலை மகிழ்ச்சியை அளிக்கும்.
அமைதியான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் நட்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
தடைகள் சிலவற்றைச் சந்திக்க நேரிடலாம். சற்று கடினமான நாளாக இருக்கும். வேலைப் பளு கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னைகள் வரலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். வேலையில் சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டி வரும். திட்டமிட்டு செயல்பட்டால் நிலைமையை சமாளிக்கலாம். குடும்பத்தில் மோதல் போக்கு இருக்கும். நிதானத்துடன் செயல்பட்டால் அமைதியைத் தக்க வைக்கலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
சுமுகமான நாளாக இருக்கும். திருப்தியான மனநிலை இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். சிறப்பான முறையில் செயல்பட்டு உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.
சற்று பதற்றமான மனநிலை உள்ள நாளாக இருக்கும். மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். வேலையில் சவால்களை சந்திக்க நேரிடலாம். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புடன் வேலையை விரைவாக முடிக்கலாம். குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் இருக்கும். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறு சற்று கடினமாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். அது உங்களுக்குக் கவலையை அளிக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் குறையலாம். பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகள் தோன்றும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறையலாம். பணப் புழக்கம் சாதகமாக இருக்காது. மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.
சுமாரான நாளாக இருக்கும். பொறுப்புக்கள் அதிகரிக்கும். மனதில் குழப்பம் தோற்றும். வேலைப் பளு அதிகரிக்கும். எடுத்த வேலையை முடிக்க முடியாத அளவுக்கு தொந்தரவுகளும் வரும். குடும்பத்தில் அமைதி இருக்காது. கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் எழும். நிதி நிலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். திட்டமிட்டு செலவு செய்வது நல்லது.
அனுகூலமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் வாய்ப்பு மிகுந்ததாக இருக்கும். புதிய வாய்ப்புகள், பொறுப்புக்கள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சுறுசுறுப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையைச் சுறுசுறுப்பாக விரைவாகச் செய்து முடிப்பீர்கள். நிலுவையிலிருந்த வேலையையும் முடித்துப் பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். கணவன் மனைவி இடையே பிணைப்பு வலுப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பணத்தைத் திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.
மந்தமான நாளாக இருக்கும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் வெற்றி பெறலாம். வேலை சூழல் விரும்பும் வகையில் இருக்காது. வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு கவனச் சிதறலை ஏற்படுத்தக் கூடும். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறைவு ஏற்படலாம். நிதி நிலை கவலை அளிக்கும் வகையில் இருக்கும். பணப் பற்றாக்குறை கவலையை அதிகரிக்கச் செய்யும்.