உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்பட வேண்டிய நாள் இன்று. ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியை தரும். வேலை காரணமாக அலைச்சல், வெளியூர் பயணம் செய்ய வேண்டி வரலாம். கூடுதல் பணிகள் உங்கள் மீது சுமத்தப்படலாம். குடும்பத்தில் அகந்தை போக்கு காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவுகள் ஏற்படலாம்.
சாதகமான நாளாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். முன்னேற்றமான பலன்களைக் காண்பீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவுகள், முதலீடுகள் செய்வீர்கள்.
முன்னேற்றமான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். வேலையில் திறமையை வெளிப்படுத்தி பாராட்டைப் பெறுவீர்கள். வேலை சூழல் உற்சாகம் அளிக்கும் வகையில் இருக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். பண வரவு மகிழ்ச்சியை அளிக்கும்.
மந்தமான நாளாக இருக்கும். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்வது இன்றைய நாள் சிறப்பானதாக அமைய உதவும். வேலை சூழல் சற்று கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் எழலாம். செலவுகள் அதிகரிக்கும். பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
நிதானத்துடன், தவறுகளை திருத்திக் கொள்ளும் மனநிலையுடன் இருப்பது நல்லது. இப்படி செய்வதன் மூலம் இழப்புக்களைத் தவிர்க்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் ஈகோ பிரச்னை எழலாம். இதைத் தவிர்த்து வாழ்க்கைத் துணைவருடன் சகஜமாக இருப்பது நல்லது. செலவுகள் அதிகரிக்கும். பணத்தை சேமிக்க முடியாத சூழல் ஏற்படும்.
துடிப்பான நாளாக இருக்கும். மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை சூழல் திருப்திகரமாக இரக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நல்லுறவு மேம்படும். குடும்பத்தில் அன்பை வெளிப்படுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
சற்று சோதனையான நாளாக இருக்கும். பிரச்னைகளை கண்டு கலங்காமல் கவலைப்படாமல் நிதானத்துடன் இருப்பது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். கடின உழைப்பை வெளிப்படுத்தினால் வேலையை சாதிக்கலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். நட்புறவுடன் நடந்து கொள்வது பிரச்னையைத் தவிர்க்க உதவும். செலவுகள் அதிகமாக இருக்கும். கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.
ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியை தர உதவும். வேலை சூழல் சுமுகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உறவு வலுப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலையில் ஏற்ற இறக்கம் இருக்கலாம். திட்டமிட்டு செலவு செய்வது நல்லது.
சாதகமான நாளாக இருக்காது. முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் ஆர்வக் குறைவு ஏற்பட்டு தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். குடும்ப விழாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் தவிர்க்கலாம்... அல்லது முடிந்தவரை மற்றவர்களுடன் உரையாடும் போது கவனத்துடன் இருப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கலாம்.
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது கவனம் தேவை. வேலையை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பும் உயர் அதிகாரியின் பாராட்டையும் பெற வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் புரிந்துணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை மனவுறுதியுடன் முடிவெடுத்துச் செயல்படுவீர்கள். வேலை சூழல் முன்னேற்றமாக இருக்கும். சவால்களை சமாளித்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் நட்புறவான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
சற்று உற்சாகம் குறைவான நாளாக இருக்கும். சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டி வரும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். உடன் பணி புரிபவர்களுடன் அனுசரித்து நடப்பது நல்லது. குடும்பத்தில் அதீத உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும். இதன் மூலம் குடும்பத்தில் அமைதியை தக்க வைக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகளை சமாளிக்க கஷ்டமாக இருக்கும்.