உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
சாதகமான நாளாக இருக்காது. மற்றவர்களுடன் மோதல் ஏற்படலாம் என்பதால் உரையாடும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது பலன் தரும். வேலைப் பளு அதிகரிக்கும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் எழலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது.
வெற்றிகரமான நாளாக இருக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். தொழிலில் லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவரால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
நம்பிக்கையான நாளாக இருக்கும். நண்பர்கள் வழியில் ஆதாயம் அடைவீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே உறவு மேம்படும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.
சவாலான நாளாக இருக்கும். நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் பிரச்னைகளை சமாளித்து சாதகமான பலனைப் பெறலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். கடினமாக உழைத்தாலும் அதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்காது. குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். பண இழப்பைத் தவிர்க்கக் கவனத்துடன் செயல்படுவது அவசியம்.
பதற்றமான சூழல் காணப்படும். பொழுதுபோக்கு, ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி பெறலாம். வேலையில் தடுமாற்றம் இருக்கலாம். திட்டமிட்ட செயல்படுவதன் மூலம் வீண் தாமதம் போன்றவற்றைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அகந்தைப் போக்கைக் கைவிட வேண்டும். இப்படி செய்தால் வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கம் கெடுவதைத் தடுக்கலாம். பண வரவுக்கு சிறிது வாய்ப்புள்ளது. செலவு அதை விட அதிகமாக இருக்கலாம்.
சாதகமான நாளாக இருக்கும். முழு ஆற்றலுடன் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். குறித்த நேரத்தில் வேலையை மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
நம்பிக்கையின்மை, பாதுகாப்பின்மை போன்ற எதிர்மறை எண்ணங்கள் தோற்றும். இதைக் கட்டுப்படுத்தி நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். வேலை சூழல் தடைகள் நிறைந்து காணப்படும். நிதானத்துடன் திட்டமிட்டு செயல்பட்டால் சமாளிக்கலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு காணப்படும். அமைதியாக இருப்பது பிரச்னையை தடுக்க உதவும். நிதி நிலை சாதகமாக இருக்காது.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதை அமைதியாக வைத்திருக்க ஆன்மிகம், பொழுது போக்கு போன்றவற்றில் ஈடுபடலாம். வேலைப் பளு அதிகரிக்கும். இதனால் வேலையில் தடுமாற்றம், தவறுகள், தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் நட்புறவு குறையலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நிதி நிலை சாதகமாக இருக்காது. பணத் தேவை அதிகரிக்கும்.
மனதில் பதற்றம், பயம் போன்றவை அதிகரிக்கும். இதை சமாளிக்க முயல்வது நல்லது. வேலை, தொழிலில் ஆர்வம் குறையும். இதனால் வீண் தாமதம் ஏற்படலாம். திட்டமிட்டு, நிதானத்துடன் செயல்படும் போது சாதிக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
ஸ்திரமான நாளாக இருக்கும். மன உறுதி காரணமாக வெற்றி பெறுவீர்கள். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நல்லுறவு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவரால் சாதகமான பலன் கிடைக்கும். பண வரவு மகிழ்ச்சியை அளிக்கும். குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.
இன்றைய நாள் சிறிது ஏமாற்றத்தைத் தரலாம். சிலருக்கு மாலைக்குப் பிறகு சாதகமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. திட்டமிட்டு ஒன்றுக்குப் பல முறை யோசித்து செயல்படுங்கள். வேலைப் பளு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் முடிக்க முடியாத சூழல் ஏற்படும். குடும்பத்தில் புரிந்துணர்வு குறையலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வரவை மீறி செலவு அதிகரிக்கும்.